மக்கள் விருப்பமும், அரசியல்வாதிகள் தந்திரமும்

Updated : மார் 26, 2019 | Added : மார் 26, 2019 | கருத்துகள் (41)
Advertisement

லோக்சபா தேர்தலை, நாடு சந்திக்க உள்ள நிலையில், பொதுமக்களின் கவனம் முழுவதும், அரசியலின் பக்கம் திரும்பி உள்ளது. மக்கள், தங்கள் பிரச்னைகளில் இருந்து விலகி, 'தேர்தல் என்பது, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும், பிரமாண்ட திருவிழா' என, கருதும் வகையில், திசை திருப்பப்படுகின்றனர்.


தேர்தலில் வேட்பாளராகும் வாய்ப்பு, பணம் படைத்தோர், வாரிசுகள், கட்சியின் உண்மையான தொண்டர்கள் என, இவர்களில் யாருக்கு கிடைக்கிறது; பெண்களுக்கு போதிய வாய்ப்பு தரப்படுகிறதா; அறிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளனவா; புதிதாக அறிவித்த இலவச திட்டங்கள் என்ன என்பவை பற்றி, பொதுமக்களும், ஊடகங்களும் விவாதிக்கின்றன. அதேபோல, தேர்தலில் பணக்காரர்களின் மறைமுக முதலீடு, ஊழல், ஓட்டுக்கு பணம் பட்டுவாடா, பொருந்தா கூட்டணி என, ஜனநாயகத்தின் அடிப்படைகளை ஆட்டம் காணச் செய்யும், பல கருத்துக்கள் குறித்த விவாதங்களும் தேவை தான்.


உண்மை நிலை என்ன?


ஆனால், சாதாரண மக்களின் வாழ்வியலுக்கு தேவையான பிரச்னைகள் அலசப்படுவதில்லை என்பதே உண்மை. அவர்களின் நியாயமான விருப்பங்கள், வாழ்க்கை தேவைகள் பற்றி, இங்கே விவாதிக்கப்படுவது இல்லை. அவர்களுக்கு தெரியாமலேயே, அவர்களின் விருப்ப பட்டியலில், மதுவும், புகை பொருட்களும் இடம் பிடித்து விடுகின்றன. மக்கள் தங்கள் விருப்பங்களை பற்றி பேசாவிட்டாலும், தேர்தல் நேரத்தில், அரசியல்வாதிகள், அவர்களின் விருப்பங்களை எல்லாம், மூளைச் சலவை செய்து, மக்களிடம் புகுத்தி விடுவர்; புகுத்தியும் வருகின்றனர்.

நாட்டில் அதிகம் பேர் விவசாயிகளாக உள்ளனர்; அவர்களின் விருப்பம் இது தான்: நீர் ஆதாரங்களைப் பெருக்க வேண்டும். கூலி விவசாயிகளுக்கு, காணி நிலமாவது வேண்டும். விளை பொருட்களின் விலையை, விவசாயிகளே நிர்ணயிக்க வேண்டும். இடுபொருள் செலவை குறைத்து, இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வேண்டும். பெரிய அறக்கட்டளைகளால் முடக்கப்பட்டோ, முறையாக பராமரிக்கப் படாமலோ உள்ள கோவில் நிலங்களை மீட்டு, ஏழை கூலிகளுக்கு, விவசாயம் செய்ய வழங்க வேண்டும். சீனாவை போல, நிலமற்ற கூலி விவசாய முறை ஒழிக்கப்பட வேண்டும்.

ஒரு குடும்பத்தினர், அதிகபட்சம், 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் வகையில், சட்ட திருத்தம் வேண்டும். இது விவசாயிகள் விருப்பம். ஆனால், அரசியல்வாதிகளும், ஆள்வோரும், விரும்புவது என்ன... நிலம், 45 ஏக்கர் வைத்திக்கும் விவசாயிகளை தேடிப்பிடித்து, பண்ணை முறை விவசாயம் வாயிலாக, உற்பத்தியைப் பெருக்கி, உணவு தன்னிறைவு பெற்ற நாடாக்க வேண்டும். உணவு உற்பத்திக்கு, நவீன விதை, உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்த வேண்டும். கூலி விவசாயிகளுக்கு, நிலம் வழங்க வேண்டிய அவசியமில்லை.


150 நாட்கள் போதும்:


அதற்கு பதிலாக, மத்திய அரசிடம் இருந்து பெற்று, 1.5 லட்சம் கோடி ரூபாய் செலவில், ரேஷன் அரிசியும், 150 நாட்கள் வேலையும் வழங்கினால் போதும். விவசாயிகள் விலை நிர்ணயம் செய்வதற்கு பதில், அவர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு, 6,000 ரூபாய் பணம் செலுத்தலாம். இது தான் அரசியல் வாதிகள் கணக்கு. கோவில் நிலங்களை பற்றி பேச தேவையில்லை என்ற நிலைப்பாட்டில், அரசியல் கட்சிகள் உள்ளன.

