ஆபத்தானது கூட்டணி ஆட்சி: காங்., 'மாஜி' புதுமை தகவல்

Updated : மார் 31, 2019 | Added : மார் 31, 2019 | கருத்துகள் (10)
Advertisement
கூட்டணி ஆட்சி, காங்கிரஸ், காங்., தருண் கோகோய், பா.ஜ., பாஜ, மோடி

வடகிழக்கு மாநிலமான, அசாமில், தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்தவர், மூத்த காங்கிரஸ் தலைவர், தருண் கோகோய்,84. ஆறு முறை, எம்.பி.,யாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்த மாநிலத்தின் முக்கிய முகங்களில், ஒருவரான தருண் கோகோய் அளித்த பேட்டி:

பா.ஜ.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின், 'மகாகட்பந்தன்' எனப்படும், மெகா கூட்டணி அமைக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்?
பா.ஜ.,வுக்கு எதிரான அரசியல் கட்சிகள் அனைத்தும் இணைந்து, மெகா கூட்டணியை அமைக்க முயன்றன. ஆனால், அந்த முயற்சி தோல்வி அடைந்து விட்டது. பல்வேறு கொள்கைகளை கொண்ட கட்சிகள் என்பதால், கூட்டணி அமையவில்லை. மேலும், எந்தக் கட்சியும், விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள முன்வரவில்லை. இதுவே, கூட்டணி அமையாததற்கு முக்கிய காரணம்.






தேர்தலுக்கு பிந்தைய, மெகா கூட்டணி அரசு அமைய வாய்ப்பு உள்ளதா?
கூட்டணி அரசு என்பது எப்போதும் சிக்கலானது, பிரச்னையானது; நாட்டுக்கு அது ஆபத்தானது. கூட்டணி அரசு அமைத்தால், சிறிய கட்சிகளின் நெருக்கடிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். இது அரசு நிர்வாகத்தை பாதிக்கும். அதே நேரத்தில், கூட்டணி அரசு தேவை தான். அதிக தொகுதிகளில் வெல்லும், பெரிய கட்சியின் தலைமையில் ஆட்சி அமைவதற்கு, மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும்.

வரும் தேர்தலில், காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்குமா?
தற்போது, நாட்டில் உள்ள அரசியல் சூழ்நிலையில், காங்கிரஸ், 200 தொகுதிகளில் வெல்லும். தனிப்பெரும் கட்சியாக, காங்கிரஸ் விளங்கும். அரசு அமைவதற்கு, மற்ற கட்சிகள் ஆதரவு அளிக்கும் என, நம்புகிறோம். தற்போதுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒரே நோக்கம், மோடி அரசை வீழ்த்துவது தான். அதனால், மோடி அரசு அமையாமல் இருக்க, மற்ற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்கும்.

நாட்டில், 30 ஆண்டுகளுக்குப் பின், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மதசார்பற்ற கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டதால் தான், ஓட்டுகள் பிரிந்து, பா.ஜ., ஆட்சி அமைந்தது. தற்போதும், எதிர்க்கட்சிகள் தனித்தனியே போட்டியிடுகின்றனவே....
கடந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு, 31 சதவீத ஓட்டுகளே கிடைத்தன. மிகவும் குறைந்த ஓட்டுகள் பெற்றும், ஆட்சி அமைத்த, ஒரே பிரதமர், நரேந்திர மோடி தான்.

காங்கிரஸ் கட்சியை வாரிசு கட்சி என்று விமர்சிக்கிறார்களே...
இது உண்மையில்லை. உண்மையில், காங்கிரசில் தான், முழு ஜனநாயகம் உள்ளது. தற்போதைய தேர்தலிலும், பல கட்சிகளுடன் கூட்டணி அமைக்க, தலைவர் ராகுல் விரும்பினார். ஆனால், மாநில அளவில், கட்சியினர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த கருத்துக்களை ஏற்றே, கூட்டணியை அமைக்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
31-மார்-201921:02:20 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\கூட்டணி அரசு என்பது எப்போதும் சிக்கலானது, பிரச்னையானது. நாட்டுக்கு அது ஆபத்தானது. கூட்டணி அரசு அமைத்தால், சிறிய கட்சிகளின் நெருக்கடிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். இதனை பற்றி எங்களுக்கு நல்லாவே தெரியும் ..........
Rate this:
Share this comment
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
31-மார்-201914:53:09 IST Report Abuse
Gnanam இந்த பெரிய தலைவருக்கு வாரிசு அரசு என்ன என்று தெரியவில்லை. நேரு குடும்பத்தை விட்டால் வேறு தலைமை இல்லையா தலைவரே?
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள்கள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
31-மார்-201912:48:22 IST Report Abuse
மலரின் மகள்கள் S
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X