அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தினகரனுக்கு 'குக்கர்' கிடையாது
தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

சென்னை: 'அ.ம.மு.க., எனப்படும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அல்ல. அதனால், அதற்கு, நிரந்தர சின்னமாக, 'குக்கர்' சின்னத்தை ஒதுக்க முடியாது' என, உச்ச நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

தினகரன்,குக்கர் சின்னம்,கிடையாது


அ.தி.மு.க., பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரச்னையில், 'தமிழக முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணியே, உண்மையான, அ.தி.மு.க., அவர்களுக்கே, இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும்' என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து, அ.ம.மு.க., துணைப் பொதுச்செயலர், தினகரன் வழக்கு

தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த, டில்லி உயர் நீதிமன்றம், 'தேர்தல் ஆணைய உத்தரவு செல்லும்' என, தீர்ப்பு அளித்தது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார். 'இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். டில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்கவேண்டும்' என, அவர் கோரியிருந்தார். ஆனால், தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்தது.

இதையடுத்து, 'லோக்சபா தேர்தல் நடப்பதால், அ.ம.மு.க.,வுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த, 'குக்கர்' சின்னத்தை ஒதுக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விட வேண்டும்' என, தினகரன் சார்பில் கோரப்பட்டது. இது குறித்து, 25ல் நேரில் ஆஜராகி பதில் அளிக்கும்படி, தேர்தல்ஆணையத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், தேர்தல் ஆணையத்தின் துணை கமிஷனர், சுதிப் ஜெயின், நேற்று நேரில் ஆஜரானார்.

Advertisement

''அ.ம.மு.க., தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி அல்ல. அதனால், அந்தக் கட்சிக்கு, நிரந்தர சின்னம் எதுவும் ஒதுக்க முடியாது,'' என, அவர் கூறினார்.

இதையடுத்து, இது தொடர்பாக, எழுத்து மூலமாக, பதில் மனு தாக்கல் செய்யும்படி, தேர்தல் ஆணையத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை, இன்றும் தொடர்கிறது.இந்நிலையில், 'அ.ம.மு.க.,வுக்கு, 'குக்கர்' சின்னம் ஒதுக்க முடியாது' என, எழுத்துப்பூர்வமான பிரமாண பத்திரத்தை, தேர்தல் ஆணையம், நேற்று மாலை, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
26-மார்-201919:26:15 IST Report Abuse

Manianபனை மரம், கள்ளு மொந்தை தரலாமே

Rate this:
Mohan - Bangalore,இந்தியா
26-மார்-201913:20:03 IST Report Abuse

Mohanகுக்கர குடுத்து வோட்ட வாங்கலாமான்னு பார்த்தாங்க. அதுக்கு பதிலா லாரி சின்னத்த குடுக்கலாம். லாரிய குடுத்து வோட்டு வாங்க முடியாதுள்ள.

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
26-மார்-201913:02:10 IST Report Abuse

Indhuindianகட்சியையே தேர்தல் ஆணையத்துலே பதிவு பண்ணலே. அதனாலே அது அங்கீரகாரம் பெற்ற கட்சி இல்லே. அதனாலே உங்க வேட்பாளர்கள் அனைவரும் சுயேட்சைகள்தானே அதற்குக்கேத்தமாதிரிதான் சின்னம் கிடைக்கும்.

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X