'காவிரி, முல்லை பெரியாறு பிரச்னைக்காக போராடுவோம். ஆனால், வீணாக கடலில் கலக்கும் மழை நீரை தேக்கவோ, மணல் அள்ளும் மாபியாக்களை தடை செய்யவோ, திட்டம் தீட்ட மாட்டோம். நீர்நிலைகளை துார் வார நிதி ஒதுக்க மாட்டோம்' என்ற நிலையில் தான், அரசியல்வாதிகள் உள்ளனர். படிப்புக்கேற்ற, நிரந்தரமான வேலைக்கு, பென்ஷன் போன்ற பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். ஆனால், ஒப்பந்த அடிப்படையில், ஓய்வூதியம் இல்லாத, தற்காலிக வேலை தான் வழங்கப்படுகிறது.


பெண்கள் :


பெண்கள், சுக பிரசவத்துக்கு ஆசைப்படும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சை வழியாக, குழந்தையை எடுக்கும் முறை அதிகரித்து விட்டது. விவசாயத்தில் உள்ள, சுய உதவிக் குழு பெண்கள், விவசாய நிலம் கேட்கின்றனர். ஆனால், அரசோ, சுழல்நிதி தருகிறது. கிராம பெண்கள், அவர்களுக்கான தொழிற்சாலைகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவற்றை கேட்கின்றனர். அரசோ, 'மைக்ரோ கிரெடிட்' என்ற கைச்செலவு தொகையை, கடனாக கொடுக்கிறது. இப்படித்தான், துறைவாரியாக, மக்களின் விருப்பமும், அரசு மற்றும் அரசியல்வாதிகளின் தந்திர செயல்பாடுகளும், ஏட்டிக்கு போட்டியாகவே இருக்கின்றன. எனவே, தங்களின் பிரச்னைகள் மற்றும் விருப்பங்களை, அரசியல்வாதிகளிடம் தொடர்ந்து முன்வைத்து பெறும் வலிமை, மன உறுதி, போராட்டத்தை முன்னெடுக்கும் விழிப்புணர்வு, மக்களிடம் அதிகரிக்க வேண்டும். மக்களின் விருப்பங்கள் சார்ந்த, தேர்தல் அறிக்கை தான், உண்மையான ஹீரோவாக இருக்க முடியும்.

- சிவகாமி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி

Advertisement


வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
26-மார்-201917:57:54 IST Report Abuse
M S RAGHUNATHAN I wish to ask the IAS officer whether she can honestly say that there was no corruption in the departments where she worked and she eradicated corruption in her department. If she had not done this then she has no right to criticize others. Is she aware of the fact that how members of her community misused the PCR act by filing complaints against sincere and honest persons. Has she ever spoken about this atrocities. If the IAS officers had been honest then none of the water resources would have been encroached. May be some or honest. But not preventing the illegal acts of the subordinates or high officials and ministers they have disappointed the country and are equally culpable. Can Ms Sivagami cite instances where she refused to obey the illegal directions of the superior officers or ministers and took action against those who were part and parcel of the corruption mafia
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
26-மார்-201916:02:22 IST Report Abuse
Natarajan Ramanathan ஒருசின்ன உதாரணம் சொல்றேன். விவசாயிக்கு முருங்கை அதிகம் (100கிலோ) விளைந்தால் கிலோ இருபது ரூபாய் வீதம் நூறு கிலோவுக்கு 2,000 கிடைக்கும். அதுவே விளைச்சல் குறைந்து இருபது கிலோ காய்தான் விளைந்தது என்றால் அப்போதும் கிலோ நூறுரூபாய் என்று விலை ஏறி 2,000 ரூபாய் கிடைத்துவிடும். இடைத்தரகர்கள் (பெரும்பாலும் கட்சிக்காரர்கள்) இல்லாதவரை நஷ்டம்இல்லை
Rate this:
Share this comment
Cancel
kadhiravan - thiruvaroor,இந்தியா
26-மார்-201914:10:00 IST Report Abuse
kadhiravan காங்கிரஸ் வந்தால் அனைத்தும் சரியாகும்
Rate this:
Share this comment
E.V. SRENIVASAN - Muscat,ஓமன்
26-மார்-201914:50:11 IST Report Abuse
E.V. SRENIVASANஆமாம், அனைத்தும் (Bold & underlined) சரியாகி விடும். ஸ்விஸ் கணக்கில் சில பல கோடிகளும் ஏறிவிடும். 150 நாட்கள் வேலை திட்டத்தில் இறந்தவர்கள் எல்லாம் உயிர் பெறுவார். தினக்கூலி வாங்குவர். அவர்ளின் ரேஷன் கார்டுகள் தோன்றும், அதன் வகையில் பல பொருட்கள் திருடப்பட்டு சந்தையில் விற்கப்படும். பல ஒழித்து கட்டப்பட்ட NGO க்கள் மீண்டும் பிறக்கும், அதனால் வெளிநாட்டுப் பணம் வந்து மதமாற்றம் ஜரூராக நடத்தப்படும். எல்லாமே சரியாகிவிடும். மக்கள் மட்டும் விரல் சூப்பி அடுத்து அரசாங்கம் அவசியமானதே தவிர்த்து, எதாவது இலவச பிச்சை போடாதா என்று பார்த்துக்கொண்டு இருப்பர்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X