என்.டி.ஆர்., மகளுக்கு பா.ஜ., வழங்கிய, 'சீட்'

Added : மார் 26, 2019 | கருத்துகள் (6)
Advertisement
என்.டி.ஆர்., மகளுக்கு பா.ஜ., வழங்கிய, 'சீட்'

பா.ஜ.,வின் முதல் வேட்பாளர் பட்டியலில், முன்னாள் மத்திய பெண் அமைச்சர், புரந்தேஸ்வரி, 60, பெயர் இடம்பெற்று உள்ளதால், அவரின் குடும்பத்தினர் நிம்மதி அடைந்து உள்ளனர்.

ஏப்., 11ல், லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலையும் சந்திக்க உள்ள ஆந்திராவில், பா.ஜ., சார்பில் போட்டியிடும், 184 பேர் அடங்கிய முதல் வேட்பாளர்கள் பட்டியலை, அக்கட்சி மேலிடம் வெளியிட்டது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி பெயர் இடம் பெற்றுள்ளது, என்.டி.ஆர்., குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புரந்தேஸ்வரி, 2014ல் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தார். அப்போது, கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். தற்போது, விசாகப்பட்டினம் தொகுதி வேட்பாளராக, புரந்தேஸ்வரியை, பா.ஜ., மேலிடம் அறிவித்துள்ளது. ஐந்தாண்டுகளாக வேறு கட்சிக்கு மாறாமல், பா.ஜ.,விலேயே இருக்கும் அவரையும், என்.டி.ஆரையும் கவுரவப்படுத்தும் விதமாக, அவருக்கு மீண்டும், 'சீட்' வழங்கப்பட்டுள்ளது. எனினும், வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
28-மார்-201910:33:26 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> best wishes புறந்தரேஸ்வரி . காங்கிரேஸ்போல பிஜேபியே ஏவாளும் கொள்ளை அடிக்கவேமுடியாது நேர்மையா இருப்பீங்க என்று நம்பறேன் நாடுமுழுக்க பிஜேபி யேதான் ஆளனும் நாடுநண்ணா செழிக்கவேண்டும் நல்லாயிருக்கணும் என்று பெருமாளை வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-மார்-201908:31:45 IST Report Abuse
Srinivasan Kannaiya சீட் கொடுக்கவில்லை என்றால் மோடியை வறுத்து பொறித்து எடுத்து இருப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-மார்-201908:30:56 IST Report Abuse
Srinivasan Kannaiya அதில், முன்னாள் மத்திய அமைச்சர் புரந்தேஸ்வரி பெயர் இடம் பெற்றுள்ளது, என்.டி.ஆர்., குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணம் பதவி எவ்வளவு மகிழ்வை ஏற்படுத்துகிறது கண்டீர்களா
Rate this:
Share this comment
Ram Sekar - mumbai ,இந்தியா
26-மார்-201910:22:39 IST Report Abuse
Ram Sekar//...பணம் பதவி எவ்வளவு மகிழ்வை ஏற்படுத்துகிறது கண்டீர்களா..//...ஆக, ஸ்ரீநிவாசன் கன்னையா சொல்றது என்னன்னா, காங்கிரஸ், திமுக, மதிமுக கட்சியில் போட்டியிடும் யோக்கியர்கள், கட்சி தலைமைகள் நல்லவர்கள் "பணம், பதவி"கு ஆசைப்படாதவர்கள். ஜால்றா அடித்து பேசும்னா, என்னா வேணாம்னாலும் பேசுவியாப்பா??...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X