அரசியல் செய்தி

தமிழ்நாடு

கார்த்தி, ஜெயகுமாருக்கு காங்கிரசில் கடும் எதிர்ப்பு; அழகிரி சமரச முயற்சி

Updated : மார் 26, 2019 | Added : மார் 26, 2019 | கருத்துகள் (48)
Advertisement

தமிழக காங்கிரஸ் கட்சியில், சிவகங்கை, திருவள்ளூர் தொகுதி வேட்பாளர்கள் மீதான எதிர்ப்பை சரிக்கட்டும் வகையில், அதிருப்தியாளர்களை அழைத்து, சமரசம் செய்யும் முயற்சியில், தமிழக காங்கிரஸ் தலைமை ஈடுபட்டுள்ளது.


நீண்ட இழுபறிக்கு பின், நள்ளிரவில் வெளியிடப்பட்ட, காங்கிரஸ் பட்டியலில், சிவகங்கை தொகுதி மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த தொகுதியில், 'சீட்' கேட்டிருந்த, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன், கார்த்தி மீது, சி.பி.ஐ., வழக்கு இருப்பதால், அவருக்கு வழங்கக் கூடாது என, முன்னாள் மத்திய அமைச்சர், சுதர்சன நாச்சியப்பன் வலியுறுத்தினார். இதையடுத்து, சிவகங்கை தொகுதியை தவிர, மற்ற எட்டு தொகுதிகளுக்கும், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

தன் மகனுக்கு, 'சீட்' வாங்க வேண்டும் என்பதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, மன்மோகன் சிங் ஆகியோரின் ஆதரவை, சிதம்பரம் நாடினார். அவர்களின் கோரிக்கையை ஏற்று, சிவகங்கை தொகுதியின் வேட்பாளராக கார்த்தி, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டார். கார்த்திக்கு, 'சீட்' கிடைத்ததை, சுதர்சன நாச்சியப்பனால் ஜீரணிக்க முடிவில்லை. அவர் தன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இது குறித்து, சுதர்சன நாச்சியப்பன், நிருபர்களிடம் கூறுகையில், ''சிதம்பரம் குடும்பத்தை, மக்கள் வெறுக்கின்றனர். பல நாடுகளில், சிதம்பரம் குடும்பம் சொத்துகளை சேர்த்துள்ளது. ''கார்த்தி, ஒரு குற்றவாளியாக உள்ளதால், நீதிமன்றத்தில், என்ன நடக்க போகிறது என, தெரியவில்லை. நீதிமன்றத்திற்கு போக வேண்டியவர், வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதனால், காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட போகிறது,'' என்றார்.

சுதர்சன நாச்சியப்பனின் எதிர்ப்பு, தமிழக காங்கிரஸ் கட்சியில், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. உடனே, அவரை சமரசம் செய்யும் முயற்சியில், மாநில தலைவர், கே.எஸ்.அழகிரி ஈடுபட்டுள்ளார்.

சென்னை, சத்தியமூர்த்தி பவனில், நேற்று அழகிரி அளித்த பேட்டி: சிவகங்கை தொகுதியில், கார்த்தி போட்டியிட வேண்டும் என, எட்டு பேர் விருப்ப மனு அளித்தனர். சுதர்சன நாச்சியப்பன் போட்டியிட, ஒருவர் மட்டுமே விருப்ப மனு அளித்தார். கார்த்தியை நிறுத்தும் முடிவை, ராகுல் எடுத்துள்ளார்; அதற்கு தலைவணங்க வேண்டும். டில்லி மேலிடத்திற்கு, எந்த தலைவரும் நிர்ப்பந்தம் அளிக்கவில்லை. சுதர்சன நாச்சியப்பன், மத்திய அமைச்சராகவும், ராஜ்யசபா எம்.பி., யாகவும் இருந்துள்ளார். கட்சியின் முடிவை, அவர் ஏற்க வேண்டும். எதிர்ப்பு தெரிவிப்பது, ராகுல் முடிவை, எதிர்ப்பது போலாகிவிடும்.


திருவள்ளூர் தொகுதியின் வேட்பாளராக, ஜெயகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், வடகிழக்கு மாநிலங்களில், காங்., பொறுப்பாளராக பணியாற்றியவர். திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட, செல்வப்பெருந்தகையும், 'சீட்' கேட்டிருந்தார்; அவரும் தகுதியான வேட்பாளர் தான். என்னை சந்தித்து பேசிய பின், அவர் சமாதானமாகி விட்டார். இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையில், கே.எஸ்.அழகிரியை, நேற்று காலை, தமிழக காங்கிரஸ், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசினார். அப்போது, ''திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும், ஜெயகுமாருக்கு வயது அதிகமாகி விட்டது. எனவே, அவருக்கு, இந்த முறை வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ''வரும் சட்டசபை தேர்தலில், உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்,'' என, அழகிரி தரப்பில், சமரசம் செய்யப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthamizhsudar - Chennai,இந்தியா
30-மார்-201912:28:25 IST Report Abuse
Senthamizhsudar சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டே தன்னை விலக்கிகொள்ளலாம். உண்மை காங்கிரஸ் தலைவர்கள் தம்மை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கி கொண்டனர். தமிழக காங்கிரஸ் திமுக குடும்பத்தின் கைகூலி முதுகெலும்பில்லாதகொள்ளையர்கள் தரகர்கள்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-மார்-201904:24:35 IST Report Abuse
J.V. Iyer இதைவிட சொந்த காசில் யாரும் சூனியம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். இதில் கான்-க்ராஸ் கில்லாடிகள். இப்ப இந்த இரண்டு தொகுதியும் போச்சு. ப.சி. கார்த்திக்கு தனக்கு இரண்டு கண்ணும் போனால் பரவாயில்லை. சுதர்சன நாச்சியப்பன் போட்டி இடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளார். பலே...பலே...
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
27-மார்-201911:32:22 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இப்படியே விளைநிலம் எல்லாம் போயிட்டாள் சொத்துக்கு என்ன செய்வோம் என்று என்னுங்க யோசிங்க கிசான் சேரருளே காலவச்சால்தான் நாமெல்லாம் சொத்துலே காய் வைக்கமுடியும் பீட்ஸா பர்கர் எல்லாம் எவன் எவ்ளோநாளுக்கு துண்ணமுடியும் இங்கே எங்கள் கோவைலே வேளைக்கு போகும் பொண்ணு தாகம் தங்களேன்னு ஜோஸ் வாங்கிகுடிச்சுருக்கு பத்துநாட்களா ஹாஸ்பிடல்ல கிடக்குதுங்க அவ்ளோவாந்திபேதின்னு தவிச்சு இன்னம் பேதி நிக்கவேயில்லையாம் கைலே புட்டலே குடிநீர் எடுத்துப்போவும் தினம் அன்று அவ புட்டியை தண்ணீரோட எவளோ அபேஸ் பண்ணிட்டா பாவி பாவம் இதுவரை டர் மருந்து ட்ரிப்ஸ் என்று தவிக்குது அந்தப்பொண்ணு பாவம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X