அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
11 நாள் - 20 மாநிலங்கள் - 91 தொகுதிகள்:
துவங்கியது, 'கவுன்ட் - டவுன் '

தேர்தல் திருவிழா களைகட்டத் துவங்கியுள்ளது. முதல் கட்டத் தேர்தலுக்கு, 11 நாட்களே உள்ள நிலையில், 20 மாநிலங்களில், 91 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாநிலங்கள், தொகுதிகள், கவுன்ட் - டவுன்


இதில், 1,000த்திற்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். தெலுங்கானாவின் நிஜாமாபாதில் மட்டும், 185 பேர் போட்டியிடுகின்றனர்.லோக்சபாவுக்கு, ஏப்., 11 முதல் மே, 19 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டத் தேர்தல், ஏப்., 11ல் நடக்க உள்ளது.

185 வேட்பாளர்கள்


மொத்தம், 20 மாநிலங்களில் உள்ள, 91 தொகுதிகளுக்கு, முதல் கட்டத்தில் தேர்தல் நடக்க உள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகி உள்ளது.தெலுங்கானாவின், நிஜாமாபாத் லோக்சபா தொகுதியில், அதிகபட்சமாக, 185 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதனால், முதல் கட்டத்தில் போட்டியிடுவோர் எண்ணிக்கை, 1,000த்தை தாண்டியுள்ளது. முதல் கட்டத்தில் தேர்தலை சந்திக்கும், 20 மாநிலங்களில், ஆந்திராவில், 25 தொகுதிகள் உள்ளன. தெலுங்கானாவில், 17; உத்தர பிரதேசத்தில், எட்டு; மஹாராஷ்டிராவில், ஏழு; உத்தரகண்ட், அசாமில், தலா, ஐந்து தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளன.

ஓட்டுச் சீட்டு முறை


முதல்வர், சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ள, தெலுங்கானாவில், 17 தொகுதிகளில், 443 பேர் போட்டியிடுகின்றனர். சந்திரசேகர ராவின் மகள், கவிதா

போட்டியிடும், நிஜாமாபாத் தொகுதியில் மட்டும், 185 பேர் போட்டியிடுகின்றனர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாததைக் கண்டித்து, இந்தத் தொகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பெருமளவில் மனு தாக்கல் செய்துள்ளனர்.வழக்கமாக, 64 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டால் மட்டுமே, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்த முடியும். அதனால், இந்தத் தொகுதியில், ஓட்டுச் சீட்டுமுறையில் தேர்தல் நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது; இது குறித்து தேர்தல் கமிஷன் ஆராய்ந்து வருகிறது.ஒருங்கிணைந்த ஆந்திராவில், 1996ல், நல்கொண்டா தொகுதியில், பாதுகாப்பான குடிநீர் கேட்டு, ஜல சாதனா சமிதி அமைப்பினர், 450க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்தனர். அப்போது, 480 வேட்பாளர்கள் போட்டியிட்டதே, சாதனையாக இருந்தது.தற்போது அதற்கடுத்து அதிகமானோர் போட்டியிடும் தொகுதியாக, நிஜாமாபாத் உள்ளது.

அதற்கு பக்கத்து மாநிலமான ஆந்திராவில், 25 தொகுதிகளுக்கு, 548 பேர் போட்டியிடுகின்றனர்.மேற்கு வங்கம், பீஹார், உத்தர பிரதேசத்தில், அனைத்துக் கட்டங்களிலும் தேர்தல் நடக்க உள்ளது. முதல் கட்டத்தில், உ.பி.,யின், மொத்தமுள்ள, 80 தொகுதிகளில், மேற்கு பகுதியில் உள்ள எட்டு தொகுதிகள், தேர்தலை சந்திக்கின்றன. இந்தத் தொகுதிகளில் போட்டியிட, 146 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்; தற்போது, 97 பேர் போட்டியில் உள்ளனர்.பீஹாரில் மொத்தமுள்ள, 40 தொகுதிகளில், தற்போது, நான்கு தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது; இதில், 44 பேர் போட்டியிடுகின்றனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மொத்தமுள்ள, ஆறு தொகுதிகளில், ஜம்மு மற்றும் பாரமுல்லா தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. ஜம்முவில், 24 பேரும், பாரமுல்லாவில், ஒன்பது பேரும் போட்டியிடுகின்றனர்.

