அரசியல் செய்தி

தமிழ்நாடு

சும்மா இருந்தாலும் வழக்கு: புலம்பும் அ.ம.மு.க., வேட்பாளர்

Added : மார் 26, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை, அ.ம.மு.க., வேட்பாளராக, முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன், டேவிட் அண்ணாதுரை நிறுத்தப்பட்டு உள்ளார். அ.தி.மு.க., சார்பில், ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ.,வின் மகன் ராஜ்சத்யன், தி.மு.க., கூட்டணியில், மார்க்சிஸ்ட் வேட்பாளரான, எழுத்தாளர், சு.வெங்கடேசன் போட்டியிடுகின்றனர். இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.அ.தி.மு.க.,வின் ஓட்டுகளை, டேவிட் அண்ணாதுரை பிரிப்பார் என்பதால், பல
 சும்மா இருந்தாலும் வழக்கு: புலம்பும் அ.ம.மு.க., வேட்பாளர்

மதுரை, அ.ம.மு.க., வேட்பாளராக, முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன், டேவிட் அண்ணாதுரை நிறுத்தப்பட்டு உள்ளார். அ.தி.மு.க., சார்பில், ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ.,வின் மகன் ராஜ்சத்யன், தி.மு.க., கூட்டணியில், மார்க்சிஸ்ட் வேட்பாளரான, எழுத்தாளர், சு.வெங்கடேசன் போட்டியிடுகின்றனர். இங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

அ.தி.மு.க.,வின் ஓட்டுகளை, டேவிட் அண்ணாதுரை பிரிப்பார் என்பதால், பல வழிகளில், அவருக்கு ஆளுங்கட்சி தரப்பில் இருந்து மறைமுகமாக நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. அதிலொன்று, தேர்தல் விதிகளை மீறியதாக தொடர் வழக்குப்பதிவு. பிரசாரத்தை துவக்கும் முன், டேவிட் அண்ணாதுரை, மதுரை கே.கே.நகரில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலை உட்பட, முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். இதற்கு எந்த அனுமதி யும் பெறவில்லை எனக்கூறி, அண்ணாநகர், தல்லா குளம், விளக்குத்துாண் போலீசார், அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல, பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில், பட்டாசு வெடித்து, அவருக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இதற்கும், வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இத்தேர்தலில், தமிழகத்தில் முதன்முறையாக, அ.ம.மு.க., வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது, மதுரையில் மட்டும் தான்.

இது குறித்து புலம்பிய டேவிட் அண்ணாதுரை, ''சும்மா நடந்து சென்றாலே, என் மீதும், தொண்டர்கள் மீதும் வழக்கு போடும் தேர்தல் கமிஷன், பண பட்டுவாடாவை வாக்காளர்களிடத்தில் மேற்கொள்ளும், ஆளுங்கட்சியினரிடம், மென்மையான போக்கை கடைப்பிடித்து வருவது வருத்தத்திற்குரியது,'' என, ஆதங்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-மார்-201907:50:30 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அம்புட்டு பயம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X