அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
குடும்பத்தை மட்டுமே வளர்த்த கட்சி
தி.மு.க., மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

சென்னை, ''மத்திய அரசில் அங்கம் வகித்த, தி.மு.க., தமிழகத்திற்கு எதுவும் செய்யாமல், தன் குடும்பத்தின் தேவையை மட்டும், முழுமையாக நிறைவேற்றிக் கொண்டது,'' என, முதல்வர், இ.பி.எஸ்., குற்றம் சாட்டினார்.

குடும்பத்தை,மட்டுமே,வளர்த்த,கட்சி,தி.மு.க., மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர், இ.பி.எஸ்., சென்னை, கந்தன்சாவடி, சோழிங்கநல்லுார், திருப்போரூர், மாமல்லபுரம், தாம்பரம், பல்லாவரம், நங்க நல்லுார் பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:

நான், என் தந்தையின் தயவில், நேரடியாக பதவிக்கு வரவில்லை. கட்சியின் கிளைச் செயலராக இருந்து, படிப்படியாக முன்னேறி,

முதல்வராகி உள்ளேன்.அதனால், எனக்கு மக்கள் பிரச்னை புரியும். தென் சென்னை மக்களின் கோரிக் கையை நிறைவேற்றும் வகையில், பள்ளிக்கரணை யில்,ரூ.25 கோடியில், பல்நோக்கு சிறப்பு மருத்துவ மனை அமைய உள்ளது; அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

மத்தியில், நிலையான ஆட்சி இருந்தால் தான், நாடு வளம் பெறும். நாட்டின் வளர்ச்சிக்கு வலிமையான, பிரதமர் வேண்டும். அதற்கு தகுதியானவர், பிரதமர் மோடி.தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டணி மகத் தான வெற்றி பெறும். மத்திய ஆட்சியில், 15 ஆண்டு கள் அங்கம் வகித்த,தி.மு.க., தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை.அவர்களின் குடும்பத்திற்கு மட்டும், ஏராளமான பலன்களை தேடிக் கொண்டது.


கருணாநிதி குடும்பத்தினருக்கு, 40 தொலைக்காட்சி நிறுவனங்கள்,எட்டு பத்திரிகைகள் மற்றும் ஏராள மான நிறுவனங்கள் உள்ளன.தி.மு.க., கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி.


தி.மு.க.,வின், ஆர்.எஸ். பாரதி, தேர்தல் ஆணையத் தில் அளித்த புகார் காரணமாக, ஏழை மக்களுக்கு வழங்க வேண்டிய, ரூ.2,000 நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

தேர்தல் முடிந்தவுடன், அந்த தொகை வழங்கப் படும். ஏழைகளுக்கு தரும் நிதியுதவியை தடுக்கும்,ஒரே கட்சி, தி.மு.க., தான். தேர்தல் முடிந்த வுடன், 'டிவி' சேனல்களின் கட்டணம் குறைக் கப்படும்.

தி.மு.க.,வினர், எதையும் நேர்மையாக செய்ய மாட்டார்கள்; பிரியாணி கடை உரிமையாளர் துவங்கி, தாம்பரம் நகராட்சி ஊழியர் வரை, அனை வரையும் தாக்கி,அராஜகத்தில் ஈடுபட் டது தான்,அவர்களின் சாதனை. பல்லாவரத் தில் இருந்து, 20 கி.மீ., சுற்றளவில், சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
29-மார்-201909:28:52 IST Report Abuse

தமிழ்மைந்தன் பாவம்.....37 எம்.பிக்கள் இருந்தும் கட்சியின் நிதியை வளர்க்கவில்லை ...........ஊழலே செய்யவில்லை...........ஊழல்கம்பெனி மாதிரி திட்டங்களை போட்டு கொள்ளையடிக்க தெரியவில்லையே..............18 பேர் அடித்த கொள்ளையை கூட அடிக்க முடியாதவர்கள்.....இவர்களால் என்ன செய்யமுடியும்.............

Rate this:
Manithan - Chennai,இந்தியா
29-மார்-201908:36:14 IST Report Abuse

Manithanமோசமான தோல்வியை எதிர்பார்த்தோம், ஆனால் கிடைத்தது வெற்றிகரமான தோல்விதான். தேர்தல் முடிவுக்கு பின்னர் அதிமுக பேச்சு.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
29-மார்-201900:32:53 IST Report Abuse

Pugazh Vபல்லாவரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் இன்னொரு விமான நிலையமா? இதென்ன புதுப்பரளி? 37 அதிமுக எம் பி க்கள் என்ன செய்தார்கள் என்று சொல்ல ஏதுமில்லை. 5 வருடங்கள் முன்னால் இருந்த திமுக எம்.பி.கள் என்ன செய்தார்கள் என்று பேசுவது ம. தனமாக இருக்கிறது.

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X