அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஏழை குடும்பத்திற்கு ரூ.72 ஆயிரம் இனாம்

Added : மார் 27, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை,''காங்கிரஸ் தலைவர் ராகுல் அறிவித்த, 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை, செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை, இருக்கிறது,'' என, முன்னாள் மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் கூறினார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:ராகுல், ஒரு புரட்சிகரமான திட்டத்தை அறிவித்திருக்கிறார். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள, ஒவ்வொரு குடும்பத்திற்கும், மாதம், 6,000 ரூபாய் வீதம், ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பது தான், இந்த திட்டம். நனவாகும்காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், இந்த திட்டம் இடம் பெற்றுள்ளது. கடைமனிதனின் கண்களில், வழியும் கண்ணீரை துடைப்பது தான் நோக்கம் என, மஹாத்மா காந்தி கூறினார். அவரது கனவு, ராகுல் அறிவித்த திட்டத்தின் வாயிலாக நனவாக்கப்படும்.மிகப் பெரும்பான்மையான மக்கள், ஏழ்மையிலிருந்து விடுபட்டிருக்கின்றனர். ஆனால், இன்னும் ஏழ்மை நீடிக்கிறது. அந்தக் குடும்பங்களை குறிவைத்து, இத்திட்டத்தை தயாரித்திருக்கிறோம்.25 கோடி பேர் நாட்டில், ஐந்து கோடி குடும்பங்கள், ஏழ்மையில் இருக்கின்றன. ஒரு குடும்பத்திற்கு, ஐந்து பேர் என்றால், 25 கோடி பேர், இந்த திட்டத்தில் பயனடைவர்.முதல் கட்டமாக, சோதனை அடிப்படையில், இத்திட்டம் செயல்படுத்தப்படும். பின், படிப்படியாக, ஐந்து கோடி குடும்பங்களும் இத்திட்டத்தில் இணைக்கப்படும். ஆட்சிக்கு வந்த மறுநாளே, இந்தத் திட்டம் அமலுக்கு வரும் என, யாரும் சொல்லவில்லை. செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை, எங்களுக்கு இருக்கிறது.கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், இத்திட்டத்தைச் செயல்படுத்தியிருக்க முடியாது. 1991ல், சிறந்த பொருளாதார கொள்கைகளை, காங்கிரஸ் கட்சி அமல்படுத்தியது.பின், 2004 முதல், 2014 வரையிலான, 10 ஆண்டுகளில், இந்திய பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து இருக்கிறது. அந்த வளர்ச்சி தான், எங்களுக்கு நம்பிக்கையை தந்திருக்கிறது.மேலும், மாநில வருமானங்களும் உயர்ந்து, ஐந்து ஆண்டுகளில் வருமானம் இரட்டிப்பாகி விடும். அதனால், இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும். பொருளாதார நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் அறிஞர்கள் கருத்தை கேட்டு தான், இந்த திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்த திட்டத்தை நிறைவேற்ற, தனி நிபுணர் குழு அமைக்கப்படும்.ஏற்கனவே, 100 நாள் வேலை உறுதி திட்டத்தை, காங்கிரஸ் அறிவித்த போது, எப்படி செயல்படுத்த முடியும் என, கிண்டல் செய்தவர்கள் உண்டு. அந்த திட்டத்தை, நாங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தினோம். அதேபோல, இதையும் வெற்றிகரமாக செயல்படுத்துவோம்.மதிப்பிட முடியாது'இந்த திட்டத்தை செயல்படுத்த சாத்தியம் இல்லை' என, ரிசர்வ் வங்கியின், முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் தெரிவிக்கவில்லை. ஆனால், 'திட்டத்தை கவனமாக செயல்படுத்த வேண்டும்' எனக்கூறி இருக்கிறார். இத்திட்டத்தில், பெண்களுக்கு வங்கி கணக்கு துவக்கப்பட்டு, அவர்களின் கணக்கில் பணம் செலுத்தப்படும்.எது சாத்தியம், எது சாத்தியம் இல்லை என்று, ஒரு திட்டத்தை வைத்து, மதிப்பிட முடியாது. ஏழ்மை ஒழிய வேண்டும் என்றால், குறைந்தபட்ச வருமானம், அந்த குடும்பத்திற்கு வேண்டும். அதற்காகத்தான், இந்த மானியத்தை வழங்குவதாக சொல்கிறோம். ஏப்., 2ம் தேதி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.இவ்வாறு, சிதம்பரம் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
28-மார்-201907:40:51 IST Report Abuse
Bhaskaran எப்படி பதினைந்து லட்சம் சாத்யமில்லையோ அதைபோல் இதுவும் சாத்தியமில்லை ஆளுக்கு ஆள் ஏமாத்தறாங்க கேக்கிறவன் எல்லோரும் கேனயன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X