அரசியல் செய்தி

தமிழ்நாடு

'அம்மா' மரபை மீறிய அ.தி.மு.க.,வினர்

Updated : மார் 26, 2019 | Added : மார் 26, 2019 | கருத்துகள் (31)
Share
Advertisement

ஒவ்வொரு தேர்தலின் போதும், 'நாள், நேரம்' பார்த்து, ஜெயலலிதா சொல்லும் தேதியில் மட்டுமே, அ.தி.மு.க., வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வர். அதாவது, தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும், ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும்.latest tamil newsகடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது கூட, ஜெ., உத்தரவுக்கு பின்னரே, அனைத்து தொகுதி களிலும், ஒரே நாளில், ஒரே நேரத்தில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர். அதேபோல், 2016 சட்ட சபை தேர்தலின் போது, 234 தொகுதிகளிலும், ஒரே நாளில், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், மனு தாக்கல் செய்தனர்.


latest tamil news


ஆனால், தற்போது, ஜெ., இல்லாத காரணத்தால், அந்த மரபு மீறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, இரு வேறு தேதிகளை குறிப்பிட்டு, அவரவர் விருப்பப்படி, வேட்பு மனு தாக்கல் செய்யுமாறு, அ.தி.மு.க., தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதனால், அ.தி.மு.க, வேட்பாளர்கள் சிலர், 21ம் தேதியே, மனு தாக்கல் செய்தனர். மற்றவர்கள், நேற்று மனு தாக்கல் செய்தனர். கட்சிக்காரர்கள், 'எல்லாம் அம்மா இருக்கிற வரைக்கும் தான்' என, நொந்து புலம்புகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரபு - மதுரை,இந்தியா
26-மார்-201916:10:56 IST Report Abuse
பிரபு ஜெ.,காலத்தில் அ.தி.மு.க.,வுக்கு ஒரே தலைவர் அது அவர் மட்டுமே. இன்றோ அ.தி.மு.க.,வுக்கு பல தலைவர்கள்ள். யார் சொல்லுறதை யார் கேட்கணும்-ங்கிற சூழ்நிலை. அதுனால இனிமே எல்லாம் அப்படிதான்.
Rate this:
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
26-மார்-201911:33:29 IST Report Abuse
Jaya Ram அய்யா ஜெயலலிதா எம் ஜி ஆர் இருக்கும் வரை அடங்கி ஒடுங்கித்தான் இருந்தார் அப்புறம் ஆடவில்லையா அதுபோலத்தான் எல்லாம் இதையெல்லாம் பார்த்தால் ஒன்றும் நடக்காது அந்தவகையில் அவரின் ஆட்சி நடக்கிறதே என்று சந்தோஷப்படுங்கள்
Rate this:
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
26-மார்-201911:00:01 IST Report Abuse
GB.ரிஸ்வான் அந்த பெண் சிங்கம் எல்லோரையும் வயசு வித்தியாசம் பாராமல் வேஷ்டி கட்டிய அத்தனை அதிமுக அமைச்சர்களையும் கோமாளிகளையும் தனது காலின் கீழே வைத்திருந்தார்... பலர் முகம் சுளித்தனர் அன்று... அவரின் மறைவை தொடர்ந்து இவர்களின் நடவடிக்கைகளை பார்த்தால் ... புரிகிறது அவர் இவர்களை சரியான இடத்தில் தான் வைத்திருந்தார் என்று.... அன்று பிரதமரை கூட தனது வீட்டிற்கு வரவழைத்தவர் அம்மையார் அவர் எப்படியோ.... ஆனால் இனி இந்திய அரசியலில் புரட்சி தலைவியை போல யாருமில்லை இனி பிறக்க போவதுமில்லை ... அவர் ஆளும் போது தமிழகம் ஒரு கம்பிரத்தில் இருந்தது.... தலை நிமிர்ந்து நடந்தது... தனக்கு வழக்கு சிறை மிரட்டல் வந்தபோதும் தான் கொண்ட தமிழக நலன் கொள்கையில் மாறவில்லை சசிகலா போன்ற சதிகாரர்களை சூழ்ச்சிக்காரர்களை தன்னிடத்தில் வைத்துக் கொண்ட தவறுகளுக்காக தனக்கு தண்டனையாக சிறை சென்றார்.. தான் பிறந்து முதல் வளர்ந்து பட்டது ராணியாக வலம் வந்தவர் வாழ்ந்தவர் பார்க்காத வசதி வாய்ப்புகள் இல்லை .... அவரை சுற்றி இருந்தவர்களால் தான் அவரின் மரணம் நிகழ்ந்தது...என்பதை மறுக்க முடியாது... புரட்சி தலைவி என்றவர்க்கு உண்மை வடிவம் தந்தவர் அவர் ...
Rate this:
Sanakkiyan - Erode,இந்தியா
27-மார்-201900:08:00 IST Report Abuse
Sanakkiyanசிங்கமுன்னு கூப்புடுறியே ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X