அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் பா.ஜ., ஜெயித்தால் அவமானம்

Added : மார் 26, 2019 | கருத்துகள் (27)
Advertisement
 ராமநாதபுரத்தில் பா.ஜ., ஜெயித்தால் அவமானம்

ராமேஸ்வரம்: 'ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பா.ஜ., ஜெயித்தால் எனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதுவேன்' என காங்., முன்னாள் எம்.எல்.ஏ.,வும் தற்போது பா.ஜ., கூட்டணியில் உள்ள த.மா.கா., மூத்த தலைவருமான அசன் அலி பேசுவது போன்ற 'ஆடியோ' சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

ராமநாதபுரம் சட்டசபை தொகுதியில் 2006-11ல் காங்., எம்.எல்.ஏ.,வாக இருந்த அசன்அலி தற்போது த.மா.கா.,வில் உள்ளார். 2011 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தார். மலேசியா, இலங்கையில் தொழில் செய்து வருகிறார். இலங்கை மாஜி அதிபர் ராஜபக்ேஷவின் நெருங்கிய நண்பர். இவர் வெளிநாட்டில் இருந்து ராமநாதபுரத்தில் உள்ள நண்பர் ஒருவரிடம் போனில் பேசுவது போன்ற 'ஆடியோ' பரவி வருகிறது.அதில் பேசியிருப்பதாவது:பா.ஜ., உள்ள கூட்டணியில் சேராதீர்கள் என கூறினேன். அவர்கள் (த.மா.கா., தலைவர் வாசன்) கேட்கவில்லை. ஆண்டவன் காப்பாற்ற வேண்டும்.

ராமநாதபுரத்தில் பா.ஜ., ஜெயித்தால் எனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதுவேன். தலைவர் வாசனுக்கு எதிராக என்னால் செயல்பட முடியாது. ஆனால் மோடிக்கு எதிராக எந்த கட்சி அழைத்தாலும் பிரசாரத்திற்கு செல்வேன்.இத்தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் தோல்வி அடைந்தால் அது நாடு முழுவதும் பேசப்படும். பா.ஜ., நிற்பது தெரிந்திருந்தால் வேறு தொகுதியில் முஸ்லிம் லீக் போட்டியிட்டு இருக்கலாம். நிச்சயமாக நாம் ஜெயிக்க முடியும். பயப்பட தேவையில்லை.

த.மா.கா., வில் இருந்து என்னை நீக்கினாலும் பரவாயில்லை. இத்தேர்தலில் முஸ்லிம், கிறிஸ்தவர்களை ஒருங்கிணைத்து மோடிக்கு எதிராக பிரசாரம் செய்வேன்.சில நண்பர்களிடம் பேசினேன். முஸ்லிம் லீக்கின் ஏணி சின்னத்தை ஜெயிக்க வைப்பதாக உறுதியளித்தனர். முஸ்லிம் லீக் ஜெயிப்பதற்கு நானும் பாடுபடுவேன். என்னை பிரசாரத்திற்கு யாரும் அழைக்காவிட்டாலும், தனிப்பட்ட முறையில் ஏதாவது செய்வேன்.இவ்வாறு பேசியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஏப்-201910:47:25 IST Report Abuse
Yaro Oruvan இத்தேர்தலில் முஸ்லிம், கிறிஸ்தவர்களை ஒருங்கிணைத்து மோடிக்கு எதிராக பிரசாரம் செய்வேன்..... இந்துக்களே நோட் திஸ் பாயிண்ட்.. உலகம் முழுக்க அடிச்சிக்கிறதும் சண்டை போட்டுகிறதும் இவனுங்க ரெண்டு க்ரூப்புக்குள்ளேதான்.. ஆனா இங்க இந்தியாவில் இவனுங்க சேந்து பாஜகவை தோக்கடிப்பார்களாம். இந்துக்களே ஒரு சேருங்கள் பாடம் புகட்டுங்கள்.. மதத்தின் பெயரால் நடத்தப்படும் கட்சிகள் மதச்சார்பு அற்றவையாம்.. ஆனால் பாஜக மதவாத கட்சியாம்.. இதற்கு ஒத்து ஊதும் தில்லு முல்லு கட்சியையும் ஊழல் கான்+க்ராஸையும் ஒதுக்குவோம்.. போலி மதச்சார்பின்மையை ஒழிப்போம். ஜைஹிந்..
Rate this:
Share this comment
Cancel
Kannan - Chennai,இந்தியா
31-மார்-201910:23:33 IST Report Abuse
Kannan ராமந்தபுரம் என்ன கைராசியா, இந்த ஆள் இப்படி பேசுகிறானே. ராமநாதபுரம் இந்து பூமி தெரியுமா. இங்கு நீங்கள் வென்றால் அது மக்களுக்கு அவமானம். அது சரி பிஜேபி வென்றால் நீ என்ன செய்து கொள்வாயப்பா.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
29-மார்-201914:53:57 IST Report Abuse
bal இவன் முதலில் பாகிஸ்தானுக்கு போகவேண்டும். இங்கே இவனுக்கு என்ன வேலை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X