அரசியல் செய்தி

தமிழ்நாடு

குளங்கள், கால்வாய்களை தூர்வாரினேன்

Updated : மார் 26, 2019 | Added : மார் 26, 2019 | கருத்துகள் (96)
Advertisement

நள்ளிரவில், காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிட வேண்டியதன் அவசியம் ஏன்?
வேட்பு மனு தாக்கல் செய்ய, அவகாசம் இல்லை என்பதால், நள்ளிரவில் பட்டியல் வெளியிடப்பட்டது.


வேட்பாளர் தேர்வு பட்டியலில், சிறுபான்மை சமூகத்தினருக்கு, பிரதிநிதித்துவம் தரவில்லை என்ற, விமர்சனம் எழுந்திருப்பது பற்றி?
தேசிய அளவில், பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், முஸ்லிம் லீக் கட்சிக்கு, ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதச் சார்பற்ற இயக்கத்தை, சிறுபான்மையினர் சமூகத்தினர் தான் வளர்க்கின்றனர்; உறுதுணையாக இருக்கின்றனர்.

கிறிஸ்தவர், முஸ்லிம்களுக்கு, 'சீட்' வழங்காதது, பெரும்பான்மையான ஹிந்துக்களின் ஓட்டுகளை கவருவதற்காக தான் என்ற, பேச்சு எழுந்துள்ளதே?
அப்படி இல்லை. அந்தந்த தொகுதிகளில், வெற்றி வேட்பாளர் என்ற, தகுதியின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

'கன்னியாகுமரி தொகுதிக்கு, வசந்தகுமார் வருவது, சீசனுக்கு வரும் பறவையை போல' என, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்திருப்பது பற்றி?
நான், சீசன் பறவை அல்ல; மண்ணின் மைந்தன். என் சொந்த மாவட்டமான, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், 1,500 பேருக்கு, ஆண்டுதோறும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட, ஏழை மாணவ --மாணவியரின் படிப்புக்கு, நிதியுதவி தருகிறேன். வெளிநாடுகளில், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கும், ஊக்கத் தொகை அளிக்கிறேன். மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு, பரிசு வழங்கி ஊக்குவிக்கிறேன். 'ஒக்கி' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, காங்., தலைவர் ராகுல் ஆறுதல் கூறுவதற்காக, அவரை அழைத்து வந்தேன். நிவாரண பணிகளுக்கு ஏற்பாடு செய்தேன். இப்படி மக்கள் நலனுக்காக, பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறேன்; தொடர்ந்தும் செய்வேன்.

காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை, ஸ்டாலின் ஒதுக்கவில்லை என்ற, வருத்தம் இருக்கிறதா?
இருப்பது, 40 தொகுதிகள். அதில், 20 தொகுதிகள், கூட்டணிக்கு தரப்பட்டுள்ளன. நியாயமான முறையில், ஸ்டாலின், தொகுதிகளை ஒதுக்கி தந்துள்ளார். எந்த மன வருத்தத்திற்கும் இடமில்லை.

கமல், உங்கள் அணிக்கு வராதது ஏன்?
விருப்பம் உள்ளவர்களை தான் சேர்க்க வேண்டும். இழுத்து பிடிப்பது எல்லாம், கூட்டணிக்கு சரியாக வராது.
உங்களுக்கு, வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
மக்களுக்கு, மத்திய -மாநில அரசுகள் மீது, கடும் வெறுப்பு உணர்வு ஏற்பட்டிருக்கிறது. தாங்கள் விரும்பும் மதத்தை பின்பற்றவும், வழிபடவும், தடை செய்வதாக, மக்கள் கருதுகின்றனர். படித்த இளைஞர்களுக்கு, ஐந்து ஆண்டுகளாக, பிரதமர் மோடி வேலை கொடுக்கவில்லை. அவர்களை, பக்கோடா விற்க சொல்கிறார். எனவே, பொதுமக்களும், இளைஞர்களும் சேர்ந்து, பிரதமர் மோடியுடன், பொன்.ராதாகிருஷ்ணனையும் தோற்கடிப்பர்.

கன்னியாகுமரியில் போட்டியிட, 56 பேர் விருப்பம் தெரிவித்ததில், உங்களை தேர்வு செய்ததில், 'சிதம்பர ரகசியம்' உண்டா?
கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தனித்து போட்டியிட்ட போது, வெற்றி பெறுவது கடினம் என தெரிந்தும், நான் போட்டியிட்டேன். 2 லட்சத்து, 44 ஆயிரத்து, 244 ஓட்டுகள் பெற்றேன். கட்சியில், எத்தனையோ பிளவுகள் வந்தபோது, சோனியா, ராகுல் தலைமையில் தொடர்ந்து பணியாற்றுகிறேன்; விசுவாச தொண்டனாக இருக்கிறேன். காங்கிரசில் இருப்பதே பெருமை; காங்கிரசை வளர்ப்பதே கடமை என்பது தான், என் உயிர்மூச்சு.

