1 ஓட்டு..; 20 அதிகாரிகள்!

Added : மார் 26, 2019
Advertisement

வட கிழக்கு மாநிலம், அருணாச்சல பிரதேசத்தில், சிறிய கிராமமான, மாலோகாம், இந்த தேர்தலில் வினோதமானதாக கருதப்படுகிறது. இக்கிராமத்தில், சோகேலா தயாங், 39, என்பவர் மட்டுமே வசிக்கிறார். இவர் ஒருவரின் ஓட்டுக்காக, இங்கு ஓட்டுச்சாவடி அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 20 அதிகாரிகள், ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் பிற பொருட்களுடன், 6 கி.மீ., நடந்து செல்ல வேண்டும்.

தயாங், காலையிலேயே ஓட்டளித்தாலும், தேர்தல் ஆணைய விதிமுறைப்படி, அதிகாரிகள் மாலை, ஓட்டுப்பதிவு முடியும் வரை காத்துஇருக்க வேண்டும். கடந்த பொதுத் தேர்தலில், தயாங் உடன் அவர் கணவரும் இருந்ததால், இருவரும் வாக்களித்தனர். இம்முறை, கணவர், வேறு தொகுதியில் வாக்காளராக பெயரை பதிவு செய்து கொண்டார். அதனால், ஒரே ஒரு ஓட்டுக்காக, தேர்தல் அதிகாரிகள், பல சிரமங்களுக்கு இடையே மாலோகாம் செல்ல உள்ளனர்.

சீன எல்லை அருகே அமைந்து உள்ள அருணாச்சல பிரதேசத்தில், பல இடங்களில், வாக்காளர் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது. எட்டு ஓட்டுச்சாவடிகளில், 10க்கும் குறைவான வாக்காளர்களே உள்ளனர். வாக்காளர், 2 கி.மீ., துாரத்திற்கு மேல் பயணம் செய்யாத வகையில், ஓட்டுச் சாவடி அமைக்க வேண்டும் என, தேர்தல் ஆணைய விதிமுறை கூறுகிறது. ஆனால், மலைப்பாங்கான இங்கு, இந்த விதிமுறைகள் எதுவும், செல்லுபடியாகாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X