அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,'டிபாசிட்' வாங்காது இளங்கோவன் பேச்சு

Added : மார் 27, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

பெரியகுளம், : ''ஓட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் அ.தி.மு.க.,வுக்கு 'டிபாசிட்' கிடைக்காது,'' என, தேனி லோக்சபா காங்., வேட்பாளர் இளங்கோவன் தெரிவித்தார்.பெரியகுளத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் இளங்கோவன் பேசியதாவது: தி.மு.க., கூட்டணி மக்களுக்கு நல்வாழ்வு தரவேண்டும் என நினைக்கிறது. எங்களிடம் பணம் கிடையாது. பா.ஜ., ஆட்சியில் ஜி.எஸ்.டி., மற்றும் ரூபாய் நோட்டு மதிப்பிழப்பால் மக்கள் வங்கிகளின் வாசலில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இது போல் எவ்வளவோ பாதிப்பு உள்ளது. எதிரணியினர், இளங்கோவன் ஈரோட்டில் இருந்து வந்தவர் என கூறுகின்றனர். நான் ஈரோட்டிலிருந்து சமூக புரட்சி வெடித்து வந்தவன். என்னை சீண்டாதீர்கள். நான் பேசினால் நீங்கள் தாங்கமாட்டீர்கள். அ.தி.மு.க.,வினர், பா.ஜ., வின் சாதனை, உங்கள் சாதனைகளை கூறி ஓட்டு கேளுங்கள். பிஞ்சிலே பழுத்தவர்கள் எங்களுடன் விளையாட வேண்டாம். அ.தி.மு.க., ஓட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தாலும் கூட, அது மக்களிடம் திருடிய பணம் என்று அவர்களுக்கு தெரியும். 'டிபாசிட்' கூட கிடைக்காது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
28-மார்-201908:18:03 IST Report Abuse
Bhaskaran நீ எந்த காலத்தில் இருக்கே இப்போ காசுதாராம வோட்டு கிடைக்காதுஐயா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X