பா.ஜ., கணக்கும்; காங்., கணிப்பும்

Updated : மார் 30, 2019 | Added : மார் 30, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் யார் ஆட்சியை பிடிப்பர் என கண்டுபிடிப்பதற்காக பா.ஜ.,வும் காங்.,கும் தனித்தனியாக சர்வே நடத்தின.
நாடு முழுவதும் ஆறு தனியார் நிறுவனங்களை வைத்து கடந்த 2 மாதங்களாக ஆய்வு நடத்தியது பா.ஜ., ஆய்வு முடிவுகள் பா.ஜ.,வுக்கு உற்சாகத்தை அளித்துள்ளன.latest tamil news


ஆய்வின்படி பா.ஜ., 265 முதல் 270 இடங்களில் அக்கட்சி ஜெயிக்கும் என தெரிகிறது. அதாவது, பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என்பது அக்கட்சி உறுதியாகிறது.
பாகிஸ்தானில் உள்ள பாலகோடு பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய பிறகு இந்த சர்வே எடுக்கப்பட்டது. 28 மாநிலங்களில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டு விழும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சர்வே நடத்திய நிறுவன அலுவலர்களுடன் அமர்ந்து அருண் ஜெட்லியும் ராஜ்நாத் சிங்கும் பல கட்ட ஆலோசனைகளை நடத்திவிட்டனர். எந்த காரணங்கள் பா.ஜ.,வுக்கு ஆதரவாக உள்ளன என்று அவர்கள் விவாதித்தனர். அப்போது தான் பாலகோடு சம்பவத்தால் பா.ஜ.,வுக்கு அதிக ஓட்டு கிடைக்கும் என்பது தெரிய வந்தது.
மோடியும் அடிக்கடி ஜெட்லி, ராஜ்நாத், அமித்ஷா உடன் ஆய்வு முடிவுகள் குறித்து விவாதிக்கிறார்.


latest tamil news


சில தலைவர்கள் டில்லியில் ஜோசியர்களை நம்பிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் மோடியோ, ராகுலோ, பிரியங்காவோ ஜோசியர்களை நம்புவதில்லை. மற்ற தலைவர்கள் டிவி சேனல்கள் நடத்தும் ஆய்வு முடிவுகளையே கவனிக்கிறார்கள்.


காங்., கணிப்பு:


காங்.,கும் இதுபோன்ற சர்வேக்களை நடத்தி உள்ளது. ஆனால் இக்கட்சி மும்பை நிறுவனங்களை நம்பி உள்ளது. இவர்கள், காங்., கட்சி 80 இடங்களை தாண்டுவதற்கே காங்., கஷ்டப்படும் என்று கூறி உள்ளன.
மேலும் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் காங்., கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கணித்துள்ளன.
2018 சட்டசபை தேர்தலில் காங்., ஆட்சியை பிடித்த ம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் இம்முறை காங்., திணறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளன.


latest tamil newsசாம்பிள் எவ்வளவு:


