அரசியல் செய்தி

தமிழ்நாடு

'போடப்போறீங்க ஓட்டு; வாங்காதீங்க நோட்டு'

Added : மார் 27, 2019
Advertisement

ஆனைமலை : 'போடப்போறீங்க ஓட்டு, வாங்காதீங்க நோட்டு' என்பதை வலியுறுத்தி, ஆனைமலை வி.ஆர்.டி., பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.ஆனைமலை வி.ஆர்.டி., பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் நேற்று, தேர்தல் அதிகாரிகளுடன் இணைந்து, தேர்தல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள், ஆசிரியர்களுடன் பதாகைகளை ஏந்தி, ஆனைமலை - பொள்ளாச்சி ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் வரையிலும், பள்ளி அருகிலுள்ள வீதிகளிலும் பேரணியாக சென்றனர்.
'போடப்போறீங்க ஓட்டு, வாங்காதீங்க நோட்டு; மனதில் உறுதி வேண்டும், மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும், உங்கள் ஓட்டு உங்கள் எதிர்காலம், நுாறு சதவீதம் வாக்களிப்பீர்,' என பல்வேறு வாசகங்கள் எழுதிய, பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நுாறு சதவீத ஓட்டுப்பதிவு, நேர்மையான முறையில் ஓட்டளிக்க வலியுறுத்தியும், வாக்களிக்கும் இயந்திரம் குறித்த தகவல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு வினியோகித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X