பதிவு செய்த நாள் :
ஓட்டு உறுதி செய்யும் கருவி:
சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

புதுடில்லி: 'மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டுகளுடன், ஓட்டு உறுதி செய்யும் கருவியில் பதிவாகும் சீட்டுக்களை எண்ணிப் பார்த்து ஒப்பிடுவதை அதிகரிப்பது குறித்து ஆராய வேண்டும்' என, தேர்தல் ஆணையத்துக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டு,உறுதி செய்யும் கருவி,சுப்ரீம் கோர்ட்,உத்தரவு


மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் மோசடி நடப்பதாக, பல கட்சிகள் புகார் கூறி வருகின்றன. இதற்கிடையில், வாக்காளர்கள், தங்கள் ஓட்டு, முறையாக பதிவாகிறதா என்பதை உறுதி செய்யும் வகையில், வி.வி.பி.ஏ.டி., எனப்படும், ஓட்டு உறுதி செய்யும் கருவி பயன்படுத்தப்படுகிறது.

ஒருவர், தன் ஓட்டைப் பதிவு செய்யும்போது, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள, ஓட்டை உறுதி செய்யும் கருவியில், அதற்கான சீட்டு பதிவாகும். அதைப் பார்த்து, தங்கள் தேர்வின்படியே ஓட்டு பதிவாகி உள்ளதா என்பதை, வாக்காளர்கள் உறுதி செய்யலாம். ஆனால், இவ்வாறுஅச்சாகும் சீட்டு, வாக்காளருக்கு அளிக்கப்படாது. தேர்தலில் ஏதாவது சர்ச்சை இருந்தால், இந்த இயந்திரத்தில் இருக்கும், பதிவான சீட்டுகளின் அடிப்படையில், முடிவு எடுக்கப்படும்.

'ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், ஏதாவது ஒரு ஓட்டுச் சாவடியில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் மற்றும் ஓட்டு உறுதி செய்யும் இயந்திரத்தில் பதிவாகும் சீட்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும்' என, தேர்தல் கமிஷன் கூறியிருந்தது. 'ஒவ்வொரு தொகுதியிலும், 50 சதவீத ஓட்டுச் சாவடிகளில், இவ்வாறு ஒப்பிட்டுபார்க்க உத்தரவிட வேண்டும்' என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், 21 அரசியல் கட்சிகள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

Advertisement

இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது; அப்போது அமர்வு கூறியதாவது:எந்த ஒரு அமைப்பும், புதிய ஆலோசனைகளை மறுக்க முடியாது. தன் செயல்பாட்டை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும்.

ஓட்டு உறுதி செய்யும் இயந்திரத்தில் பதிவாகும் சீட்டுகளை எண்ணும் நடைமுறையை, ஒரு சட்டசபை தொகுதியில், ஒரு ஓட்டுச் சாவடி என்பதை அதிகரிக்க முடியுமா என்பது குறித்து, தேர்தல் கமிஷன் ஆராய வேண்டும். இது குறித்து, 28க்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
26-மார்-201922:24:52 IST Report Abuse

sankarஇது ஒரு வெட்டி தனமான வழக்கு . ராஜதானில் மத்திய பிரதேசத்தில் சட்டிஸ்கரில் ரபா காங்கிரஸ் ஜெயிக்கும்போது வாக்கு எந்திர சிறப்பா செயல்படுதே போல அவங்க தூக்கும்போது தான் மிசினு கோளாறு . இப்ப தெரியுதா கோளாறு யாரிடம் என்று

Rate this:
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
26-மார்-201921:02:06 IST Report Abuse

தமிழ்மைந்தன் 500 ஓட்டுக்களுக்கு ஒரு மிஷின் உண்டு

Rate this:
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
26-மார்-201912:37:20 IST Report Abuse

Needhiyin Pakkam Nil அடேய் எதற்கு இரண்டு வேலை செய்கிறீர்கள், கோடி கணக்கான ரூபாய் காசோலையை எப்படி இயந்திரத்தின் மூலம் நீங்கள் எண்ணுகிறீர்களோ, அதே போல வாக்கு சீட்டுகளையும் இயந்திரத்தின் மூலம் என்ன வேண்டும் இதன் மூலம் நேரமும் குறையும் ஓரளவிற்கு அதில் நேர்மையும் இருக்கும், எனவே அதற்கான இயந்திரத்தை உருவாக்கி வாக்கு சீட்டு முறையை தேர்தலில் கொண்டு வாருங்கள்...

Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
26-மார்-201917:12:09 IST Report Abuse

uthappaவாக்கு சீட்டு எண்ணுவதிலும் தில்லு முள்ளு செய்யலாம். வாக்களிக்காதவர்களின் சீட்டுக்களையும் அரசியல் கட்சிகள் இறுதியில் சேர்த்து விடலாம்.எந்த கட்சிக்கு அதிக ரவுடிகள் இருக்கிறார்களோ அந்த கட்சி வெற்றி அடையம். ...

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X