பெரியகுளம், '' ஜெ., இருந்திருந்தால் பன்னீர் செல்வம் மகனுக்கு வேட்பாளர் சீட் கிடைத்திருக்குமா,''என, பெரியகுளத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தேனி லோக்சபா காங்., வேட்பாளர் இளங்கோவன், பெரியகுளம் (தனி) சட்டசபை தொகுதி தி.மு.க., வேட்பாளர் சரவணக்குமாரை ஆதரித்து, பெரியகுளத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெ., இறந்தபின் முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். சட்டசபையில் பன்னீர் செல்வம் என்னை பார்த்து சிரித்ததாக, நினைத்து முதல்வர் பதவியிலிருந்து அவரை விலக்கி விட்டு, சசிகலா முதல்வராக வேண்டும் என நினைத்தார். ஆனால் சசிகலா, அவரது உறவினர்கள் சிறை சென்றனர். பழனிசாமி முதல்வரானார்.
சட்டசபையில் அரசுக்கு எதிராக ஓட்டளித்த பன்னீர் செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என தி.மு.க., உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. பன்னீர் செல்வத்திற்கு எதிரான தீர்ப்பாக வரும். அப்போது அரசுக்கு சிக்கல் ஏற்படும்.
காங்., வேட்பாளர் இளங்கோவன், துணிச்சலானவர். மக்கள் பணியில் அனுபவம் உள்ளவர். பன்னீர் செல்வம் மகன் என்ற தகுதியை தவிர ரவீந்திரநாத்குமாருக்கு என்ன தகுதி இருக்கிறது.
ஜெ., உயிரோடு இருந்தால் ரவீந்திரநாத்குமாருக்கு வேட்பாளர் சீட் கிடைத்திருக்குமா. கடந்த சட்டசபை தேர்தலில் பன்னீர் செல்வத்திற்கு சீட் கிடைப்பதே திணறலாக இருந்தது.
பன்னீர் செல்வம் தேனி மாவட்டம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கேரள மாநிலத்தில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.
பெரிய அளவிலான அரசு ஒப்பந்தம் எடுக்கும் கம்பெனியில் ரவீந்திரநாத்குமார் ஒரு பங்குதாரர். கடந்த தி.மு.க.,
ஆட்சியில் பெரியகுளம் எம்.எல்.ஏ., ஆக இருந்த மூக்கையா கோரிக்கையை ஏற்று ரூ.36 கோடி
மதிப்பீட்டில் சோத்துப்பாறை அணை கட்டப்பட்டது. இது போல் பெரியகுளம் தொகுதிக்கு அப்போது பல வளர்ச்சி திட்டங்கள் செய்யப்
பட்டுள்ளது, என்றார்.