அரசியல் செய்தி

தமிழ்நாடு

பார்லிமென்ட் செல்ல தகுதி என்ன?

Updated : மார் 27, 2019 | Added : மார் 27, 2019 | கருத்துகள் (19)
Advertisement

'லோக்சபாவில் பேச, ஆங்கிலம் முக்கியம். ஆங்கிலம் தெரியாமல், லோக்சபாவுக்கு போவதைவிட, வீட்டில் அமைதியாக இருந்து விடலாம். என் மகன் நன்றாக, ஆங்கிலம் பேசுவான். லோக்சபாவில் மிகச் சிறப்பாக, ஆங்கிலத்தில் பேச போகிறான். என் மகனை போல, மற்ற வேட்பாளர்களால், ஆங்கிலம் பேச முடியுமா...' என, தி.மு.க., பொருளாளர், துரைமுருகன் சவால் விடுத்துள்ளார். அவரது சர்ச்சை பேச்சுக்கு ஆதரவாகவும், எதிராகவும் எழுந்துள்ள கருத்துக்கள்:ஹிந்தி தெரிந்தால் பிழைக்கலாம்:


தமிழக அரசியல் களத்தில், நல்ல தமிழ் பேச்சாற்றலுடன் விளங்கியவர்கள், திராவிட அமைப்பை சார்ந்தவர்கள். காங்கிரசிலும், சத்தியமூர்த்தி, குமரி அனந்தன் போன்றவர்கள் விதி விலக்கு. தமிழ் மொழி ஆற்றலுடன் இருப்பது, சாலச் சிறந்தது. அதேசமயம், தமிழ் புலமையுடன், ஆங்கில புலமையும், ஹிந்தி புலமையும் இருப்பதும் நல்லது. ஆனால், தாய்மொழி பற்று இல்லாமல், வேறு மொழிகளுக்கு, அடிமைத்தனமாக இருக்கக் கூடாது. உலகளாவிய அளவில், ஆங்கிலம் தெரிந்திருந்தால், ஓரளவுக்கு தான் பயன்படும். திருத்தணி தாண்டிவிட்டால், ஹிந்தி பேச தெரிந்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்பது உண்மை. இந்த ஒரு உண்மையை சொன்னால் மட்டும் போதாது. மற்றொரு உண்மை மறைக்கப்பட்டுள்ளது.
ஹிந்தி மொழி தெரிந்தால், இந்தியாவில் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்ள முடியும். லோக்சபா, எம்.பி.,க்களில் சிலர், ஆங்கிலமும் தெரியாமல், ஹிந்தியும் தெரியாமல் ஊமைகளாக தவிக்கின்றனர். வெளிநாடுகளுக்கு தமிழர்கள் செல்வது குறைவு தான்; ஆனால், வடமாநிலங்களுக்கு, அதிகம் செல்கின்றனர். குறிப்பாக, வட மாநிலங்களில் உள்ள கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கும், சுற்றுலா செல்வதற்கும், தொழில் சம்பந்தமாக செல்வதற்கும் பயணிக்கின்றனர். அப்போது, ஹிந்தி தெரியாமல், முழிக்கிற அவல நிலை ஏற்படுகிறது. தமிழகத்தில் இருப்பதால் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். இந்தியாவில் இருப்பதால், ஹிந்தியும் தெரிந்திருந்தால் நல்லது.

ஆங்கிலேயரிடமிருந்து தப்பி, பிரான்ஸ் நாட்டின் எல்லைக்குள் நுழைந்த, இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரசாவர்க்கரை, திருடன் பட்டம் கட்டி, இங்கிலாந்து போலீஸ் அதிகாரிகள் அழைத்து சென்றனர். அப்போது, சாவர்க்கருக்கு மட்டும் பிரெஞ்சு மொழியும், பிரான்ஸ் அதிகாரிகளுக்கு, ஹிந்தியும் தெரிந்திருந்தால், அந்தமான் சிறையில், சாவர்க்கர் அடைபட நேர்ந்திருக்காது. இந்தியாவின் வரலாறே மாறியிருக்கும். ஆங்கிலம் தெரிந்தால் நல்லது என, துரைமுருகன் கூறியுள்ளார். ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியாவுக்கு நல்லது. இதை, துரைமுருகன் ஏற்றுக் கொள்வாரா?

