பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழகத்தில் ரூ.71 கோடி பறிமுதல்
313 கிலோ தங்கம்; 370 கிலோ வெள்ளியும் சிக்கியது

தமிழகம் முழுவதும், தேர்தல் பறக்கும் படையினர் நடத்தி வரும் வாகன சோதனையில், நேற்று முன்தினம் வரை, 71 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பணம், தங்கம், வெள்ளி, தேர்தல் , அதிகாரிகள்,தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு


லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானதும், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், மூன்று பறக்கும் படைகளும், ஒரு நிலை கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில் பணியாற்றுவோர், எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றப்பட்டு, 24 மணி நேரமும், வாகன சோதனை நடத்தப்படுகிறது.தனி நபர், 50 ஆயிரம் ரூபாய் வரை எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் பணம் எடுத்து சென்றால், உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும்.
ரூ.10 லட்சம்அதேபோல, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டால், வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள் உரிய விசாரணை நடத்துவர் என, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதை மீறி, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும், பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.தமிழகம் முழுவதும், பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர், நேற்று முன்தினம் வரை நடத்திய சோதனையில், 71 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



வருமான வரித்துறையினர், சென்னையில், ஒப்பந்ததாரர் சபேஷன் என்பவர் வீட்டில் நடத்திய சோதனையில், பறிமுதல் செய்யப்பட்ட, 15.90 கோடி ரூபாயும் இதில் அடங்கும். இது தவிர, 313 கிலோ தங்கம் மற்றும், 370 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு, 88.27 கோடி ரூபாய். 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, போதைப் பொருட்களும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லேப்டாப், சேலை, குக்கர், வெளிநாட்டு பணம், பரிசுப்பொருட்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கடந்த, 2014 லோக்சபா தேர்தலின் போது, 25.05 கோடி ரூபாய், 51.83 கோடி ரூபாய் மதிப்புள்ள, இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இம்முறை இதுவரையிலேயே, 71 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தண்டனை


ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். இச்செயல்களில் ஈடுபடுவோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.அதிகபட்சம் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். 2014 லோக்சபா தேர்தலின் போது, தேர்தல் விதிகளை மீறியதாக, 3,716 வழக்ககுள் பதிவு செய்யப்பட்டன. இதில், 2,907 வழக்குகளில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டன. 1,558 வழக்குகளில், குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 810 வழக்குகளில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.'இந்த தேர்தலில், தேர்தல் விதிகளை மீறியதாக, 506 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கியதாக, 833 புகார்கள் வந்துள்ளன. இதில், 37 புகார்களின் மீது, வழக்கு பதிவு

Advertisement

செய்யப்பட்டுள்ளது' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

2ம் தேதி சுனில் அரோரா வருகை

தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, தலைமை தேர்தல் ஆணையர், ஏப்ரல், 2ல், சென்னை வருகிறார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர், சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள், அசோக் லாவசா, சுஷில் சந்ரா ஆகியோர், ஒவ்வொரு மாநிலமாக சென்று, தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில், தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய, நாளை மறுநாள் சென்னை வருகின்றனர்.அன்று மாலை, 4:00 முதல், 5:00 மணி வரை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளை சந்தித்து, அவர்களின் கருத்துக்களை கேட்டறிகின்றனர். பின், தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
ஏப்ரல், 3 காலை, 9:30க்கு, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்.பி.,க்கள் கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டம் முடிந்த பின், மதியம் தலைமை செயலர், போலீஸ் டி.ஜி.பி., - வருமான வரித்துறை அதிகாரிகள், கலால் துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.கூட்டம் முடிந்ததும், மாலை பத்திரிகையாளர்களை சந்தித்து, தேர்தல் ஏற்பாடுகளை ஆணையர்கள் விவரிப்பர். பின், திருவனந்தபுரம் செல்கின்றனர். அவர்கள் தங்குமிடம், கூட்டம் நடக்கும் இடம், பின்னர் அறிவிக்கப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
31-மார்-201912:22:48 IST Report Abuse

Girijaஅத்தனை பணமும் எ டி எம் இல் நிரப்ப வங்கியால் அனுப்பப்பட்டது என்று திருப்பி வாங்கிவிடுவார்கள் . ஏ டி எம் இல் பணம் நிரப்ப நள்ளிரவு நேரம் பாதுகாப்பான நேரமா? தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் பணத்தை எடுத்து செல்வவர்களா? வாகனம் விபத்துக்குள்ளானால் மொத்த பணமுமும் திருட்டு போகுமே ? நாங்க டேங்கர் லாரி கவிழ்ந்து கொட்டுகிற பெட்ரோலை அசால்ட்டாக பக்கெட்டில் பிடிக்கிறவங்க எங்ககிட்டேயா? இந்த தேர்தல் பணியில் ஈடுபட்டு நிறய பேர் கோடீஸ்வர்கள் ஆகப்போவது நிச்சயம்.

Rate this:
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
31-மார்-201909:23:51 IST Report Abuse

 N.Purushothamanகடந்த இரண்டு மாதங்களாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் குறைந்து வருவதாகவும் ,அதற்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வருவதால் சோதனை மிக கடுமையாக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ....

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
31-மார்-201909:08:18 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇதை எல்லாம் நதிகளின் குறுக்கே ஐந்து கிலோமீட்டர் ஒன்று வீதம், தடுப்பணைகள் கட்ட செலவிடலாம்

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X