பாட்னா : பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையத்தில் போலி ஆவணங்களுடன் 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.
பிடிபட்ட பயங்கரவாதிகள் இருவரும் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. பி ன்னர் அவர்களிடமிருந்து 2 போலி வாக்காளர் அடையாள அட்டை , போலி பான் கார்டு , மெமரி கார்டு , 3 மொபைல் , கோல்கட்டா ,கயா, பாட்னா , டில்லி ஆகிய நகரங்களுக்கு செல்ல போலி ரயில் டிக்கெட் போன்ற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் சட்டப்பூர்வ ஆவணம் இன்றி நாட்டில் நுழைந்து, போலி வாக்காளர் அடையாள அட்டைகளை வாங்கியுள்ளனர் என விசாரணையில் தெரியவந்தது.ஏ.டி.எஸ். நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE