அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருநீறு பூசியே ஏமாற்றி விடுவோம் சாத்தூர் ராமச்சந்திரன் சர்ச்சை

Added : மார் 27, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement

ராஜபாளையம், : ''நாங்கள் திருநீறு பூசி, இந்துக்களை ஏமாற்றி விடுவோம்,'' என தி.மு.க., முன்னாள் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.ராஜபாளையத்தில் அவர் பேசியதாவது: 18 சட்டசபை தொகுதியில் தி.மு.க., வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பார். பின் விவசாய கடன், கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு துறை உள்ளிட்ட அனைத்திலும் அ.தி.மு.க., வினர் கொள்ளை அடித்து வருகின்றனர்.தி.மு.க., கூட்டணியில் உள்ள இந்துக்களை விட சிறுபான்மையாக உள்ள கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு தான் மோடியை விரட்டும் பொறுப்பு அதிகம் உள்ளது. நாங்கள் திருநீறு பூசியே இந்துக்களை ஏமாற்றி விடுவோம். மோடியை விரட்ட இப்படிதான் வேஷம் அணிந்து செயல்பட வேண்டும், என்றார். இந்துக்களை ஏமாளிகள் போல் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
28-மார்-201913:43:14 IST Report Abuse
natarajan s ,,கூட்டுறவு துறை உள்ளிட்ட அனைத்திலும் அ.தி.மு.க., வினர் கொள்ளை அடித்து வருகின்றனர்.,,நாங்கள் வந்தும் கொள்ளையடிக்க வேண்டாமா ? இவன்கள் இப்படிதான் ஆரம்பத்தில் இருந்தே இந்துக்களை கொச்சைப்படுத்தியும் ஏமாற்றியும் வந்துள்ளனர். சிறுபான்மையினர் என்றால் இவர்களுக்கு இனிக்கும் ஆனால் கொள்ளை அடிப்பதெல்லாம் இந்துக்களின் கோவில்களைத்தான்.
Rate this:
Cancel
K. Sridharan - Chennai,இந்தியா
28-மார்-201911:14:43 IST Report Abuse
K. Sridharan முதலில் திருநீறு பூசுவார்கள் பின்னர் நாமம் போடுவார்கள் திமுக
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
28-மார்-201908:16:11 IST Report Abuse
Bhaskaran இந்தப்பயலுவளை விரட்டவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X