பதிவு செய்த நாள் :
பாலைவனத்தில் பரிதவிக்கும் காங்.,

லோக்சபா தேர்தல் களை கட்டி உள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் கோஷ்டி பிரச்னையால், தேர்தல் பணிகளில் காங்கிரஸ் பின்தங்கி வருகிறது. ஆனால், பா.ஜ., தேர்தல் பிரசாரத்தை துவங்கி, மும்முரமாக ஈடுபட்டுஉள்ளது.

 பாலைவனத்தில்,பரிதவிக்கும்,காங்.,

பாலைவன பூமியான ராஜஸ்தான் மாநிலத்தில், 25 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்., 29 மற்றும் மே,6ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. அனைத்து தொகுதிகளுக்கும், பா.ஜ.,வின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 'விஜய் சங்கல்ப் யாத்ரா' எனப்படும், வெற்றி உறுதி யாத்திரை பிரசாரத்தையும், பா.ஜ., முழு வீச்சில் துவக்கியுள்ளது.

ஆனால், காங்கிரஸ் இன்னும் பிரசாரத்தில் இறங்காமல், ஆமை வேகத்திலேயே உள்ளது. ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வென்று, ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சியில், வேட்பாளர்களை தேர்வு செய்வதிலேயே கடும் குழப்பம் ஏற்பட்டது.


கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், மீண்டும்

அந்த சூழல் வந்து விட கூடாது என்பதில், காங்கிரஸ் கவனமாக உள்ளது.அதிலும், பல ஆண்டுகளுக்கு பின், ஆளுங்கட்சியான பிறகு நடக்கும் இந்த லோக்சபா தேர்தலில், மண்ணை கவ்வினால், அது காங்கிரசுக்கு பெரும் பின்னடை வாக இருக்கும் என, கட்சி மேலிடம் கருதுகிறது.


ஆனால்,காங்கிரசில் உள்ள கோஷ்டி பிரச்னையை சமாளிப்பது, மேலிடத்துக்கு பெரும் சவாலாக உள்ளது.வேட்பாளர்களை தேர்வு செய்வதிலேயே, கடும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் என, இரண்டு அதிகார மையங்களையும் சமாளித்து, கோஷ்டி கானங்களை அடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


அதேநேரம், ராகுலின் ஐடியாவில் உருவான, 'சக்தி' என்ற பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான பயிற்சி திட்டத்தை, காங்கிரஸ் பெருமளவில் நம்பியுள்ளது. அதில் பயிற்சி பெற்ற, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூத் கமிட்டியினர், பிற கட்சிகளிடம் விலை போகாமல், காங்கிரசின் வெற்றிக்கு துாணாக இருப்பர் என, காங்., மேலிடம் கருதுகிறது.

அவர்களின் மனநிலையை, பா.ஜ., மாற்றி விடக் கூடாது என்பதால், ராகுல்உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், சக்தி திட்டத்தில் உள்ள வர்களிடம் நேரடியாக தொடர்பு மேற்கொண்டு, அவர்களை, 'ஐஸ்' வைக்கும் வேலையில் இறங்கிஉள்ளனர். இதற்கிடையில், காங்கிரசின் தடுமாற்றத்துக்கு மத்தியில், பா.ஜ., சிங்க நடை போட்டு, விஜய் சங்கல்ப் யாத்ரா பிரசாரத்தை துவக்கியுள்ளது. சட்டசபையில் கோட்டை விட்டதை,

Advertisement

லோக்சபாவில் பிடித்து காட்டுவோம் என, அந்த கட்சியின் முக்கிய தலைவரான, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர், வசுந்தர ராஜேவும், முன்னாள் ராணுவ அதிகாரியான, மத்திய அமைச்சர், ராஜ்யவர்தன் சிங் ரத்தோரும் கங்கணம்கட்டி, களம் இறங்கியுள்ளனர்.

தண்ணி காட்டும் 'ஜாட்' கட்சி




'ஜாட்' இன தலைவரான, ஹனுமன் பெனிவல் நடத்தும், ராஷ்ட்ரீய லோக் தந்திரிக் கட்சி, சட்டசபை தேர்தலில், அதிக ஓட்டுகள் பெற்று, பல இடங்களில் காங்கிரசுக்கு, 'தண்ணி' காட்டியது. லோக்சபா தேர்தலிலும், அந்த கட்சியின் ஆதிக்கம் தொடரும் என, காங்கிரஸ் கவலை கொண்டுள்ளது. அதனால், ஆர்.எல்.பி., கட்சியை தங்கள் வலைக்குள் கொண்டு வர, காங்கிரஸ் பகீரத பிரயத்தனம் செய்கிறது. மேலும், சுயேச்சைகள், உதிரி கட்சிகளுக்கும், காங்., வலை வீசிஉள்ளது.
- அபா ஷர்மா -சிறப்பு செய்தியாளர்


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
29-மார்-201922:50:57 IST Report Abuse

Pugazh Vஇந்த வலைதளத்துக்கு தணிக்கை குழு வேற. அநாகரிகத்தின் உறைவிடம். அவமரியாதை கறின் ஊற்றுக்கண்.. கலாச்சார சீரழிவு

Rate this:
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
29-மார்-201917:16:34 IST Report Abuse

தமிழ்மைந்தன் அங்கே குச்சிமிட்டாயும் குருவிரோட்டியும் கிடைக்காததால் குழந்தை வர மறுக்கிறதாம்...........பாவம்......இங்கே உள்ள ஊழல்தாத்தா உதவுவாரா?

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
29-மார்-201908:45:28 IST Report Abuse

Srinivasan Kannaiyaபா.ஜ., சிங்க நடை போட்டு, விஜய் சங்கல்ப் யாத்ரா பிரசாரத்தை துவக்கியுள்ளது... சிங்க நடையா அல்லது அசிங்க நடையா என்பது போக போகதான் தெரியும்

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X