புதுடில்லி, ''பிரதமர் பதவியில் இருந்து வெளியேற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்ற பயம், நரேந்திர மோடியின் முகத்தில் நன்றாகவே தெரிகிறது,'' என, காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியதாவது:விண்ணில் செயற்கைக்கோளை, ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தில், இந்தியா சாதனை படைத்துள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்தார்இதற்காக, மக்களை, 45 நிமிடங்கள் காக்க வைத்தார். இந்த அறிவிப்பின் போது, பிரதமர் பதவியில் இருந்து வெளியேற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது என்ற பயம், அவரது முகத்தில் நன்றாகவே வெளிப்பட்டது.அனைவரது வங்கி கணக்குகளிலும், 15 லட்சம் ரூபாய், 'டிபாசிட்' செய்யப்படும் என, மோடி, பொய் வாக்குறுதி அளித்தார்.ஆனால், ஏழை மக்களுக்கான குறைந்தபட்ச வருமானம் வழங்கும் காங்.,கின் திட்டம் அப்படிப்பட்டது அல்ல. வறுமைகோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்; இது உறுதி.இவ்வாறு அவர் கூறினார்.