பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

Added : மார் 30, 2019
Share
Advertisement
சுகாதார வளாக கட்டடம் வீண்: அரூர் அடுத்த சின்னாங்குப்பம் பஞ்சாயத்தில், 12 ஆண்டுகளுக்கு முன், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கடந்த 2011-12ல், புதுப்பிக்கப்பட்டது. சுகாதார வளாகத்தை முறையாக, பராமரிக்க பஞ்., நிர்வாகம் ஆர்வம் காட்டாததால், தற்போது, பயன்பாடின்றி உள்ளது. இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலையுள்ளது. எனவே, சுகாதார

சுகாதார வளாக கட்டடம் வீண்: அரூர் அடுத்த சின்னாங்குப்பம் பஞ்சாயத்தில், 12 ஆண்டுகளுக்கு முன், ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கடந்த 2011-12ல், புதுப்பிக்கப்பட்டது. சுகாதார வளாகத்தை முறையாக, பராமரிக்க பஞ்., நிர்வாகம் ஆர்வம் காட்டாததால், தற்போது, பயன்பாடின்றி உள்ளது. இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலையுள்ளது. எனவே, சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்சி பொருளான தண்ணீர் தொட்டி: தர்மபுரி நகராட்சி, கே.ஏ., மாணிக்கம் தெருவில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன், நகராட்சி நிர்வாகம் சார்பில், 1.26 லட்சம் ரூபாய் மதிப்பில், சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. இப்பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், இதை நம்பியிருந்த மக்கள் தண்ணீக்கு அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை இல்லை.

உயர்த்திய சாலை; மக்கள் கடும் அவதி: தர்மபுரி குண்டல்பட்டியில் இருந்து, தொப்பூர் வரை தேசிய நெடுஞ்சாலை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், புதியதாக அமைக்கப்படும் சாலை, பழைய சாலையின் மீதே அமைக்கப்படுவதால், இச்சாலை மிகவும் உயர்ந்து காணப்படுகிறது. இதனால், சாலையின் ஓரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, உயரமாக உள்ள சாலையை சமன் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X