தேர்தல் பண பட்டுவாடாவுக்கு புது 'ரூட்டு' - மோப்பம் பிடிச்சு கமல் போட்டாரு 'குண்டு'

Updated : மார் 26, 2019 | Added : மார் 26, 2019
Advertisement
 தேர்தல் பண பட்டுவாடாவுக்கு புது 'ரூட்டு' - மோப்பம் பிடிச்சு கமல் போட்டாரு 'குண்டு'

அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்த சித்ரா, குப்பையை அள்ளி, தொட்டியில் போடுவதற்காகச் சென்றாள்.

மித்ரா வர, இருவரும் பேசிக்கொண்டே, ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டச் சாலையில் 'வாக்கிங்' செல்ல துவங்கினர்.

''என்னக்கா, வெள்ளலுார் குப்பை கிடங்கு பத்தி எரியுதாமே...'' என, பற்ற வைத்தாள் மித்ரா.

''ஆமாப்பா, மூணு நாளா எரிஞ்சிக்கிட்டு இருக்கு. குப்பையை கையாள்றதுக்காகவே ஏகப்பட்ட இன்ஜி.,கள் இருக்காங்க. அவுங்க, குப்பையில கரன்சி அள்ளுறதுலதான் குறியா இருக்காங்க. குப்பை பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்துறதுல, கவனம் செலுத்துறதில்ல. இதுக்கு முன்னாடி, லதான்னு ஒரு கமிஷனர் இருந்தாங்க.''குப்பை ஊழலை கண்டுபிடிச்சு, ரெண்டு அதிகாரிகளை, வெவ்வேறு ஊருக்கு 'டிரான்ஸ்பர்' பண்ணாங்க. அவுங்க, 'டிரான்ஸ்பர்' ஆனதும், ரெண்டு அதிகாரிகளும் பதவி உயர்வு வாங்கிட்டு மறுபடியும், நம்மூருக்கே திரும்பி வந்துருக்காங்க...'' என, இழுத்துக் கொண்டே சென்றாள் சித்ரா.

''அப்ப, தீ பிடிக்கலை; பத்த வச்சுருக்காங்கன்னு சொல்ல வர்றியா...'' என, நோண்டினாள் மித்ரா.

''அப்படியும் இருக்கலாம்,'' என்ற சித்ரா, ''மக்கள் நீதி மையம் சார்புல போட்டியிடுற, வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கமல், புதுசா ஒரு குண்டு போட்டுட்டு போயிருக்காரே; கேள்விப்பட்டியா?'' என கேட்டாள்

.''நீ சொன்னா கேட்டுக்கிறேன்'' என்றாள் மித்ரா.

''காவல் துறை உயரதிகாரி ஒருத்தரு, மெடிக்கல் லீவுல இருக்காரு. அவருதான், 'கரன்சி'ய கடத்திட்டுப் போறாராம். தேர்தல் பறக்கும்படை அதிகாரிங்க வாகனங்கள்ல, 'ஜி.பி.எஸ்.,' கருவி பொருத்தியிருக்காங்க. எந்தெந்த 'ரூட்'டுல பறக்கும்படை நிக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டு, வேற ரூட்டுல பணத்தை கொண்டு போறாங்கன்னு, கமல் சொல்லியிருக்காரு...'' என்றாள் சித்ரா.

''ஓ... அப்படியா''அதற்கு சித்ரா, ''இதுல ஒரு விஷயம் சந்தேகமா இருக்கு. தி.மு.க., - காங்., மாதிரி முக்கிய எதிர்க்கட்சிக்காரங்களுக்கு கூட தெரியாத விஷயம், இவருக்கு தெரிஞ்சிருக்கே. புதுசா தொடங்குன கட்சியா இருந்தாலும், 'நெட்ஒர்க்' பலமா அமைச்சிருக்காரு...'' என்றாள்.

இருவரும், 'வாக்கிங்' ஒரு சுற்று நிறைவு செய்திருந்தனர்.இரண்டாவது சுற்றுக்கு கிளம்பிய சித்ரா, ''இருக்கறவரைக்கும் வசூலை தட்டி எடுக்குறாங்களாம்...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.

''யாருக்கா அது... துணிச்சலா அள்ளுறது...?''''தேர்தலை காரணம் காட்டி, ஒரே இடத்துல மூணு வருஷமா வேலை பார்த்த போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,களை மாத்துனாங்க. அவுங்களுக்கு பதிலா வேற மாவட்டத்துல இருந்தவங்க, இங்க வந்துருக்காங்க''

''ஆமா...அதுக்கு என்ன''''எலக்ஷன் முடிஞ்சதும், திருப்பி அனுப்பிடுவாங்க. அதுக்குள்ள முடிஞ்ச வரைக்கும் சம்பாதிக்கணும்னு, 'பிளான்' பண்ணியிருக்காங்க போலிருக்கு. வசூல்ல தட்டி எடுக்குறாங்க. குறிப்பா, 'டிராபிக்' போலீஸ்காரங்க, கலெக்ஷன அள்ளுறாங்க...'' என்றாள் சித்ரா.

''ஒருமையில பேசுறதுனால, போலீஸ்காரங்க மத்தியில புகைச்சல் ஓடுதாமே...''

''ஆமாக்கா, போத்தனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் குடுக்க வந்திருக்கறவங்க முன்னாடியே, போலீஸ்காரங்கள இன்ஸ்., ஒருமையில பேசுறாராம். அதனால, மன உளைச்சல்ல இருக்காங்க. 'டிரான்ஸ்பர்' வாங்கிட்டு, ஓடிடலாம்னு நெனைக்கிறாங்க. எஸ்.ஐ.,க்களோட நிலைமையும் இப்படித்தான் இருக்காம்...'' என்றாள் மித்ரா.

அதற்குள் இருவரும் டயர்டாகி விட, 'வாக்கிங்'கை நிறைவு செய்து, வீட்டை நோக்கிச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X