கண்டிப்பாக ஜெயிப்பார் மோடி; காங்கிரசில் சேர்ந்தவர் கணிப்பு

Added : மார் 26, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement
உத்தர பிரதேச, பா.ஜ., தலைவர், மகேந்திர நாத் பாண்டேயின் சகோதரர் ஜிதேந்திர நாத் பாண்டே. அவரின் மருமகள், அம்ரிதா பாண்டே. சமீபத்தில் இவர், ராகுல் சகோதரி, பிரியங்காவை சந்தித்து, காங்கிரசில் இணைந்து உள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம், 'அடடே...' என, சொல்ல வைக்கிறது. பா.ஜ., தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர், காங்.,கில் சேர்ந்தது, பா.ஜ.,வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. 'அம்ரிதா,
கண்டிப்பாக ஜெயிப்பார் மோடி; காங்கிரசில் சேர்ந்தவர் கணிப்பு

உத்தர பிரதேச, பா.ஜ., தலைவர், மகேந்திர நாத் பாண்டேயின் சகோதரர் ஜிதேந்திர நாத் பாண்டே. அவரின் மருமகள், அம்ரிதா பாண்டே. சமீபத்தில் இவர், ராகுல் சகோதரி, பிரியங்காவை சந்தித்து, காங்கிரசில் இணைந்து உள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம், 'அடடே...' என, சொல்ல வைக்கிறது. பா.ஜ., தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர், காங்.,கில் சேர்ந்தது, பா.ஜ.,வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. 'அம்ரிதா, பா.ஜ., உறுப்பினராக இல்லை. அவர் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவால், கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை' என, பா.ஜ., மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.

காங்கிரசில் இணைந்தது குறித்து, அம்ரிதா கூறிய விளக்கம் தான், தற்போது, உ.பி.,யில் பரவலாக பேசப்படுகிறது. 'வரும் தேர்தலில், பிரதமர் மோடி தலைமையில், பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும். அதே நேரத்தில், 2024 தேர்தலில், பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுவாரா என்பது தெரியவில்லை. அதனால், எதிர்காலத்தை மனதில் வைத்து, இந்த முடிவை எடுத்துள்ளேன்' என்றாரே பார்க்கலாம்! இது போதாதா, பா.ஜ.,வுக்கு! இதையே பிரசாரமாக பயன்படுத்துகிறது.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
31-மார்-201921:19:19 IST Report Abuse
Gnanam மோடி இந்தமுறை நிச்சயம் ஜெயிக்கவேண்டும். அவருடைய திறமைக்கு இன்னுமொரு 5 ஆண்டு காலம் ஒதுக்கி நம் நாட்டை வல்லரசாக்கியபின், பிஜேபி யின் மற்றொரு தலைவர் வருவார் - வாரிசுமுறைப்படியல்ல, ஜனநாயக முறைப்படி.
Rate this:
Cancel
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
30-மார்-201913:27:21 IST Report Abuse
Nallavan Nallavan ஐயர் ஊட்டுப் பொண்ணு இப்படிப் பண்ணலாமா ??
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
29-மார்-201913:39:21 IST Report Abuse
Sridhar ஒவ்வொரு நாட்டின் எதிர்காலமும் அந்த மக்களின் சிந்தனையை ஒற்றே அமையும். நல்ல தலைமை இருந்தால் சிந்தனைகள் நேர்பட வழிவகுக்கும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நம் மக்கள் பிளவுபட்டு கிடந்தனர். ஒருங்கிணைந்த தலைமை இல்லாத சூழ்நிலை இருந்தது. அந்நியன் படையெடுத்து நம் தேசத்தை பிடித்தான். அந்த பிடி ஆயிரம் ஆண்டுகளாக விடுபடாததோடு வேறு பல பிரச்சனைகளுக்கும் வழிவகை செய்து விட்டது. இன்றும் மக்கள் லாலிபப்புக்கு ஆசைப்பட்டு தவறாக வோட்டு போட்டார்களேயானால் மீண்டும் வீழ்வதற்கான வாய்ப்புகள் அதே அளவு உள்ளன. 1971 இல் தமிழர்கள் காமராஜை புறக்கணித்து கருணாநிதிக்கு ஓட்டுபோட்டதின் விளைவு ஊழல்கள் ஒரு வாழ்க்கைமுறை என்ற அளவுக்கு ஆயிற்று. அதிலிருந்து இன்றுவரை தமிழகம் விடுபடமுடியவில்லை. தமிழக மக்களின் திறமைகளுக்கும் உழைப்பிற்கும் அவர்களின் நிலை இந்தியாவிலேயே முதன்மையாக இருந்திருக்க வேண்டும்.பாவிகள் செய்த மாபெரும் ஊழல்களால் அடுத்து வந்த அம்மா போன்ற திறமைசாலிகளும் ஊழல் சக்திகளை எதிர்க்க அதையே செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். தமிழ் நாடு சீரழிந்தாலும் மற்றவர்களும் முன்னேறாததால் எதோ சமாதானப்பட்டுக்கொள்ள முடிகிறது. 2014 இல் தான் முதல் முறையாக ஒரு பரம்பரை பெருமை இல்லாத ஒரு சாதாரண குடிமகன் தன் பெயரில் ஒட்டு கேட்டு பிரச்சாரம் செய்து பிரதமர் ஆனார். நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்த இந்த அபூர்வ நிகழ்ச்சிக்கு அந்த தலைவரின் நேர்மை பண்புகள் மட்டும் காரணமல்ல. மக்களின் விழிப்புணர்வும் தான். அந்த விழிப்புணர்வு ஒருமுறை இருந்தால் போதாது. எப்போதும் இருக்கவேண்டும். நம் நாடு ஒரு வல்லராசன பின்பும் விழிப்புணர்வு இருக்கவேண்டும். அந்நிய சக்திகள் ஆதிக்கத்தை அறவே ஒழித்து அவை மீண்டும் அண்டாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இன்னொரு மோடி பிறந்து வளர்ந்து வரும் வரை, இந்த மோடி ஆட்சி தொடரவேண்டும்.
Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
30-மார்-201914:23:59 IST Report Abuse
THENNAVANஅருமையான பதிவூ ,நாம் உயர்ந்த பதவிக்கு வர குதிரை வேகத்தில் ஓடவேண்டும் ,அப்படி பதவிக்கு வந்த பின் குதிரையைவிட வேகமாக ஓடவேண்டும் இதுதான் மோடியின் இன்றைய லட்சியம். அப்படித்தான் அவரும் ஓடிஓடி உழைக்கிறார் ,இதன் பலன் அடுத்து அவரே வந்தால்தான் நமக்கு கிடைக்கும் அல்லது இத்தாலி கும்மல் வந்தால் மறுபடியும் அவர்களின் கொள்ளை ராஜ்ஜியம் இந்தியனின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும்....
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
30-மார்-201918:15:57 IST Report Abuse
Malick Rajaமரணம் ராக்கெட் வேகத்தில் துரத்திவருவதை உணராத பல அறிவிலி மனிதர்களும் வாழ்வதும் இயற்கைத்தான் .. எவ்வளவு ஆசை பதவிக்கு .... துரத்திவருவதை மறந்துவிட்டு ......
Rate this:
Ramesh - Bangalore,இந்தியா
01-ஏப்-201914:53:20 IST Report Abuse
Rameshpeople were/are not understanding meaning of GOD and RELIGION for last 1400 /2000 years...To increase the mere NUMBERS in the name of religion KILLING is /was happening ...What to say for BRAINLESS people...What to SAY....Oh REAL GOD...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X