அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வாக்காளர்களுடன், 'வாக்' சந்திப்பு
ஸ்டாலின் பிரசாரத்துக்கு வரவேற்பு

தீவிர தேர்தல் பிரசாரத்திலும், காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டபடி, ஓட்டு சேகரிப்பதில் இறங்கியுள்ள ஸ்டாலின் பிரசாரத்திற்கு, வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, அதிகாலை பிரசார நேரத்தை அதிகரிக்க, தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர்.

வாக்காளர், வாக் சந்திப்பு,   ஸ்டாலின், பிரசாரம்


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் சத்யா, கிருஷ்ணகிரி லோக்சபா தேர்தலில், காங்., வேட்பாளர் செல்லக்குமார் போட்டியிடுகின்றனர்.இவர்களுக்காக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று காலை ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள, இரு பூ மார்க்கெட்டுகளில் ஓட்டு சேகரித்தார். காலையில் நடைப்பயிற்சி


மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ள ஸ்டாலின், வெளியூர் சென்றாலும், எவ்வளவு வேலைக்கு மத்தியிலும், 'வாக்கிங்' செல்ல தவறியது இல்லை.தற்போது, தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஸ்டாலின், எந்த ஊரில் தங்கியிருக்கிறாரோ அங்கு, நடைப்பயிற்சி மேற்கொண்டபடி ஓட்டு சேகரித்து வருகிறார். இது வாக்காளர்கள் மத்தியில், பிரபலமாகி விட்டது.
அந்த வகையில், நேற்று ஓசூரில் வேட்பாளர்களுடன் நடந்துச் சென்ற ஸ்டாலின், வழி நெடுகிலும் நின்றிருந்த பொதுமக்களிடம், ஓட்டு சேகரித்தார். அப்போது, இளைஞர்கள் பலர், அவருடன் செல்பி எடுத்து கொண்டனர். பெண்கள் சிலர், ஸ்டாலினை சந்தித்து, தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
கோடைவெயில் சுட்டெரிக்க துவங்குவதால், தமிழகம் முழுவதும் காலை, 10:00 மணிக்கு மேல் நடக்கும் கூட்டங்களுக்கு, கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் வருவதில்லை.

Advertisement

கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு, 'கவனிப்பு' காரணமாக வருபவர்கள் தான் அதிகம்.ஆனால், காலையில் மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட், பேருந்து நிலையம், பூங்காக்கள் போன்ற இடங்களில் வாக்காளர்களை எளிதாக சந்திக்க முடியும் என்பதால், ஸ்டாலின் நடத்தும் காலை நேர பிரசாரத்திற்கு வரவேற்பு உள்ளது.இதில், ஸ்டாலினை சந்திக்கவும், அவருடன், 'செல்பி' எடுக்கவும், மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.எனவே, காலை பிரசார நேரத்தை அதிகப்படுத்த, தி.மு.க.,வினர் ஆர்வம் காட்டுகின்றனர். இதை பிற கட்சியினரும் பின்பற்ற துவங்கிவிட்டனர்.- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
07-ஏப்-201903:52:14 IST Report Abuse

meenakshisundaramஸ்டாலின் தமிழக மண்ணில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
31-மார்-201915:57:29 IST Report Abuse

Natarajan Ramanathanதிமுகவினர் நடைபயிற்சி என்றாலே கொலையில் தான் முடியும்.....எதுக்கும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கூட வருபவனே போட்டுத்தள்ளிவிடுவான்.

Rate this:
sathish - melbourne,ஆஸ்திரேலியா
31-மார்-201913:20:47 IST Report Abuse

sathishநடை என்ன ,,,, குட்டி கரணம் போட்டு வாங்க என்றாலும் வர தயங்காத நம்ம அரசியல் வாதிகள் ..போன அஞ்சு வருஷம் எங்கே இருந்தாங்க?? வாரிசுகளை வளர்பதிலேயும்,, காசு பார்ப்பதிலும் ,, காலத்தை ஓட்டி விட்டாங்க....

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X