அரசியல் செய்தி

தமிழ்நாடு

வலைதளத்தில் குறையாத கிண்டல்; பா.ம.க., வேட்பாளர்கள் கவலை

Updated : மார் 27, 2019 | Added : மார் 27, 2019 | கருத்துகள் (93)
Advertisement

சமூக வலைதளங்களில், ராமதாஸ், அன்புமணி குறித்த கிண்டல்கள் தொடர்வதால், பா.ம.க., வேட்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.


லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், முதலாவதாக இடம் பிடித்த, பா.ம.க., விழுப்புரம், சிதம்பரம், தர்மபுரி உள்ளிட்ட, ஏழு தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணி அமைந்ததுமே, பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்கும் முன், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க., ஆட்சியை கடுமையாக விமர்சித்தனர். கூட்டணிக்கு பின், அரசின் நடவடிக்கைகளை, பாராட்ட துவங்கியுள்ளனர். இது குறித்து, சமூக வலைதளங்களில், மீம்ஸ், வீடியோக்கள் வாயிலாக, கிண்டலடிக்கப்பட்டன. 'கேலி, கிண்டலை பற்றி கவலைப்படாமல், தொண்டர்கள், கட்சிப் பணியில் கவனம் செலுத்த வேண்டும்' என, ராமதாஸ் கூறினார். வேட்பு மனு தாக்கல் மற்றும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில், பா.ம.க., குறித்த கிண்டல்கள் குறையவில்லை.
முதல்வருடன், அன்புமணி பிரசார வாகனத்தில் செல்வதை கிண்டல் அடித்தும், ராமதாஸ், அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பொதுக்கூட்டத்தில் பேசுவதை விமர்சித்தும், மீம்ஸ்கள் அதிகம் வெளியாகின்றன. இருவரது பழைய பேச்சுக்களையும், தற்போதைய பேச்சுக்களை யும் இணைத்து, வீடியோக்கள் வெளியிடுவது அதிகரித்து உள்ளது. இளம் தலைமுறையினர் தான், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் கிண்டலடிக்கும் வீடியோக்கள், வேகமாக பரவி வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால், தங்களின் வெற்றி பெரிதாக பாதிக்கும் என, பா.ம.க., வேட்பாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

'சமூக வலைதளங்களில் பரவும் மீம்ஸ்களை, சட்டரீதியாக தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கட்சி தலைமையிடம், வேட்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக, ராமதாசும், அவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
30-மார்-201910:18:51 IST Report Abuse
S.Ganesan யாகாவாராயினும் நாகாக்க என்பது இவர்களுக்கு மிகச்சரியாக பொருந்தும்
Rate this:
Share this comment
Cancel
Muthuraj Richard - Coimbatore,இந்தியா
27-மார்-201917:41:04 IST Report Abuse
Muthuraj Richard மக்கள் முன் தலை காட்ட கூட வெட்கப்பட வேண்டிய விஷயம், முடிந்த அளவு கேவலமாக மேடை ஏறி அசிங்கப்படுத்திவிட்டு கூட்டணி சேருவதற்கு என்ன காரணம் சொன்னாலும் ஏற்க மனம் வராது, அன்புமணி மீது இருந்த நம்பிக்கை தவிடுபொடியாகி இருக்கிறது, பணமும் பதவியும் இவர்களை எந்த நிலைக்கும் தள்ளும் என்றது உறுதியாகி இருக்கிறது, தனியாக நின்றிருந்தால் கூட தோற்று போயிருந்தாலும் மதிப்பு குறைந்து இருக்காது, இவர்கள் ஆ தி மு க உடன் கூட்டணி சேர்ந்தது உறுத்தல் இல்லை ஆனால் கடந்த காலத்தில் அவர்களை திட்டிய விதம், குற்றசாட்டுகளை அடுக்கிய விதம் இதை எந்த கட்சிக்கு செய்திருந்தாலும் அது மக்களால் கேவலமாகத்தான் பார்க்கப்படும், மக்கள் தீர்ப்பளிப்பார்கள் வாழ்க தமிழகம்
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
28-மார்-201900:39:28 IST Report Abuse
Nallavan Nallavanதமிழக அரசியல் வரலாற்றிலேயே இந்தக் கேவலத்தை முதன் முதலில் செய்தது யாரென்று நண்பருக்குத் தெரிந்திருக்கும் ....... நேர்மை உணர்வுடன் அதையும் சேர்த்துக் குறிப்பிட்டிருக்கலாம் ..........
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
27-மார்-201915:44:55 IST Report Abuse
Nallavan Nallavan மோதி குஜராத்தில் வளர்ந்து வரும்பொழுதே அவரைத் தட்டி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் முடிவு செய்துவிட்டது ...... ஆனால் மோதி எப்பொழுது தேசிய அரசியலுக்கு வருவார் என்று காங்கிரஸ் உணரத் தொடங்கியதோ அப்பொழுதே மேலும் தீவிரமாக மோதி எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தீவிரமாகக் கட்டவிழ்த்தது ...... இதற்கு ஒரு உதாரணம் கோத்ரா ரெயில் எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட பச்சைகளுடன் காங்கிரஸ் புள்ளிகளுக்கு இருந்த தொடர்பு ....... மோதி மீது பல்வேறு வழக்குகள் ....... குஜராத் பாஜக -வில் அவருக்கெதிராக அதிருப்தி உண்டாக்குதல் ...... சாதிகளிடையே பிளவை ஏற்படுத்துதல் ....... உலகிலேயே ஆபத்தான மனிதர் மோதிதான் என்கிற ரீதியிலான பிரச்சாரம் ......... என்கவுன்ட்டர் விவகாரத்தில் போலீஸ் அதிகாரி விலைக்கு வாங்கப்பட்டார் ....... சிவகங்கைச் சீமான் அவரைப் பல முறை சந்தித்து பொய் வாக்கு மூலம் அளிக்கச் சொன்னார் ...... உச்சகட்டமாக ஒரு சக இந்தியக் குடிமகன் என்றும் பாராமல் மோதிக்கு அமெரிக்கா விசா வழங்கக் கூடாது என்று அமெரிக்காவுக்கு காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்கள் கையெழுத்துப் போட்டு மனு அளித்தனர் ........ (பின்ன, பாகிஸ்தானின் தீவிரவாதத்தை அடக்குங்கள் என்றா மனுச்செய்வார்கள்??) ......... ஆனால் மோதி தடைக்கல் அனைத்தையும் படிக்கல் ஆக்கினார் ...... இதற்கு அடிப்படைக்காரணம் ஒரு தனி மனிதரை வைத்துக்கொண்டு பூச்சாண்டி காட்டினால் மக்கள் அவர் "நிஜம்மாகவே ஆபத்தானவரா" என்று சிந்திக்கத் துவங்குகிறார்கள் (தமிழர்கள் விதிவிலக்காக இருக்கலாம்) ...... பாமக -வுக்கும் அதே வகையிலான சோதனைதான் ........ மோதியைப் போல பாமக -வும் மக்களின் அபிமானத்தைப் பெறலாம் ....... யார் கண்டது ??
Rate this:
Share this comment
Raja - Trichy,இந்தியா
30-மார்-201913:01:44 IST Report Abuse
Rajaநல்லவன் ரொம்ப நல்லவனாக கருத்து தெரிவித்துள்ளார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X