பொது செய்தி

தமிழ்நாடு

வீரமணியின் அநாகரிக பேச்சு; இந்துக்கள் கொதிப்பு; சென்னையில் போராட்டம்

Updated : மார் 30, 2019 | Added : மார் 30, 2019 | கருத்துகள் (357)
Share
Advertisement
சென்னை: பகவான் கிருஷ்ணரை அவமதிக்கும் வகையில் திக தலைவர் வீரமணி பேசியதைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்றனர்.கிருஷ்ணரை அவதூறாக பேசிய கி வீரமணியை கைது செய்யக்கோரி இந்துக்கள் பாதுகாப்பு படை சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்

சென்னை: பகவான் கிருஷ்ணரை அவமதிக்கும் வகையில் திக தலைவர் வீரமணி பேசியதைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்றனர்.

கிருஷ்ணரை அவதூறாக பேசிய கி வீரமணியை கைது செய்யக்கோரி இந்துக்கள் பாதுகாப்பு படை சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்துக்கள் பாதுகாப்பு இயக்கம், அகில இந்திய யாதவ சபை மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள், இயக்கங்கள் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.இந்துக்கள் வழிபடும் பகவத்கீதையின் நாயகன் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி, வழக்கம் போல இந்துக்கள் ஏதும் செய்ய மாட்டார்கள், கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற அதீத நம்பிக்கையில் திராவிட கழகத்தின் வீரமணி, தனது அநாகரிக பேச்சை பரப்பியுள்ளார். இதுகுறித்து இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆங்காங்கே காவல்துறையில் புகார் மனு அளித்து வருகின்றன. ஆன்மிக பக்தர்கள் வீரமணியின் கருத்துக்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

latest tamil news

கி.வீரமணியை கைது செய்கஇந்துக்கள் பாதுகாப்பு படை தலைவர் எல் கே.சாமி கூறுகையில்:

கிருஷ்ண பரமாத்மாவை அவதூறாக பேசிய திராவிட கழக தலைவர் வீரமணியை கைது செய்ய வேண்டும் என்று எங்கள் இயக்கம் சார்பில் இங்கு அனைத்து இந்து மக்களும் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறோம்.

மேலும் தொடர்ந்து இந்து கடவுள்களையும் இந்து சமயத்தையும் அவதூறாக பேசி வரும் கி வீரமணி போன்ற சமூக விரோதிகளை அரசு கடும் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.

போராட்டத்தில் இந்து இயக்கங்களை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.


latest tamil news

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசிய பட்டாச்சாரியார்.
இந்துக்கள் வழிபடும் பகவத்கீதையின் நாயகன் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி, வழக்கம் போல இந்துக்கள் ஏதும் செய்ய மாட்டார்கள், கண்டு கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் திராவிட கழகத்தின் வீரமணி, தனது அநாகரிக பேச்சை பரப்பியுள்ளார். இதுகுறித்து இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆங்காங்கே காவல்துறையில் புகார் மனு அளித்து வருகின்றன. வீரமணியின் கருத்துக்கு ஆன்மிக பக்தர்கள் எதிர்ப்பு வெளிப்படுத்தி தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:


latest tamil news

பகவான் கிருஷ்ணரை அவமதிக்கும் வகையில் திக தலைவர் வீரமணி பேசியதைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது


வக்கிர எண்ணம்
அரவிந்த் சுப்ரமணியன், ஆன்மிக சொற்பொழிவாளர், கோவை:


பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை மனதை பதறவைக்கும் சம்பவம். அதற்கு நடவடிக்கை எடுப்பது பற்றி வீரமணி பேசவில்லை. இதுவரை சமுதாயத்திற்கு எந்த ஒரு நன்மையும் செய்யாத நபர் வீரமணி. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கேட்டோ மறுவாழ்வு கேட்டோ எந்த பிரச்னைக்கும் போராடியதில்லை.அந்த பிரச்னையோடு பகவான் கிருஷ்ணனை ஒப்பிட்டு பேசுவது எந்த விதத்தில் நியாயம். கிருஷ்ண ராஜலீலை சம்பவமான ஆயர்பாடியில் பெண்களின் துணியை எடுத்து ஒளித்து வைத்ததாக கூறுகிறார். அப்போது அவருக்கு வயது ஐந்து. அங்கிருந்து மாமன் ஹம்சனை அழிக்க புறப்பட்டு விட்டார். ராஜலீலை என்று சொல்லப்படும் சம்பவங்கள் எல்லாமே ஐந்து வயதுக்குட்பட்ட காலகட்டத்தில் நடந்தது. அந்த குழந்தையின் செயல்பாட்டில் வக்கிரமான எண்ணத்தை பார்ப்பது தான் இவரது மனதின் வக்கிரம். குழந்தையின் விளையாட்டில் கூட இதுமாதிரி காமமான எண்ணத்தை பார்க்கும் இவரது மோசமான மன எண்ணத்தை புரிந்து கொள்ளலாம்.