- இல.கணேசன், பா.ஜ., தேசியக்குழு உறுப்பினர்


ஆங்கிலம் அடிப்படை தேவை:


லோக்சபாவில், தமிழ் மொழி தெரிந்தவர்கள், 40 எம்.பி.,க்கள் தான் இருப்பர். பல்வேறு மொழிகள் பேசுகிற, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, எம்.பி.,க்களும் இருப்பர். தமிழில் பேசுகிற போது, உடனே, மற்ற, எம்.பி.,க்களிடம் போய் சேராது. ஆனால், தமிழில் பேசுவதை, ஒருவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பர். அவர் ஆங்கிலத்தில், மொழி பெயர்த்ததை, ஹிந்தியில் மொழி பெயர்ப்பர். அதற்கு தேவையான வசதி, லோக்சபாவில் உள்ளது.
ஆங்கிலம் தெரிந்தவர்களிடம், ஆங்கிலத்தில் பேசும் போது, எளிதாக மற்ற, எம்.பி.,யிடம் போய் சேர்ந்து விடுகிறது. நட்சத்திர அந்தஸ்து பெற்ற, எம்.பி.,க்கள் பெரும்பாலும், ஆங்கிலத்தில் பேசியவர்கள் தான். நேரு, பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேசினார். ராஜ்யசபா, எம்.பி.,யாக அண்ணாதுரை சென்ற போது, கன்னி பேச்சை ஆங்கிலத்தில் தான் பேசினார். 'திராவிட இயக்கத்தில் இருந்து வந்தவன் என, சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்' என, அண்ணாதுரை பேச துவங்கினார். பகல், 1:00 மணிக்கு, மதிய உணவுக்கு கூட்டம் நிறைவு பெறும். அண்ணாதுரை, 12:50 மணிக்கு தான் பேச துவங்கினார். அண்ணாதுரை பேச்சில் மயங்கிய நேரு, அவரை தொடர்ந்து பேச அனுமதிக்கும்படி, சபாநாயகரிடம் சமிக்ஞை செய்தார்.

அண்ணாதுரை, தன் பேச்சை, பகல், 1:20 மணிக்கு முடித்தார். பொதுவாக, லோக்சபாவில், எம்.பி.,க்கள் பேச காத்திருப்பது வழக்கம். ஆனால், அண்ணாதுரையின் பேச்சை கேட்க, லோக்சபாவே காத்திருந்தது வரலாறு. முரசொலி மாறன், நாஞ்சில் மனோகரன், வைகோ, கனிமொழி, திருச்சி சிவா போன்றவர்கள், தங்களின் ஆங்கிலத்தில் தான் உரையாற்றுகின்றனர். 'தாய் மொழியை தவிர, இன்னொரு மொழி தெரிந்து வைத்திருப்பது, வாழ்க்கை போராட்டத்தில், அவனுக்கு கிடைத்திருக்கும் இன்னொரு ஆயுதம்' என, காரல் மார்க்ஸ் கூறியுள்ளார். தமிழக பிரச்னை, உலக நாடுகள் பிரச்னைகள் பற்றி பேசுவதற்கு, ஆங்கில அறிவு இருக்க வேண்டும். துரைமுருகன், தன் மகனுக்கு, அந்த தகுதி இருக்கிறது என, சொல்லி ஓட்டு கேட்டுள்ளார். எம்.பி.,க்கு ஆங்கில அறிவு அடிப்படை தகுதி. ஆங்கிலத்தில் பேச தெரியாதவர்கள், சபையில், ஊமையாக அமர்ந்திருப்பர்.

- செல்வேந்திரன், முன்னாள், எம்.பி., டில்லி பிரதிநிதி, தேர்தல் பணிக்குழு மாநில செயலர், தி.மு.க.,

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajangam ganesan - lalgudi,இந்தியா
27-மார்-201916:34:22 IST Report Abuse
rajangam ganesan இவன் வயலில் புழுங்கரிசி விதைச்சவன்
Rate this:
Share this comment
Cancel
Karun Muruga - banglore,இந்தியா
27-மார்-201915:07:10 IST Report Abuse
Karun Muruga parliment pooga thaguthi enna minimam 1 kola 2 rap.. oorula katta panjayathu ... oora adichi olayila podanum 10 kudiyavathu keduthu irukkanum
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
27-மார்-201912:59:15 IST Report Abuse
இந்தியன் kumar தனது குடும்பத்தில் உள்ளவர்களை ஹிந்தி கற்க வைத்து ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தும் தலைவர்களை ஒதுக்க வேண்டும். மக்கள் நீங்கள் செய்வீர்களா???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X