அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வை அழிக்கும் சக்தியாக மாற வேண்டும்: பெண்களுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

Added : மார் 31, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
திட்டக்குடி: 'கடலூர் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் டிபாசிட் இழப்பார்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.அ.தி.மு.க., கூட்டணியில் கடலூர் லோக்சபா தொகுதி பா.ம.க., வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து, நிறுவனர் ராமதாஸ் திட்டக்குடி, ராமநத்தத்தில் பிரசாரம் செய்து, பேசியதாவது: மத்தியில் மீண்டும் நரேந்திர மோடி தலைமையில், மக்களுக்கான ஆட்சி அமைய உள்ளது. காங்கிரசின் தேர்தல்
 தி.மு.க.,வை அழிக்கும் சக்தியாக மாற வேண்டும்: பெண்களுக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

திட்டக்குடி: 'கடலூர் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் டிபாசிட் இழப்பார்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

அ.தி.மு.க., கூட்டணியில் கடலூர் லோக்சபா தொகுதி பா.ம.க., வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து, நிறுவனர் ராமதாஸ் திட்டக்குடி, ராமநத்தத்தில் பிரசாரம் செய்து, பேசியதாவது: மத்தியில் மீண்டும் நரேந்திர மோடி தலைமையில், மக்களுக்கான ஆட்சி அமைய உள்ளது. காங்கிரசின் தேர்தல் அறிக்கை வரவே இல்லை. அதற்குள் விவசாயிகளுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் தருவோம் என சிலர் கூறுகின்றனர். அதை பெறுவதற்கு அடிப்படைத்தகுதி மாத வருமானம் ஆயிரம் ரூபாய் இருக்க வேண்டும். எனவே, அது சாத்தியமற்றது.

ராகுல் என்று பெயர் வைத்திருப்பவர் சொல்வதெல்லாம் நடக்கும் என்று இங்கே ஒருவர் சொல்லிக் கொண்டு திரிகிறார். வேலிக்கு ஓணான் சாட்சி. ஸ்டாலினுக்கு தமிழக முதல்வரை திட்டவில்லை என்றால் தூக்கம் வராது. 1948ல் ஓ.பி.ஆர்., மதுவிலக்கை கொண்டு வந்தார். 23 ஆண்டுகளுக்குப் பின்பு கருணாநிதி மீண்டும் மதுவை கொண்டு வந்து தமிழகத்தை நாசம் செய்தார்.மதுவால் பாதிப்படைந்துள்ள தாய்மார்கள், நாட்டிற்கு தேவையில்லாத தி.மு.க.,வை அழிக்கும் சக்தியாக மாற வேண்டும்.

தி.மு.க., ஒரு வன்முறை கட்சி. அது நாட்டிற்கு தேவை இல்லை. தி.மு.க.,விற்கு ஓட்டளிப்பது பத்மாசுரன் பெற்ற வரத்தால் அவனே அழிந்துபோனதை போலத்தான். இளைய தலைமுறையினர் இன்று விழிப்புடன் உள்ளனர். கடலூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் டிபாசிட் இழப்பார்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KUMAR. S - GUJARAT ,இந்தியா
02-ஏப்-201911:11:13 IST Report Abuse
KUMAR. S அடுத்த சட்டசபை தேர்தலில் தி மு க வோட கூட்டணிக்கு அச்சாரம் போடும் இந்த ப ம க. கட்சியில் உள்ளவர்களுக்கே தெரியாமல் ஸ்டாலின் வீட்டுக்கு போவார். பேரம் பேசி சீட்டுகள் வாங்கி விட்டு செய்தியாளர்களுக்கு தெரிவிப்பார். இது நடக்கத்தான் போகிறது.
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
31-மார்-201916:29:15 IST Report Abuse
Malick Raja மருத்துவருக்கு மனநலபாதிப்பு வந்தால் வெளிவருத்தில்லை ஆனால் இப்போது ராமதாசுக்கு வெளிவந்துவிட்டது .. ராமதாசுக்கு சில கேள்விகள் 1. முதலில் எந்த திராவிட கட்சிகளுடனும் கூட்டணி எக்காலத்திலும் கூட்டணி இல்லை என்று இப்போது கூட்டணி என்று சொன்னால் சரிதான் .. ஆனால் தாயுடன் கூடுவதற்கு சமம் என்று சொல்லி கூட்டணி போட்டது மன்னிக்கவே முடியாத குற்றம் .. இது ஒரு காரணம் போதும் பாமகவுக்கு பாடைக்கட்ட .. 2.மாற்றம் அன்புமணி ராம்பாதாஸ் என்று சொல்லி . டயர் நக்கி ,ஊழல் பெருச்சாளிகள் சொன்னதுடன் இல்லாமல் கவர்னரிடம் ஊழல் புகார் எழுத்துபூர்வமாக கொடுத்துவிட்டது கூட்டணி போட்டால் யாராவது ஓட்டுபோடுவார்களா ? 3.ஊழல் புஸ்தகம் வெளியிட்டார் பெரியயா .. அது மக்களெல்லாம் படித்துவிட்டார்கள் அதன்பின் கூட்டணி போட்டு மக்களிடம் சென்றால் .. பிய்ந்தல்லவா விடும் .. (தொண்டர்கள் யாரும் செல்வதில்லை ) 4. விஜயகாந்தையும் அவர் குடும்பத்தையும் பற்றி கூறிய கருத்துக்கள் எழுதவே முடியாதது .. அப்படி கீழ்த்தரமான வார்த்தைகள் பிரயோகித்தபின் கூட்டணி போட்டால் குறைந்த பட்ச அறிவுடையோர் வாக்கு அளிக்க முன்வருவார்களா ? 1.
Rate this:
Cancel
murugu - paris,பிரான்ஸ்
31-மார்-201915:10:09 IST Report Abuse
murugu அதுசரி ராமதாஸ் எப்போது DMK உடன் கூட்டுசேர்வதாக உத்தேசம் ?தேர்தல் முடிந்தா ??வெட்கங்கெட்ட மாங்கொட்டை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X