சர்வேக்காக இந்நிறுவனங்கள் 30 ஆயிரம் பேர் (சாம்பிள்) வரை பேட்டி எடுத்துள்ளன.பாலகோடு தாக்குதல், விவசாயிகள் பிரச்னை, பெட்ரோல் விலை உயர்வு, பணமதிப்பிழப்பு, வேலை வாய்ப்பு போன்ற விஷயங்களில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
கழிப்பறைகள் கட்டியது, சமையல் வாயு இணைப்பு தந்தது, 25.01 கோடி எல்.இ.டி., விளக்குகள் வழங்கியது, 26.90 லட்சம் எல்.இ.டி., தெரு விளக்குகள் பொருத்தியது போன்ற காரணங்களால் பீகாரிலும் உ.பி.,யிலும் பா.ஜ.,வுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது என்கிறது சர்வே. கிராங்களில் எல்லாம் இத்திட்டங்கள் போய் சேர்ந்துள்ளன. இவற்றை பிரதமர் மோடி தான் கொண்டு வந்தார் என மக்கள் அறிந்துள்ளனர். உ.பி.,யில் கடந்த 2 ஆண்டுகளாக மின்வெட்டே இல்லை என்பதும் பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளது.
வட மாநிலங்களில் மோடிக்கு 65-70 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது. அதே போல் மாநில தலைவர்களான முலாயம், லாலு, அகிலேஷ், மாயாவதி போன்றோரும் செல்வாக்குடன் உள்ளனர்.
பல கிராமங்களில் இந்திராவை இன்னமும் நினைவில் வைத்துள்ளனர். காங்.,கில் ராகுலை விட பிரியங்காவுக்கு அதிக செல்வாக்கு உள்ளதாக சர்வே கூறுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
31-மார்-201911:04:36 IST Report Abuse
அம்பி ஐயர் எப்படியும் கருத்துத் திணிப்புகள் எல்லாம் பொய்யாகப் போவது உறுதி.. பாஜக வெற்றி பெற்றால் ஓட்டு மெஷின் தில்லு முல்லு.... வாக்குச் சீட்டு முறை வேண்டும் என்று கூச்சலிடுவார்கள்... (ஒரு வேளை) இவர்கள் வெற்றி பெற்றால் ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி என்று கூச்சலிடுவர்கள்.... பாவம் இந்த ஜனநாயகம்... இவர்களிடம் சிக்கி படாதபாடுபடுகிறது...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-மார்-201904:38:43 IST Report Abuse
J.V. Iyer மோடிஜியின் உழைப்பு, அவருடைய நலத்திட்டங்கள் தமிழ் நாட்டில் சென்றடைந்த போதும், தமிழக மக்கள் ஏன் இவற்றை உணரவில்லை என்று தெரியவில்லை.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
31-மார்-201901:21:23 IST Report Abuse
மலரின் மகள் நடக்கும் ஆட்சியின் மீது மக்களுக்கு கோபமோ எரிச்சலோ இருக்கிறதா? வாக்குகள் குறைந்து போகும் என்று நினைத்தால் அதற்கு என்ன காரணம் இருக்கும்? எதிர்கட்சிகளிடத்தில் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்று சொல்வதற்கு அவர்கள் அப்படி என்ன பெரிதாக செய்து விட்டார்கள்? தனி மனித செல்வாக்கை எதிர்க்கட்சியினர் பெற்றிருக்கிறீர்களா? வெற்றி பெறுவது என்பதற்கான சூத்திரம் என்ன வைத்திருக்கிறார்கள். பணம் கொடுத்து வாக்கை பெற்றுவிடலாம் என்றா? இது என்ன இடைதேர்தலா? ஒன்றை தற்போதைக்கு தாராளமாக கணிக்கலாம். எந்த எதிர்க்கட்சியும் அல்லது கூட்டணி அமைத்து கொண்ட கட்சிகளும் நிச்சயம் ஆட்சி அமைக்கும் அளவிற்கு கூட்டணியில் பல காட்சிகளை தேர்தலுக்கு பிந்தைய குர்திரை பேரம் மூலமோ ஆட்சி அமைக்கும் அளவிற்கு வல்லமை பெற்றிருக்க மாட்டார்கள் என்பது. ஒன்று முழு மெஜாரிட்டி அல்லது இந்து பத்து வாக்குகள் தேவைப்படும் அளவிற்கு தாமரைக்கு ஆட்சி அமைக்கவே வாய்ப்புகள் அதிகம். வாக்காளர்கள் பரபரப்பாக குறிப்பாக பெண்களும் தேர்தலை பற்றி பரபரப்பாக பேசவில்லை இந்த தேர்தலில். அப்படி என்றால் நடக்கும் அத்தியின் மீது அதிருப்தி இல்லை என்பதே அதன் பொருள். அதை தொடரவே அனுமதிப்பார்கள். சிந்தித்து பார்த்தால் அப்படி தான் தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X