கிருஷ்ணகிரி, ''கிருஷ்ணகிரிக்கு, 365 நாட்களுக்குள் ரயில் பாதை திட்டம் கொண்டு வராவிட்டால், பதவியை ராஜினாமா செய்வேன்,'' என, காங்., வேட்பாளர் செல்லகுமார் சூளுரைத்துள்ளார்.இதுகுறித்து அவர், கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த எட்டு ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள, எம்.பி.,க்கள் எந்த நல்ல திட்டத்தையும் கொண்டு வரவில்லை. என்னை, எம்.பி.,யாக தேர்வு செய்தால், இந்த மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான, ரயில் பாதை திட்டத்தை, 365 நாட்களில் கொண்டு வருவேன். தவறும் பட்சத்தில், என் இயலாமையை ஒத்துக்கொண்டு, மக்கள் மன்றத்தில் ராஜினாமா கடிதத்தை கொடுப்பேன்.ஓசூரில், விமான நிலையம், உடனடியாக கொண்டு வருவேன். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளவர்கள், வேலை வாய்ப்பை தேடி, பெங்களூருக்கு செல்லும் நிலையை மாற்ற, புகழ் பெற்ற தொழில் நிறுவனங்களை அழைத்து வந்து, கிருஷ்ணகிரியில் தொழில் துவங்க வைப்பேன். மேலும், கிருஷ்ணகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள 'டோல்கேட்'டை, வேறு இடத்தில் இடமாற்றம் செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE