பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் வாகன சோதனையில் ரூ.3.92 லட்சம் பறிமுதல்

Added : மார் 30, 2019
Advertisement

அந்தியூர்: அந்தியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, அத்தாணி அருகே, வரப்பள்ளம் பகுதியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி உமா மகேஸ்வரன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஒரு பிக்-அப் வேனில், சத்தியமங்கலம், பனங்காட்டூரை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி, 39, உள்ளிட்டோர் வந்தனர். அவரிடம், 63 ஆயிரத்து, 500 ரூபாய் இருந்தது. திருச்சியில் வாழைத்தார் வியாபாரத்தில் கிடைத்த தொகை என்றார். உரிய ஆவணம் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்தனர்.* பவானிசாகர் சட்டசபை தொகுதி, பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான குழு, பவானிசாகர் அருகே, எரங்காட்டூர் பிரிவில், நேற்று முன்தினம் இரவு, சோதனையில் ஈடுபட்டனர். மாருதி ஆம்னி வேனில், சேலம் மாவட்டம், மேச்சேரியை சேர்ந்த சிவக்குமார், 32, சுரேஷ், 38, வந்தனர். அவர்களிடம் உரிய ஆவணமின்றி வைத்திருந்த, 1.72 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.


*பவானி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, கவுந்தப்பாடி பகுதியில், பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். டாடா ஏஸ் வாகனத்தில் வந்த ஆட்டு வியாபாரி பழனிசாமியிடம், ஒரு லட்சத்து, 57 ஆயிரம் ரூபாய் இருந்தது. உரிய ஆவணமில்லாததால், பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X