செயல் தலைவருக்கும், எம்.எல்.ஏ.,வுக்கும், 'சீட்' வழங்கக் கூடாது என்ற எதிர்ப்பை மீறி, உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது பற்றி?
தாமிரபணி ஆற்றில் மிகையாக வரும் தண்ணீர், கடலில் கலப்பதை தடுத்து, கருமேனியாறு, பச்சையாறு, நம்பியாற்றை இணைக்கும் திட்டத்தை, 369 கோடி ரூபாயில் செயல்படுத்த, நடவடிக்கை மேற்கொண்டேன். நாங்குநேரி சட்டசபை தொகுதியில், 50 குளங்கள், கால்வாய்களை, என் சொந்த செலவில் துார் வாரி, நீர்வரத்து கால்வாய்களை செப்பனிட்டுள்ளேன். சட்டசபை தொகுதிக்கு செய்திருக்கும் சாதனையை பார்த்து தான், லோக்சபா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. தமிழக காங்கிரஸ் வரலாற்றில், முதல் முறையாக, எம்.எல்.ஏ.,வாக இருப்போருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது; அதை, பெருமையாகவே கருதுகிறேன்.

தேர்தல் பிரசாரத்தில், எதை முன்னிலைப்படுத்த திட்டமிட்டிருக்கிறீர்கள்?
மத்திய அரசின், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., வரி, வேலை இல்லா திண்டாட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, 'காஸ்' சிலிண்டர் மானிய தொகையை வங்கியில் செலுத்துவதால் உருவாகும் குளறுபடி, உள்ளூர் மக்கள் பிரச்னை பற்றி பேசுவேன். 'ஹிந்து மாணவர்களுக்கு, கல்வி உதவி தொகையை, மத்திய அரசிடம் போராடி வாங்கி தருவேன்' என, பொய் வாக்குறுதி அளித்த, பொன்.ராதாகிருஷ்ணனின், செயல்படுத்தாத விஷயங்களையும் சொல்லி, ஓட்டு சேகரிப்பேன்.

பிரதமர் வேட்பாளராக, ராகுலை, ஸ்டாலின் முன்மொழிந்தது போல், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முன்மொழியாமல் இருப்பது பற்றி?
ராகுலை, பிரதமர் வேட்பாளராக, ஸ்டாலின் முன்மொழிந்து விட்டார். மற்ற தலைவர்களும், ராகுலை ஏற்க தயாராக உள்ளனர். பிரதமர் பதவியில் இருந்து, மோடியை அகற்றுவது தான், பிரதான கொள்கையாக, கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு உள்ளது.

பிரதமர் மோடி - ராகுல் ஒப்பிடுக?
ராகுல், கள்ளம் கபடமில்லாதவர். அதிகாரத்தில், அனைவருக்கும் பங்கு கிடைக்க வேண்டும் என, கருதுபவர். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து, அவர்களின் நண்பனாக திகழ்கிறார். வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு, மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படும் எனக்கூறி, ஏழை பங்காளனாக விளங்குகிறார். மீனவர்களுக்கு, தனி அமைச்சகம் தருவேன் எனக்கூறி, மீனவர்களின் நண்பனாக செயல்படுகிறார். பிரதமர் மோடி, பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார். தன்னிடம் மட்டும், அதிகாரம் குவிந்திருக்க வேண்டும் என, கருதுவார்.

- ஹெச்.வசந்தகுமார், தமிழக, காங்., செயல் தலைவர்
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
27-மார்-201903:53:47 IST Report Abuse
meenakshisundaram ஏன் ?பக்கோடாவை உங்களாலே 'தவணை' முறையிலே விக்க முடியாதா? அதுதான் மோடி மேலே கோபமா?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
27-மார்-201900:54:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அசோகர் மரத்தை நட்டார்.. டாக்ட்டர் தாசர் மரம் வெட்டினார்.. சோழர், பாண்டியர் ஆறு குளம் வெட்டினார்கள். அதிமுக காரன் கிரானைட்டை வெட்டி கடத்தினான். மணலை கொள்ளையடிச்சி ஆத்தை மலடாக்கினான். ஒரு இடம் விடாமே ஆக்கிரமிச்சான்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
26-மார்-201920:28:26 IST Report Abuse
Natarajan Ramanathan Dyanora, Solidaire, Videocon போன்ற விலை மலிவான லோக்கல் டிவி கம்பெனிகள் மூடப்பட்டதே இவரால்தான் என்பது இங்கே எத்தனை பேருக்கு தெரியும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X