ஜெகன் மோகனுக்கு மம்முட்டி, 'பிரசாரம்'

Added : மார் 26, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 ஜெகன் மோகனுக்கு மம்முட்டி, 'பிரசாரம்'

ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர்., ஜெகன் மோகன் ரெட்டி, தன் கட்சி வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரத்திற்கு, மலையாள நடிகர் மம்முட்டியை, ஊர் ஊராக அழைத்துச் செல்வது, எதிர்கட்சியினர் வயிற்றை கலக்கி வருகிறது. நீங்கள் நினைப்பது போல, மம்முட்டி நேரடியாக ஆந்திராவில் பிரசாரம் செய்யவில்லை!

ஆந்திர முன்னாள் முதல்வர், ஒய்.எஸ்.ராஜசேகர் வேடத்தில், மம்முட்டி நடித்த, யாத்ரா படம், சமீபத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது. இதில், விவசாயிகள் தற்கொலை, வறட்சி உள்ளிட்ட பிரச்னைகளுக்காக, ராஜசேகர், 2003ல், மேற்கொண்ட நடைபயணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நடைபயணத்தால் தான், ராஜசேகர ரெட்டி, 2004ல் மீண்டும் ஆட்சியை பிடித்தார்.

ஆனால், யாத்ரா படத்தில், தற்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப, ஆட்சியில் உள்ள தெலுங்கு தேச முதல்வர், சந்திரபாபுவை தாக்கும் வகையில், மம்முட்டிக்கு, 'பஞ்ச்' வசனங் கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த படத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தி, ஆந்திராவில், நடைபெறும் சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில், பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற, ராஜசேகர ரெட்டி மகன், ஜெகன் மோகன் திட்டமிட்டுள்ளார்.

அதனால், யாத்ரா படம் ஊர் ஊராக பிரமாண்ட திரைகளில் திரையிடப்பட்டு வருகிறது. கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ள, சித்துார், அனந்தபூர் உள்ளிட்ட பல மாவட்ட திரையரங்குகளில், தினமும், நான்கு காட்சிகள், இலவசமாக, இப்படம் திரையிடப்படுகிறது. இப்படத்தை பார்க்க, பஸ், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில், ஒய்.எஸ்.ஆர். ஜெகன் ஆதரவாளர்களால், மக்கள் அழைத்து வரப்படுகின்றனர். அவர்களுக்கு, உணவு, குடிநீர் உட்பட, சகலமும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ராஜசேகர் தோற்றத்தை, மம்முட்டி அப்படியே பிரதிபலிக்கவில்லை என்றாலும், அவர் திரைப்படத்தில் பேசும் காரசாரமான அரசியல் வசனங்களை, மக்கள் கை தட்டி ரசிக்கின்றனர். ம்ம்...கேரளாவில் இருந்தபடி, ஆந்திராவை கலக்கி வருகிறார் மம்முட்டி.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
29-மார்-201903:57:50 IST Report Abuse
Murugan அப்பா இன்னும் இந்த கோமாளி பிரச்சாரம் முடிவுக்கு வரவில்லையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X