அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வின் வெற்று தேர்தல் அறிக்கை திண்டிவனத்தில் முதல்வர் பேச்சு

Added : மார் 30, 2019
Share
Advertisement
திண்டிவனம், ''தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையால் நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அது வெற்று அறிக்கை,'' என, தமிழக முதல்வர், இ.பி.எஸ்., பேசினார்.விழுப்புரம் லோக்சபா தேர்தலில், போட்டியிடும், பா.ம.க., வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து, திண்டிவனத்தில் முதல்வர், இ.பி.எஸ்., பேசியதாவது:தி.மு.க., 15 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளனர். இந்த கால கட்டத்தில் அவர்கள்
 தி.மு.க.,வின் வெற்று தேர்தல் அறிக்கை  திண்டிவனத்தில் முதல்வர் பேச்சு


திண்டிவனம், ''தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையால் நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அது வெற்று அறிக்கை,'' என, தமிழக முதல்வர், இ.பி.எஸ்., பேசினார்.விழுப்புரம் லோக்சபா தேர்தலில், போட்டியிடும், பா.ம.க., வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து, திண்டிவனத்தில் முதல்வர், இ.பி.எஸ்., பேசியதாவது:தி.மு.க., 15 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளனர். இந்த கால கட்டத்தில் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான், அதிகாரத்தில் அங்கம் வகித்தனர். ஆனால், தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அதனால், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையால், நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அது வெற்று அறிக்கை.மகன், பேரன்களுக்கு,மத்தியில் பார்த்து பார்த்து பதவி வாங்க, தி.மு.க.,விற்கு தெரிகிறது. ஆனால், மக்களுக்கு செய்ய மறுக்கிறது.கிட்டத்தட்ட, 15 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தும் கூட காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு பிரச்னைகள் பேசி தீர்க்கப்படவில்லை. தி.மு.க.,வின் குடும்பம் தான் வளர்ந்தது.காவிரி பிரச்னையில் நடுவர் மன்ற தீர்ப்பு, 2007ல் வந்தது. அரசாணையில் வெளியிட செய்தால் உரிமை நமக்கு கிடைக்கும். ஆனால் மத்தியில் ஆட்சி பொறுப்பில், தி.மு.க., பெரும்பான்மை இருந்தும் கூட, ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை.மறைந்த ஜெயலலிதா தான் சுப்ரீம் கோர்ட் வரை சென்று, அரசாணையில் வெளியிடச் செய்தார். 50 ஆண்டு காலம் தீர்க்கப்படாத பிரச்னையில், நிலையான தீர்ப்பையும் பெற்று கொடுத்துள்ளோம். இந்த பெருமை, அ.தி.மு.க.,விற்கு உண்டு.இது விவசாயிகளின் அரசு. விவசாயிகளுக்கு தேவையானவற்றை அனைத்தையும் செய்து வருகிறோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X