அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஆண்களை போல வீரம் பெண்களை போல ஈரம்'

Added : மார் 26, 2019
Advertisement
 'ஆண்களை போல வீரம் பெண்களை போல ஈரம்'

மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிட, 'பாரதி கண்ணம்மா அறக்கட்டளை'யைச் சேர்ந்த திருநங்கை பாரதி கண்ணம்மா, வேட்பு மனு தாக்கல் செய்தார். திருநங்கையருக்கான பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வேட்பு மனு தாக்கல் செய்ய, மீனாட்சி அம்மன் வேடமணிந்து வந்தார்.

அவருடன், ஒருவர் பர்தாவும், மற்றொருவர் கிறிஸ்தவ டாலரும் அணிந்து வந்திருந்தனர். 'இன்று நாட்டில் எல்லா ஆண்ட கட்சிகளும் சரி; ஆளும் கட்சிகளும் சரி, மதச்சார்பின்மை பற்றி பேசுகின்றன. ஆனால், உண்மையான மதச்சார்பற்ற தன்மையை, திருநங்கையரால் மட்டுமே வழங்க முடியும். இதற்காக என்னை ஆதரிக்க வேண்டும்' என, தெரிவித்தார் பாரதி கண்ணம்மா.

அவர் மேலும் கூறியதாவது: யார், யாரோ ஆட்சிக்கு, பதவிக்கு வருகின்றனர். ஆனால், வறுமை ஒழிந்தபாடில்லை. எல்லாருக்கும் சமூக நீதி கிடைத்தபாடில்லை. திருநங்கையரை பொறுத்தவரை ஜாதி, இனம், மதம், மொழி வேறுபாடில்லை. எங்களுக்கு ஆண்களை போல வீரம், பெண்களை போல ஈரம் உண்டு. அதனால், இந்த முறை, திருநங்கை ஒருவரை, எம்.பி.,யாக்க, வாக்காளர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X