மானாமதுரையில் ரூ 1.25 லட்சம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் ரூ 1.25 லட்சம் பறிமுதல்

Updated : மார் 26, 2019 | Added : மார் 26, 2019 | கருத்துகள் (1)
மானாமதுரை

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நகை கடை உரிமையாளரிடம் ரூ 1.25 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முதுகுளத்தூரைச் சேர்ந்தவர் நகை கடை உரிமையாளர் ரமேஷ்குமார். இவர் மதுரையிலிருந்து முதுகுளத்தூருக்கு காரில் செல்லும் போது மானாமதுரை கேப்பர் பட்டினம் அருகே வாகனச் சோதனையில் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த ரூ.1.25 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை தாசில்தார் மகேந்திரன் பறிமுதல் செய்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X