அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நாட்டை காக்க மீண்டும் மோடி வேண்டும்! இ.பி.எஸ்.,

சென்னை : ''நாட்டை பாதுகாக்க, திறமையான, வலிமையான பிரதமர் தேவை. அத்தனை தகுதியும் பெற்றவர், நரேந்திர மோடி. அவர், மீண்டும் பிரதமராக ஆதரவு அளியுங்கள்,'' என, சென்னையில், நேற்று முதல்வர், இ.பி.எஸ்., பிரசாரம் செய்தார்.

நாட்டை காக்க,மீண்டும்,மோடி,இ.பி.எஸ்.,


சென்னையில், அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, ராயபுரம், திருவொற்றியூர், வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பல இடங்களில், நேற்று முதல்வர், பிரசாரம் செய்தார்.

அப்போது, அவர் பேசியதாவது: தற்போதைய தேர்தல், நாட்டை பாதுகாக்கக்கூடிய, நல்ல பிரதமரை தேர்வு செய்ய நடக்கும் தேர்தல். மக்களின் பாதுகாப்பு, பிரதமரை சார்ந்துள்ளது. பிரதமராக வருபவர், நாட்டை பாதுகாக்க கூடியவராக இருக்க வேண்டும் என்பதற்காக, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறோம்.

நம் கூட்டணி சார்பில், நரேந்திர மோடி, மீண்டும் பிரதமராக வர வேண்டும்.நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியம். அதற்கு திறமையான, வலிமையான பிரதமர் தேவை. அத்தனை தகுதியும் பெற்றவர், நரேந்திர மோடி.

பக்கத்து நாடுகள் எல்லாம், நம் வளர்ச்சியை பொறுத்து கொள்ள முடியாமல், பயங்கரவாதிகளை ஊடுருவ செய்து, சதி செய்யும் நிலை உள்ளது.

பயங்கரவாதிகளை வேரோடு அறுக்கும் சக்தி பெற்றவர், பிரதமர் மோடி. பாதுகாப்பான நாடு இருந்தால் தான், மக்கள் நிம்மதியாக வாழ முடியும். மோடி, மீண்டும் பிரதமராக, அனைவரும் ஒருமித்த கருத்தோடு,அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளருக்கு, ஓட்டளிக்க வேண்டும்.தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி, நாட்டிற்கு என்ன நன்மை செய்துள்ளது' என, கேட்கிறார்.

அ.தி.மு.க., செயல்படுத்திய திட்டங்கள் ஏராளம். இந்தியாவில், உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, தமிழகத்தில் தான் அதிகம். தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றி உள்ளோம்.மத்தியில் வலிமையான, நிலையான பிரதமர் வர, நாடு வளம் பெற, தமிழகம் செழிக்க, அ.தி.மு.க., கூட்டணிக்கு, ஆதரவு அளியுங்கள். இவ்வாறு, இ.பி.எஸ்., பேசினார்.

தி.மு.க.,வினர் அட்டகாசம்!'


பிரசாரத்தில், முதல்வர் பேசியதாவது: அழகு நிலையத்தில் புகுந்து, பெண் மீது தாக்குதல்; பரோட்டா கடை, பிரியாணி கடையில் சாப்பிட்டுவிட்டு, பணம் கேட்டால் அடி; மொபைல் போன்கடையில், பணம் கேட்டால் அடி; ஓசியில் பஜ்ஜி தரவில்லை எனக்கூறி அடி என, தி.மு.க.,வினர் அட்டகாசம் செய்கின்றனர்.ஆட்சியில் இல்லாத

Advertisement

போதே, இப்படி என்றால், இவர்கள் ஆட்சிக்கு வந்தால், நாடு தாங்குமா... சிந்தித்து பாருங்கள்.

நான், ஐந்து கொலைகள் செய்தேனாம். நேற்று, உண்மை வெளிவந்து விட்டது. யாரெல்லாம், என்ன செய்தனர் என்பது, தெரிந்து விட்டது. கூலிப்படையை சேர்ந்த மனோஜ், சயன் ஆகியோர், ஓட்டலில் பேசிய, வீடியோ வெளியே வந்துள்ளது. முதல்வர் மீதே பொய் குற்றச்சாட்டு கூறினர் என்றால், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், சாதாரண மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. கூலிப்படைக்கு ஆதரவு கொடுக்கின்றனர். அவர்களுக்கு, ஜாமின் கொடுத்தவர்கள், இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருப்பரோ என்ற, சந்தேகம் உள்ளது.

இது குறித்து, அரசு தீவிர விசாரணை நடத்தும்.தி.மு.க., ஆட்சியில், ஸ்டாலினுக்கு நெருக்கமான, சாதிக்பாட்ஷா, மர்மமான முறையில் இறந்தார். சமீபத்தில், அவரின் நினைவு நாளில், அவரது மனைவி, 'கூடா நட்பு கேடாய் முடியும்' என, விளம்பரம் கொடுத்தார். இரண்டு நாட்களில், அந்த பெண்ணை, மர்ம நபர்கள் தாக்கினர். இது குறித்தும், விசாரணை நடத்தப்படும். தி.மு.க., ரவுடிகள், இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவர். இவ்வாறு, முதல்வர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
27-மார்-201914:47:44 IST Report Abuse

R.BALAMURUGESANயோசியுங்கள் மக்களே. உஷாராக வாக்களியுங்கள் மக்களே.

Rate this:
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
27-மார்-201913:29:52 IST Report Abuse

R.BALAMURUGESANஅறுபது ஆண்டுகளில் தமிழனுக்கு பாதுகாப்பில்லை, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பில்லை, ஏழை மக்களின் பணத்துக்கு பாதுகாப்பில்லை, ஜனநாயகத்துக்கு பாதுகாப்பில்லை, கருத்து சுதந்திரத்துக்கு பாதுகாப்பில்லை, விவசாயத்துக்கு பாதுகாப்பில்லை, முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பில்லை... இன்னும் பல, பல.. யோசியுங்கள் மக்களே... உஷாராக வாக்களியுங்கள் மக்களே...

Rate this:
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
28-மார்-201910:32:30 IST Report Abuse

R.BALAMURUGESANஅறுபது ஆண்டுகளில் காங்கிரஸ் கொள்ளையடித்தது. ... கோடிகளெல்லாம் சாதாரணமாக போச்சு... என்னத்த சொல்ல... கோமாளிகள் பேச்சை கேட்காதீர்கள் மக்களே... பாதுகாப்பு யாருக்கென்று தெரிந்து கொள்ளுங்கள்... தமிழனுக்கு பாதுகாப்பில்லை, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பில்லை, ஏழை மக்களின் பணத்துக்கு பாதுகாப்பில்லை, ஜனநாயகத்துக்கு பாதுகாப்பில்லை, கருத்து சுதந்திரத்துக்கு பாதுகாப்பில்லை, விவசாயத்துக்கு பாதுகாப்பில்லை, முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பில்லை... இன்னும் பல, பல.. யோசியுங்கள் மக்களே... உஷாராக வாக்களியுங்கள் மக்களே... பொய் வார்த்தைகளை நம்பாதீர்கள்... ...

Rate this:
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
28-மார்-201910:37:04 IST Report Abuse

R.BALAMURUGESAN ...

Rate this:
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
26-மார்-201918:07:27 IST Report Abuse

R.BALAMURUGESANயோசியுங்கள் மக்களே. உஷாராக வாக்களியுங்கள் மக்களே.

Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
26-மார்-201921:12:49 IST Report Abuse

எதிர்க்குரல் மோடி நாட்டிற்கு மீண்டும் தேவையா? ...

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X