116 பேர் களத்தில்


நக்சல் பாதிப்பு உள்ள சத்தீஸ்கரில், மொத்தமுள்ள, 11 தொகுதிகளில், பஸ்தார் தொகுதிக்கு மட்டும் தேர்தல்

Advertisement


நடக்கிறது. இதில், ஏழு பேர் போட்டியிடுகின்றனர்.உத்தரகண்டில் உள்ள, ஐந்து தொகுதிகளும், முதல் கட்டத்தில் தேர்தலை சந்திக்கின்றன. இவற்றில், 52 பேர் போட்டியிடுகின்றனர். தெஹ்ரி மற்றும் ஹரித்துவார் தொகுதிகளில், தலா, 15 பேர் போட்டியிடுகின்றனர். கர்வால் தொகுதியில், ஒன்பது பேர் போட்டியிடுகின்றனர்.மஹாராஷ்டிராவில், மொத்தமுள்ள, 48 தொகுதிகளில், ஏழு தொகுதிகள், முதல் கட்டத்தில் தேர்தலை சந்திக்கின்றனர். இந்தத் தொகுதிகளில், 116 பேர் களத்தில் உள்ளனர்.அருணாச்சல பிரதேசத்தில் உள்ள, இரண்டு தொகுதிகளும், முதல் கட்டத்திலேயே தேர்தலை சந்திக்கின்றன. இங்கு, 12 பேர் போட்டியில் உள்ளனர்.

பெண் வேட்பாளர்


மேற்கு அருணாச்சல் தொகுதியில், ஏழு பேரும், கிழக்கு அருணாச்சல் தொகுதியில், ஐந்து பேரும் உள்ளனர். முதல் முறையாக இந்த மாநிலத்தில், ஒரு பெண் வேட்பாளர் களத்தில் உள்ளார்.அசாமில், மொத்தமுள்ள, 14 தொகுதிகளில், ஐந்து தொகுதிகளுக்கு முதல் கட்டத்தில் தேர்தல் நடக்கிறது. தேஸ்புர் மற்றும் கலியாபோர் தொகுதிகளில், தலா, ஏழு பேரும், ஜார்ஹாட் மற்றும் திப்ருகர் தொகுதிகளில், தலா, எட்டு பேரும், லட்சுமிபுர் தொகுதியில், 11 பேரும் போட்டியிடுகின்றனர். வட கிழக்கு மாநிலமான, மேகாலயாவின் இரண்டு தொகுதிகளுக்கும் முதல் கட்டத்தில் தேர்தல் நடக்கிறது. ஷில்லாங் மற்றும் துரா தொகுதிகளில், ஒன்பது பேர் போட்டியிடுகின்றனர். மணிப்பூரில் உள்ள, இரண்டு தொகுதிகளில், 19 பேர்; நாகாலாந்தில் உள்ள ஒரே தொகுதிக்கு நான்கு பேரும் போட்டியிடுகின்றனர்.
- கே.எஸ்.நாராயணன் -நமது சிறப்பு நிருபர்


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
31-மார்-201909:19:16 IST Report Abuse

Srinivasan Kannaiyaமக்கள் சேவைக்கென்று ஆள்கள் வருவார்களா

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
31-மார்-201909:12:13 IST Report Abuse

Srinivasan Kannaiyaக்ஷண நேரத்தில் முடிவுகள் மாறும்...யார் வந்தாலும் மக்களின் சேவைக்கு நாமம்தான்

Rate this:
blocked user - blocked,மயோட்
31-மார்-201907:25:21 IST Report Abuse

blocked userமக்கள் சிந்தித்து நீண்டகால அடிப்படையில் பொருளாதாரத்தை மேம்படுத்தி சுபிட்சத்தை கொண்டுவரும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்... ஊழலை பிரதானத் தொழிலாக செய்யும் சில கட்சிகளை ஓரங்கட்டுவது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X