latest tamil news

காணாமல் போன வீரமணி
டாக்டர் தேவநாதன் யாதவ், தலைவர், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகம்:


ஆறாண்டுகளாக காணாமல் போன வீரமணி இப்போது திடீரென இந்து கடவுளைப் பற்றி அவதுாறாக பேசுகிறார் என்றால், ஸ்டாலின் பக்கபலமாக இருக்கிறார் என்ற தலைக்கனம் தான் காரணம். இந்து மதத்தை கொச்சைப்படுத்துவதும், இந்துக்களை வேறு மதத்திற்கு மாற்றுவதுமாக, 60 ஆண்டுகளாக இதை செய்துக் கொண்டிருக்கிறார். முஸ்லிம், கிறிஸ்தவ கடவுளை பற்றி விமர்சனம் செய்தால், காவல்துறை கைது செய்திருக்கும்.


தீமையின் சின்னம்
பேராசிரியர் கண்ணன், மதுரை யாதவா பண்பாட்டு கழகத் தலைவர்:


என் போன்ற கோடிக்கணக்கானோர், பகவான் ஸ்ரீகிருஷ்ணரை முழுமுதற்கடவுளாக வணங்குகிறோம். 5000 ஆண்டுகளுக்கு முன்னால், அந்தகால வாழ்க்கை நடைமுறையில் இருந்த விஷயத்தை, இந்த கால பொள்ளாச்சி சம்பவத்தோடு ஒப்பிட்டு வீரமணி பேசியது மன்னிக்க முடியாத குற்றம். வருந்தத்தக்க விஷயம். இந்துக்களின் பொறுமையான வாழ்க்கை, கோட்பாடு இதுபோன்ற பேச்சுக்களை மன்னித்து ஏற்றுக் கொள்வதால் தொடர்ந்து இதுபோன்று செய்து வருகின்றனர்.


கீழ்த்தரமான விமர்சனம்
ஸ்ரீகாந்த், வங்கி ஊழியர், கோவை :


தாரத்தை தவிர எல்லோரையும் தாயாய் நினைப்பவர்கள் நாம். மதக்கலவரத்தை துாண்டும் வகையில் வீரமணி பேசியுள்ளார். நாங்கள் கிருஷ்ண பக்தர்கள். இவ்வளவு துாரம் கீழ்த்தரமாக விமர்சிக்க அவரால் மட்டுமே முடியும். வயதானதால் ஏதோ உளறியிருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால் இதோடு அவர் நிறுத்திக் கொண்டால் அவருக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது.


விழிப்புணர்வு வேண்டும்
வெங்கட், ஆடிட்டர், கோவை:


இந்துக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக நான் நினைக்கிறேன். அவர் மேல் வழக்கு பதியும் ஏற்பாடுகள் நடக்கின்றன. அவரை யாரும் தனிப்பட்ட முறையில் புண்படுத்தாதபோது, அவர் ஏன் இதைச் செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தனது சத்திய சோதனையில், வெள்ளைக்காரர்களை எதிர்த்து போர் புரியும் அகிம்சா போராட்டத்திற்கு உறுதுணையாக பலம் கொடுப்பது பகவத் கீதை தான் என்று கூறியுள்ளார். பல நாடுகளில் நிர்வாகத்தில் குரு என்று சொல்லக்கூடியவர்களும், பகவத்கீதையில் இருந்து கருத்துக்களை எடுத்து வாழ்க்கையில், வியாபாரத்தில் நல்லபடியாக செய்யமுடியும் என ஒத்துக் கொண்டுள்ளனர்.இப்பேர்ப்பட்ட பகவானைப் பற்றி வீரமணி பேசியுள்ளார். வீரமணி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (357)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-ஏப்-201900:00:54 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இன்னும் இங்கே சுண்டல் வரலை..
Rate this:
Cancel
oce - tokyo,ஜப்பான்
04-ஏப்-201918:37:12 IST Report Abuse
oce வீரமணியை காயத்ரி மந்திரம் சொல்லவையுங்கோ. சூரிய நமஸ்காரம் பண்ண வையுங்கோ.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-ஏப்-201900:01:42 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அபிவாதயே சொல்ல வைங்கோ.....
Rate this:
Cancel
oce - tokyo,ஜப்பான்
04-ஏப்-201918:32:35 IST Report Abuse
oce வீட்டிற்கு அழைக்காததும் பக்கத்தில் உட்கார அனுமதிக்காததும் அவரவர் தனிப்பட்ட பழக்கம். நீ தெருவில் போகிறவனை எல்லாம் உன் வீட்டுக்கள் அழைத்து உபசரிப்பாயா. என்னய்யா வெட்டி பேச்சு. இந்து மதத்திற்கும் பழக்க வழக்கங்களுக்கும் என்னய்யா சம்பந்தம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X