அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தினக்கூலி தொண்டர்கள்: தினகரன் கட்சி ஏற்பாடு

நாள் கூலி அடிப்படையில், ஆட்களை பிடித்து, தினகரன் பிரசார கூட்டங்களில் பங்கேற்க செய்வதற்கு, அ.ம.மு.க.,வினருக்கு, ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 தினக்கூலி,தொண்டர்கள்,தினகரன் கட்சி, ஏற்பாடு

தமிழகம், புதுச்சேரியில் உள்ள லோக்சபா தொகுதிகளில், தினகரனின், அ.ம.மு.க., தனித்து போட்டியிடுகிறது.கணக்குசட்டசபை இடைத் தேர்தல்களிலும், அக்கட்சியின் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர். அ.தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், அக்கட்சியினர் உள்ளனர்.

இத்தேர்தலில், அ.தி.மு.க.,வை வீழ்த்துவதன் வாயிலாக, கட்சியை கைப்பற்றி விடலாம் என, தினகரன் கணக்கு போடுகிறார்.சின்னம் தெரியாத நிலையில், நேற்று முன்தினம், வட சென்னை, திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் களை ஆதரித்து, தினகரன், பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார்.பிரசார வாகனத்தில் நின்றபடியே, அவர் பேசினார். தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது.

அவர்களை அழைத்து வருவதற்கு பயன்படுத்திய வாகனங்கள், ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தப்பட்டதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினகரன் பிரசார கூட்டங்களில் பங்கேற்க செய் வதற்காக,நாள் கூலி அடிப்படையில்,ஆட்களை

உள்ளது.இது குறித்து, அ.ம.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:முதல்வர், இ.பி.எஸ்., பிரசாரத் திற்கு கூட்டம் சேருவதில்லை என, தி.மு.க.,வினர் கிண்டலடித்து வருகின்றனர். அதேபோன்று, தன் பிரசாரத்தையும், தி.மு.க.,வினர் கிண்டலடிக்க கூடாது என, தினகரன் விரும்பினார்.இதற்காக, வடசென்னை மற்றும் திருவள்ளூர் வேட்பாளர் களிடம் பேசி, நாள் கூலி அடிப்படையில் ஆட்களை அமர்த்தினார்.

ஒவ்வொரு இடத்திற்கும், தனித்தனியாக ஆட்களை அழைத்து வந்தால், உணவு உள்ளிட்ட செலவுகள் கூடுதலாகும். இதற்காகவே, தினசரி சம்பளத்தில், ஆட்களை ஏற்பாடு செய்து உள்ளனர்.இதற்காக, வடசென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ஏழை தொழிலாளர்களை, 20க்கும் மேற்பட்ட வேன்களில் ஏற்றி, தினகரன் பேசும் ஒவ்வொரு இடத்திற்கும், அழைத்து செல்கின்றனர்.

ரகசிய உத்தரவு

தேர்தல் பறக்கும் படையிடம் இருந்து தப்புவதற் காக, தொழிலாளர்கள் அழைத்து வரப்படும் வாகனங்களில், கட்சி கொடிகள் எதுவும் கட்டுவது இல்லை.இந்த, 'பார்முலா' கைகொடுப்பதால், அனைத்து தொகுதிகளிலும், இதேபோன்ற ஏற்பாட்டை செய்யும்படி, மாவட்ட செயலர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு, தினகரன் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.இவ்வாறு, அக்கட்சி வட்டாரத்தில்கூறப்படுகிறது.

நேரத்தை வீணடிக்காதீங்க
'தேர்தல் களத்தில் மட்டும், முழு கவனமும் இருக்கட்டும்' என, கட்சியினருக்கு, அ.ம.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன், அறிவுரை கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஜனநாயக நாட்டில், மிக சாதாரணமாக, மற்றவர்களுக்கு கிடைக்கிற உரிமைகளை கூட, நாம் உச்ச நீதிமன்றம் வரை

Advertisement

அழைத்து வந்தது, தற்போது அம்பலமாகி சென்று தான் பெற வேண்டிய நிலையை, துரோகிகளும், எதிரிகளும் உருவாக்கி உள்ளனர்.

இவ்வளவுக்கு பிறகும், நம்மை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என, கங்கணம் கட்டுகின் றனர். இதற்காக, எந்த எல்லைக்கும் போவதற்கு, அவர்கள் தயாராக இருக்கின்றனர். பிரசாரத்திற்கும், நம்முடைய புதிய சின்னத்தை, மக்களிடம் சேர்ப்பதற்கும், மிகக் குறைந்த கால அளவே உள்ளது. இப்போது, நமக்கு ஒவ்வொரு மணி துளிகளும் முக்கியம். நொடி பொழுதையும் வீணடிக்காமல், தேர்தல் களத்தில் மட்டுமே, கவனத்தை வைக்க வேண்டிய நேரமிது.

பிரசார பயணத்தின் போது, பட்டாசு வெடிப்பதில், பொன்னாடைகள், பூங்கொத்துகள் கொடுப்பதில், புகைப்படம் எடுப்பதில், நேரத்தை விரயமாக்கி விடக் கூடாது. சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும், பிளாஸ்டிக் தோரணக் கொடிகளை, முற்றிலுமாக தவிர்த்திடுங்கள். மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு, நம்மால் எந்த தொல்லையும் ஏற்படக்கூடாது என்பதில், கவனமாக இருங்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
29-மார்-201923:22:58 IST Report Abuse

Pugazh Vஅங்கே மோ___ மாசக்கூலிக்கு ஆட்களை அமர்த்தி யிருக்கார். அதை பாஜகவே பெருமையாக அறிவித்தது. இருந்தும் உ.பி.யில் யோகி + ஹேமமாலினி பேசவந்த க இடத்தில் மைதானம் காலியாக இருந்ததாக எல்லா ஹிந்தி மற்றும் ஆங்கில ஊடகங்களில் காட்டப்பட்டது.

Rate this:
karthi - chennai,இந்தியா
29-மார்-201921:25:22 IST Report Abuse

karthiடோக்கன் தினகரன் கிட்டே இருந்து முதலில் பணத்தை வாங்கி கொண்டு, பிறகு அவர் பின்னால் சுத்துங்கள். இல்லையென்றால், உங்களுக்கு நாமம் தான்.

Rate this:
Somiah M - chennai,இந்தியா
29-மார்-201917:51:58 IST Report Abuse

Somiah Mபலன் நிச்சயம் கிடைக்கும் .................................ஏற்கனவே செய்து ..................முடித்ததற்கு

Rate this:
மேலும் 45 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X