அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிறந்த மண்ணில் கரை சேருவாரா கமல்?

Updated : மார் 30, 2019 | Added : மார் 30, 2019 | கருத்துகள் (28)
Advertisement

மக்கள் நீதி மையம் தலைவர், நடிகர் கமல், ராமேஸ்வரம் பேய்கரும்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், அவரது வீட்டில் இருந்து தான், கடந்த ஆண்டு கட்சி பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து தான் பிறந்த, பரமக்குடி மண்ணில், பொதுக்கூட்டத்தில் பேசினார். தற்போது, அனைத்து லோக்சபா தொகுதிகளிலும், தன் கட்சி சார்பில், வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.






மேலும், பரமக்குடி தனி, சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக, அ.தி.மு.க., முன்னாள்,எம்.எல்.ஏ., உக்கிரபாண்டியனை அறிவித்தார். அவர் மாற்று கட்சியினரிடம் பேரம் பேசியதாகவும், மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளில், கட்சி தலைமை அலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாதபடி, 'சுவிட்ச் ஆப்' செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை மாற்றி விட்டு, டாக்டர் சங்கரை மனு தாக்கல் செய்ய கூறியுள்ளனர். தற்போது, மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பரமக்குடியில் தங்கள் கட்சியின் நிலை குறித்து மிகுந்த வேதனையில் உள்ளனர்.





அவர்கள் கூறியதாவது: பரமக்குடியில் பிறந்த கமல், சொல்லிக் கொள்ளும் வகையில், தன் சொந்த ஊருக்கு, பெரிதாக எதுவும் செய்யவில்லை. தன் தந்தை பெயரில் உள்ள பள்ளிக்கு மட்டும், சிறிதளவு உதவி செய்துள்ளார். மேலும், பரமக்குடி மக்களும், கமலின் கட்சி பற்றி, பெரிய அளவில் அறியாதவர்களாகவே உள்ளனர்.அதனால், கமலின் கட்சி, அவரின் சொந்த மண்ணில் கரை சேருமா என்பதை, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.K. GANESAN - chennai ,இந்தியா
03-ஏப்-201913:59:00 IST Report Abuse
P.K. GANESAN உங்கள் சமுதாயத்தை ஒட்டு வங்கியாக மட்டுமே வைத்துக் கொண்டிருக்கும் திமுகவை நீங்கள் இன்னமும் புரிந்து கொள்ளாதது வேதனையான விஷயமே. ஏன் அந்தக் கட்சியில் ஒரு முஸ்லிமைக் கூட தலைமைப் பதவியில் வைத்துள்ளாரா என்று மூளை இருந்தால் சற்று சிந்திப்பீரா?
Rate this:
Share this comment
Cancel
Sanakkiyan - Erode,இந்தியா
30-மார்-201916:39:44 IST Report Abuse
Sanakkiyan கமலா எடுக்குறதுல என்னன்னா இன்னுமோர் பெரியார் வந்துவிடக்கூடாதுன்னு துடிக்குறாங்க
Rate this:
Share this comment
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
30-மார்-201914:26:44 IST Report Abuse
sathish கோமாளி கூத்தாடி, சரியான ஒன்........தமிழ் நாட்டுக்கு பிடித்த சனி.
Rate this:
Share this comment
Sathya Dhara - chennai,இந்தியா
30-மார்-201916:32:46 IST Report Abuse
Sathya Dhara இந்த துர்நாற்றம் பிடித்த தமிழ் துரோகியை ஹிந்து துரோகியை பற்றி விமர்சனம் எழுதி......எழுத்துக்களுக்கு இழுக்கை தேடி தர வேண்டாம். இந்த குப்பை துர்நாற்றம் பிடித்த சாக்கடை விரைவில் முகவரி இல்லாமல் காணாமல் போக ஏதாவது செய்யுங்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X