நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 45. இவரது மகன் நிஷ்வா,7. ஒழுகினசேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, நிஷ்வாவுடன், கிருஷ்ணகுமார் பைக்கில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். வடசேரி பள்ளிவாசல் அருகே வந்த போது, கிருஷ்ணகுமாரின் பைக் மீது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது. இதில், லாரியின் பின் சக்கரத்தில் விழுந்த, நிஷ்வா தலை நசுங்கி பலியானான். விபத்தில் படுகாயம் அடைந்த, கிருஷ்ணகுமார், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை நேரத்தில் நடந்த விபத்தால், வடசேரி பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு பின், போக்குவரத்து சீரானது. விபத்தை ஏற்படுத்திய டிரைவர் சுகுதேவன்,37 என்பவரை பிடித்து வடசேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE