அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது
சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த முடியுமா?

சமூக வலைதளங்கள், அச்சு மற்றும் சில மின்னணு ஊடகங்களை, சில அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்திற்கு மறைமுகமாக பயன்படுத்துகின்றன. இதற்காக, பணத்தை தண்ணீராக கட்சிகள் இறைக்கின்றன. இதனால், தேர்தலில் ஆதாயம் அடைய அவை திட்டமிடுகின்றன.

காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது  சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த முடியுமா?இதை தடுக்க, விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கடுமையாக்க வேண்டும் என, வல்லுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.சில ஆண்டுகளுக்கு முன் வரை, செய்தி தாள்களில் வரும்செய்தி தான், உண்மையானது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உறுதியாக இருந்தது. அதன் பிறகு வந்த மின்னணு ஊடகங்களால், செய்திகள், நிமிடத்துக்கு, நிமிடம், 'பிரேக்' ஆகின.

இதனால், புதுப்புது செய்திகளையும், தகவல் களையும், நேயர்களுக்கு அளிக்க, மின்னணு ஊடகங்கள், பல விதமான வழிகளை பின்பற்று கின்றன. அவற்றில் பெரும்பாலானவை, 'எடிட்' செய்யப்படாமல் காட்டப்படு கின்றன.இதனால், சமுதாயத்தில், பல விதமான தாக்கங்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரை அதிகம் கொண்டுள்ள சமூக வலைதளங்களுக்கு, மொபைல் போன் வைத்திருப்பவர்கள் மத்தியில், நல்ல வரவேற்பு உள்ளது.'மீம்ஸ்' என்ற பெயரில், பரபரப்பான, கேலி செய்யும் காட்சிகளை கொண்ட வீடியோக் கள், சமூக வலைதளங்களில் பரவ விடப்படு கின்றன.இது, லோக்சபா தேர்தல் நேரம் என்பதால், சமூக வலைதளங்களில், அரசியல் மீம்ஸ் மற்றும் பிற வீடியோக்களின் வருகை அதிகரித்துஉள்ளது.

அரசியல் கட்சிகளே தங்களுக்கு என தனியான சமூக வலைத்தள ஊடகப் பிரிவை ஏற்படுத்தி, அதன் மூலம் தங்களுக்கு விளம்பரம் செய்கின்றனர். அதே நேரத்தில், எதிரணி தலைவர்கள் மற்றும் கட்சிகளைப் பற்றியும் தவறாகவும், கிண்டலாகவும் பிரசாரம் செய்கின்றனர்.

நிலைமை இவ்வாறு இருக்க, சமூக வலைத் தளங்களில் மும்முரமாக இருக்கும் சில ஊடக

அமைப்புகள், அரசியல் கட்சிகளிடம் பணம் பெற்று, அவர்கள் சொல்லும் தலைவர் களை அல்லது கட்சிகளை, தரக்குறைவாக விமர்சிக் கும் நிலை ஏற்பட்டுள்ளது.சில செய்தி தாள்களில், 'பெய்டு நியூஸ்' என்ற பெயரில் செய்யப்பட்ட கீழ்த்தரமான செயல் பாடுகள், சமூக வலைத்தளங்களிலும் ஏற்பட்டுள்ளன.


அரசியல் கட்சிகள், பணம் கொடுத்து, மறைமுக பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுப்பது, தேர்தல் ஆணையத்திற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மேலும் வலுப் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த கோரிக்கை தொடர்பாக, டில்லியில் சமீபத்தில்,தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில், டில்லி, கிழக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி, கே.மகேஷ் பேசியதாவது:

ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு, 48 மணி நேரத்திற்கு முன், பிரசாரங்கள் நிறுத்தப்படுகின்றன. அச் சமயத்தில், சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரம் வெளியானால், அவை, மூன்று மணி நேரத்திற்குள் நீக்கப்படும். இது தொடர்பான விதி முறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.ஆட்சேபகர மான கருத்துகளை, 48 மணி நேரத்திற்கு பின் வெளி யிடுவதும், தேர்தல் நடத்தை விதிமீறலாக கருதப்படும்.

நேரடியாக இன்றி, பிற கணக்குகள் மூலம் ஆட்சேப கரமான கருத்துகள் வெளியிடுவதை கண்டறிந்து தண்டிக்க, தற்போதைய தேர்தல் விதிகள் மற்றும் சட்டத்தில் இடமில்லை.சமூக வலைதளங்களுக் கான, சுய நடத்தை விதிகளில் கூட, இப்பிரச்னைக்கு தீர்வு காணும் அம்சங்கள் இல்லை. சவாலான இப் பிரச்னக்கு, தேர்தல் விதிகளை மேலும் வலிமை யாக்க வேண்டியது அவசியம்.இவ்வாறு, அவர் பேசினார்.


வேட்பாளர் நல்லவரா, கெட்டவரா!லோக்சபா தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், எதிரணி வேட்பாளர்களை வீழ்த்த, அவர்களின் கெட்ட பழக்கங்ளை, அரசியல் கட்சியினர், சமூக வலைதளங்களில் தேடி வரு கின்றனர்.லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலை முன்னிட்டு, கூட்டணி, வேட்பாளர் அறிவிப்பு போன்ற பணிகளை முடித்துள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற, சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். பலரும், குடும்ப விழா, சுற்றுலா, விருந்து உள்ளிட்ட நிகழ்வுகளின் போது எடுக்கப்படும் புகைப்படங்களை, பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஒருவர் பதிவேற்றம் செய்யும்

Advertisement

படங்களை, அவர்களின் நண்பர்கள், நண்பர் களுக்கு நண்பர்கள் என, யாரும் பார்க்கலாம்.

இந்த தேர்தலில், அரசியல் கட்சியினர், வாக் காளர்களை சந்தித்து, ஓட்டு சேகரிப்பது ஒரு புறம் இருந்தாலும், சமூக வலைதளங்கள் வாயிலாக விமர்சித்து வருவது, முக்கிய பிரசார யுக்தியாக உள்ளது. இதற்காக, கட்சிகள், தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றை ஏற்படுத்தி, பொறுப்பாளர்களாக இளைஞர்களை நியமித்துள்ளன.

முக்கிய கட்சிகள், இந்த தேர்தலில் போட்டியிட, புது முகங்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்துள்ளன. இதனால், அந்த கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப அணியினர், தங்களின் எதிரணி வேட்பாளர்களை வீழ்த்த, மது அருந்துவது, பெண்களுடன் இருப்பது போன்ற சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் இருக்கிறதா என, அவர்கள் மற்றும் அவர்களின் நண்பர் களின், சமூக வலைதள பக்கங்களில் தேடி வருகின்றனர்.

ஏதேனும், சர்ச்சைக்கு உரிய படங்கள் கிடைத் தால், அதை எடுத்து, 'இப்படி குடியும், கும்மாளத்துடன் இருக்கும், இவருக்கா உங்கள் ஓட்டு?' என கேட்டு, வேட்பாளருக்கு எதிராக, பிரசாரம் செய்கின்றனர்.இந்த விபரத்தை அறிந்த வேட்பாளர்கள், தங்கள் புகைப்படங் களை, சமூக வலை தளங்களில் இருந்து அகற்றி வருகின்றனர்.

தேவை தனி அமைப்புசமூக வலைதளம், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில்,கட்சிகள், பணம் கொடுத்து, மறைமுகமாக செய்திகள் வெளி யிடுவதை கண்காணிக்க, ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். மேலும், சமூக வலை தளங்களில், ஆட்சேபகரமான அல்லது பிரச்னைக்குரிய செய்தி பதிவானால், தாமத மின்றி அதை நீக்கு வதற்கான வழிமுறைகளை செயல்படுத் துவது அவசியம்.
- ரன்பீர் சிங்,தலைமை தேர்தல் அதிகாரி, டில்லி
- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
30-மார்-201916:41:25 IST Report Abuse

sankarதன்னோட வளர்ச்சிக்காக வியாபார தர்மத்தை மீறும் வியாபர்கள் தான் 90 சதவிகிதம். நேர்மையான மீடியா காண்பது மிக அரிது . அதுல தினமலர் ஒன்னு என்று சொல்ல ஆசை.

