பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'ரபேல் விமானம் வந்தால் பாக்., வாலாட்டாது'

சண்டிகர்: ''இந்திய விமானப் படைக்கு, 'ரபேல்' போர் விமானம் வந்துவிட்டால், நம் எல்லைக்கு அருகில், பாக்., ராணுவம் வாலாட்ட முடியாது,'' என, விமானப் படை தளபதி, பி.எஸ்.தனோவா கூறினார்.

ரபேல் விமானம்,பாக்., வாலாட்டாது


யூனியன் பிரதேசமான, சண்டி கரில் நேற்றுநடந்த நிகழ்ச்சியில், அமெரிக்காவின், 'போயிங்' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, 'சினுாக்' ரக ஹெலிகாப்டர்கள், நம் விமானப் படையில் இணைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி யில் பங்கேற்ற, விமானப் படை தளபதி, பி.எஸ்.தனோவா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம்,

36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

முதல் விமானம், செப்டம்பரில் ஒப்படைக்கப்படவுள்ளது. ரபேல் விமானம், 150 கி.மீ., தொலைவில் வரும் அன்னிய நாட்டு விமானங்களை கண்டறிந்து, தாக்கும் திறனுடையது. எனவே, நம் விமானப் படைக்கு, ரபேல் போர் விமானம் வந்துவிட்டால், எல்லை பகுதியில், பாக்., ராணுவம் வாலாட்ட முடியாது; அதற்கான தைரியம், அவர்களுக்கு இருக்காது.

அண்டை நாடுகளான, பாக்., மற்றும் சீனாவிடம் உள்ள போர் விமானங்களுடன் ஒப்பிடுகையில், ரபேல் விமானம், நம் ராணுவத்தின் திறனை பன்மடங்குஉயர்த்தும்.இவ்வாறு அவர் கூறினார்.

சினுாக் ஹெலிகாப்டர்கள்:


அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம், 15 சினுாக் ஹெலிகாப்டர்கள் வாங்க,

Advertisement

ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், நான்கு ஹெலிகாப்டர்கள் நேற்று, விமானப்படையில் இணைக்கப்பட்டன.

இந்த ஹெலிகாப்டரில், அதிக எடையுள்ள ராணுவ தளவாடங்கள், பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை, ஏற்றிச் செல்ல முடியும். பகல் மற்றும் இரவு நேரங்களிலும், உயரமான மலைப் பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்களுக்கு, வீரர்களை அழைத்து செல்ல முடியும்.


Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
26-மார்-201921:09:49 IST Report Abuse

PANDA PANDIநல்லவேளை பாஜக வந்தால் பக்கி வாலாட்டமாட்டான்னு சொல்லல. ராபல் ஒரு விமானம் அவ்வளவுதான்.இத்தனை நாளா காங்கிரஸ் வாங்கின MIG MIRAGE தான் வேலை செஞ்சிட்டுஇருக்கு.அதுவரைக்கும் நன்றி சொல்லுவோம். ராபல் வந்த சீனா கூட மோதல் ஓகே.

Rate this:
BALU - HOSUR,இந்தியா
26-மார்-201917:56:19 IST Report Abuse

BALUவிமர்சனம் செய்யும் வாசகர்களாக இருந்தால் கூட, அவர் காங்.வாசகராயிருந்தால் தேசப் பற்றை அவர்களிடம் எதிர்பார்க்கவே முடியாது என்பதை அவர்களது வார்த்தைகள் காட்டிக் கொடுக்கின்றன. மோடியை எதிர்க்கிறேன் என்று நினைத்துக் கொண்டு காங்.காரர்கள் தேசத்தின் துரோகிகளாய் மாறிவருகின்றனர்.

Rate this:
Ramakrishnan Natesan - MICHIGAN, TROY,யூ.எஸ்.ஏ
26-மார்-201913:41:28 IST Report Abuse

Ramakrishnan Natesanஇருப்பதை கொண்டு சிறப்புடன் போரிடுவான் எவனோ அவனே ராணுவ வீரன் என்பார்கள் மோடி பாஷையில் நாம் தான் வல்லரசு ஆகிவிட்டோமே பின்னர் என் பயம்

Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X