பதிவு செய்த நாள் :
விமர்சனங்கள் பாராட்டாக மாறும்

''நான் போட்டியிடாதது பற்றி, சமூக வலைதளங்களில் செய்யப்படும் விமர்சனங்கள், வெற்றிக்கு பின் பாராட்டாக மாறும்,'' என, மக்கள் நீதி மையம் தலைவர், கமல் கூறினார்.

 விமர்சனங்கள்  பாராட்டாக மாறும்

சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:திரையுலகை சேர்ந்த நடிகை நயன்தாராவை, மரியாதையுடன் நடத்த வேண்டியது, முதல் கடமை.சாதாரண ஆண் மகனாக இல்லாமல், கலைஞனாக உள்ள ராதாரவி, நயன்தாரா குறித்து பேசியது, வருத்தத்துக்கு உரியது. அவரை கண்டிக்க வேண்டியவர்கள் கண்டிப்பார்கள். ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கிய, தி.மு.க.,வுக்கு பாராட்டுக்கள்.தேர்தல் களத்தை நேரிடையாக காண, தயக்கம் இல்லை. இந்த பல்லக்கில், பவனி வர விரும்பவில்லை; பல்லக்கிற்கு, தோள் கொடுக்க விரும்புகிறேன். இன்று போட்டியிடும் முகங்கள், உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அந்த முகங்களை, உங்களுக்கு தெரிய வைப்பது என் கடமை. அதற்கு, என் முகத்தை, கார் போல பயன்படுத்த உள்ளேன். அந்த காரில், அவர்கள் பயணிக்கட்டும்.நேரடியாக ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று, மக்களை சந்திக்க உள்ளேன்.ஒரு தொகுதியில்


நான்நின்றிருந்தால்,அந்த தொகுதி நலன் கருதி, சுயநலத்தால் அங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும். நான், 40 தொகுதிகளுக்கும், இரண்டு முறையாவது செல்ல வேண்டும் என, ஆசைப்படுகிறேன்.போட்டியிடாதது பற்றி, சமூக வலைதளங்களில் செய்யப்படும் விமர்சனம், வெற்றிக்கு பின் பாராட்டாக மாறும்.மக்களுக்கு சாத்தியப்பட்டதை தான், தேர்தல் பிரகடனத்தில் சொல்லிஇருக்கிறோம். சாத்தியமில்லாத பெரும் கனவுகளை, மக்களுக்கு காட்டி மயக்க விரும்பவில்லை.கோல்கட்டா பயணம் அரசியல் ரீதியானது. மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சந்தித்து திரும்பியதும், அதற்கான காரணத்தை சொல்வேன்.துாத்துக்குடியில், இரண்டு பிரபலமான வேட்பாளர்கள் மத்தியில், எங்கள் வேட்பாளர் பிரபலமாவார் என்ற நம்பிக்கையில் நிறுத்தி உள்ளோம்.மக்கள் நீதி மையத்தின் வெற்றி வாய்ப்பு நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.இவ்வாறு, கமல் கூறினார்.

மம்தாவுடன் கூட்டணி
: லோக்சபா தேர்தலில், நடிகர் கமல் ஹாசனின், மக்கள் நீதி மையம்கட்சியுடன், திரிணமுல் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.பிரபல நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சி

Advertisement

தலைவருமான, கமல் ஹாசன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, நேற்று கோல்கட்டாவில் சந்தித்து பேசினார். பின், செய்தியாளர்களிடம் மம்தா பானர்ஜி கூறியதாவது:யூனியன் பிரதேசமான, அந்தமான் - நிகோபர் தீவில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்களும், தமிழர்களும் அதிகம் வசிக்கின்றனர். எனவே, அங்கு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், மக்கள் நீதி மையம் கட்சியுடன், திரிணமுல் காங்., கூட்டணி அமைத்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து கமல்ஹாசன் கூறியதாவது: அந்தமான் - நிகோபர் லோக்சபா தொகுதிக்கான தேர்தலில், திரிணமுல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்காக பெருமைப்படுகிறேன். இந்த கூட்டணி, எதிர்காலத்திலும் தொடர வேண்டும் என்பதே, என் விருப்பம்.இவ்வாறு அவர் கூறினார்.அந்தமான் - நிகோபர் தீவு லோக்சபா தொகுதியில், திரிணமுல் காங்., கட்சி போட்டியிடுகிறது. இந்த வேட்பாளரை ஆதரித்து, கமல் ஹாசன், அங்கு பிரசாரம் செய்ய உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
26-மார்-201923:53:16 IST Report Abuse

Pugazh Vஇங்கே கமல்ஹாசனை அநாகரிகமாக விமர்சிக்கும் பாஜக வாசகர்கள் அங்கே வட இந்தியாவில் வேட்பாளராக இருக்கும் ஹேமமாலினி ஜெயப்ரதா போன்ற நடிகைகளைப் பற்றி இதேபோல் விமர்சிப்பார்களா? அவர்களை. வேட்பாளராக அறிவித்த அமி_ஷ மற்றும் மோ__ பற்றி எதாவது விமர்சிக்க தெம்பு திராணி தைரியம் நேர்மை எதாவது இருக்கிறதா? பாஜக வேட்பாளர்களான.ஹேமமாலினி மற்றும் ஜெயப்ரதா மிட்நைட் மசாலா பாடல்கள் பார்த்ததில்லை போல. பாவம்..

Rate this:
jagan - Chennai,இந்தியா
26-மார்-201917:54:54 IST Report Abuse

jaganபெட்டியாக மாறினால் இந்த பிராடு இன்னும் சந்தோஷ படுவார் , கையில பாருங்க கவர்

Rate this:
Krishna Rao - Chennai,இந்தியா
26-மார்-201923:49:39 IST Report Abuse

Krishna Raoமிகவும் கேவலமான கற்பனை உங்களுடையது ...

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
26-மார்-201916:59:30 IST Report Abuse

Endrum Indianகமல் ஹாசன் முஸ்லீம் பேகம் மும்தாஜ் கூட்டணி சரியானது தான், இனம் இனத்தோடு தான் சேரும்.

Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X