Rate this:
Girija - Chennai,இந்தியா
30-மார்-201910:31:41 IST Report Abuse

Girijaஇதைவிட கொடுமை அரசியல் விமர்சகர் மற்றும் பத்திரிகையாளர், பொது ஜனம், சில தீய சக்திகளின் கூட்டாளிகள் அதாவது செய்தி தொடர்பாளர் என்ற பெயரில் அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லாத இவர்களை தொல்லை (தினமும் முதலில்) காட்சி விவாதங்களுக்கு தொடர்ந்து அதே நபர்கள் அழைக்கப்பட்டு உளறுவது இன்னும் கேவலம் ஒருமுறை பங்கு பெற ரூ 10000 மற்றும் டாக்ஸி கட்டணம் வேறு தரப்படுகிறதாம் அப்போ இந்த காசை யாரிடம் அவர்கள் வாங்குவார்கள் ? இது மற்றொரு விதத்தில் ஓட்டுக்கு துட்டுதான் தான் . இதில் வேடிக்கை என்னவென்றால் விவாதத்தின் தலைப்பே "ஓட்டுக்கு துட்டு தான் ".

Rate this:
கைப்புள்ள - nj,இந்தியா
30-மார்-201909:24:30 IST Report Abuse

கைப்புள்ளஆன்லைன் மீடியா என்று சொல்ல கூடிய இந்த சமூக வலைத்தளங்கள், வீடியோ சேனல்கள், யூ டியூபுகள், பேஸ் புக், இன்ஸ்ட்டாகிராம், வாட்ஸப் போன்ற ஆன்லைன் மீடியாக்களை கண்டிப்பாக புறம் தள்ள முடியாது. சும்மா விளையாட்டுக்காக, விளையாட்டுத்தனமாக ஆரம்பிக்க பட்டு, விளையாட்டு தனமாக எடுத்துக்கொள்ளப்படும் இந்த மீடியாக்கள் ஏற்கனவே மெயின் ஸ்ட்ரீம் என்று சொல்ல கூடிய முக்கியமான மீடியாக்களாக மாறி ஏறக்குறைய ஒரு நாலஞ்சு ஆண்டுகள் ஆகி விட்டது. இனிமேல் இது ஒரு ரொம்ப முக்கியமான வேலையாகவே மாறி விடும். எல்லா கட்சிகளுமே கண்டிப்பாக இதற்காக ஒரு ரெண்டு மூணு ஆபீஸ்கள் போட்டு, நிறையா பேரை வேலைக்கு வெச்சு, திட்டம் போட்டு நிறைய ப்ராஜக்ட் வேலைகள் கண்டிப்பாக பண்ண வேண்டும். கூடிய விரைவில் நிறைய மீம்ஸ் க்ரியேட்டர்கள், வீடியோ எடிட்டர்கள், கிரியேட்டிவ் ஸ்கிரிப்ட் ரைட்டர்கள், இணையதள டிசைனர்கள், மற்றும் பாதுகாப்பு இன்ஜினியர்கள் போன்ற வேலைகளுக்கு எல்லா கட்சிகளுமே ஆள் எடுக்கும். அதுவும் பழைய காலத்து கைநாட்டு வாக்காளர்கள் எண்ணிக்கை கம்மி ஆக ஆக சும்மா கையை காட்டி, சின்னத்தை காட்டி ஓட்டு அள்ளுவது எல்லாம் குறைந்து விடும். ஆனால் இது அதிகம் ஆக ஆக, இன்றைக்கு ஒரு வரை முறையே இல்லாமல் தறி கெட்டு திரியும் ஆன் லைன் மீடியாக்கள் எல்லாம் பல முறைகளில் வரைமுறை படுத்தப்படும், கண்காணிப்புகள் அதிகம் ஆகும், தணிக்கை முறைகள் நடைமுறை படுத்தப்படும், ட்ரேக்கிங் என்று சொல்ல கூடிய முக்கியமாக யாரு எதை செய்தார், எப்போ செய்தார், எங்கே செய்தார் என்ற அனைத்து விவரங்களும் கைக்கு கிடைக்கும். இதனால் போலி செய்திகள், போலி வீடியோக்கள், போலி ஒலி நாடாக்கள் பரப்புவது எல்லாமே கட்டுப்பாட்டுக்குள் வரும். சும்மா நினைக்காதீங்க, அமேரிக்கா காரன் ஒன்னும் சப்பை இல்லை, ஏற்கனவே யூ டியூப், பேஸ் புக் எல்லாவற்றிலுமே, எது ஒரிஜினல் எது போலி என்று கண்டு கொள்ள கூடிய மெக்கானிசம் எல்லாமே இருக்கிறது. கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வந்து விடும்.

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X