பிரியமுடன் பிரியங்கா| Dinamalar

பிரியமுடன் பிரியங்கா

Added : மார் 31, 2019
பிரியமுடன் பிரியங்கா

அழகென்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினால் உன் பெயர் கிடைக்கும், அழகை ரசிக்கும் இதயங்கள் எல்லாம் உனக்காகவே துடிக்கும், உன்னை கண்ட கண்கள் எல்லாம் உன் நினைவுகளை பிரியாத வரம் கேட்கும், பிரியமான உன் புன்னகை ஆசை அலைகளை துாண்டும் என வர்ணிக்க தோன்றும் நடிகை சாய் பிரியங்கா ருத் பிரியமுடன் பேசுகிறார்.
* உங்களை பற்றி சொல்லுங்க?
கோவை சொந்த ஊர். சென்னையில் செட்டிலாகி இருக்கிறேன். நிறைய 'டிவி' நிகழ்ச்சிகளில் என்னை பார்த்திருப்பீர்கள். தமிழ் படங்களில் சின்ன, சின்ன கேரக்டர்கள் பண்ணியிருக்கேன். தற்போது 'கேங்ஸ் ஆப் மெட்ராஸ்' படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறேன்.
* இதுவரை நடித்த படங்கள் ?என் முதல் படம் 'சூதுகவ்வும்', அப்புறம் 'மெட்ரோ', 'எனக்கு வாய்த்த அடிமைகள்' படங்களில் நடித்திருக்கிறேன்.
* கேங்ஸ் படத்திற்கு எப்படி தயாரானீர்கள்?சண்டைக்காட்சிக்காக பயிற்சி எடுத்தேன். ஆண்களை விட பத்து மடங்கு அதிகமாக பெண்கள் கோபப்படுவார்கள். பெண்கள் கோபத்தை வெளிப்படுத்தினால் எதிரில் யார் வந்தாலும் கவலைப்பட மாட்டார்கள் என்ற கருத்தை இப்படம் சொல்கிறது.
* இயக்குனர் மற்றும் நடிகர் வேலு பிரபாகரனை அடிச்சிட்டிங்களாமே.?யாரையாவது அடிக்க வேண்டும் என்றால் சும்மா அடிக்க முடியாது; உண்மையாகவே அடிச்சிடுவேன். ஒரு காட்சியில் நானும், வேலு பிரபாகரனுக்கும் நடிக்கும் போது தான் அடிச்சிட்டேன்.
* உடம்பை எப்படி மெயின்டெயின் பண்ண போறீங்க.?நான் ஒரு சோம்பேறி, சாப்பிட்டு நன்றாக துாங்குவேன். படத்துக்காக உடல் எடையை அதிகரிக்க, குறைக்க சொன்னால் நிச்சயம் செய்வேன்.
* நீங்க அடக்கமான பொண்ணா?அடக்கமான 'அல்ட்ரா மாடர்ன்' பொண்ணு. வெளியில் அட்டகாசமாக டிரஸ் பண்ணுவேன். வீட்டுக்குள்ள சாதாரண பெண்ணாக இருப்பேன். பாத்திரம் தேய்ப்பது உள்ளிட்ட எல்லா வேலையும் செய்வேன்.
* அப்படியே லவ் இருந்தா அதையும் சொல்லிடுங்கலவ் இல்லாதவங்க யாரு... என் லவ் பிரேக் அப் ஆயிடுச்சு. இப்போ நான் மட்டும் தான் இருக்கேன்; நோ லவ்.
* நீங்கள் வருத்தப்பட்ட நிமிடங்கள் ?சூட்டிங் ஸ்பாட்டில் நிறைய அசிங்கப்பட்டு இருக்கேன். நிறைய சேனல்ல கூப்பிட்டு போயி மேக்கப் போட்டு ரெடியான பின் அடுத்த லெவல் பிரபலங்களை கூட்டிட்டு வந்து நிகழ்ச்சி பண்ணுவாங்க. அப்போதெல்லாம் நான் ரொம்ப வருத்தப்பட்டு இருக்கேன். ஆனால், இப்போது அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். அதனால் தான் நான் வெறி பிடித்த மாதிரி வாய்ப்பை தேட ஆரம்பித்தேன். 'கேங்ஸ் ஆப் மெட்ராஸ்' நல்ல படமாக அமைந்தது
* அடிதடி ஏதாச்சும் நடத்தி இருக்கீங்களா?பைக்ல போகும் போதே ஒரு சில பசங்க வந்து கலாட்டா பண்ணுவாங்க. ஒரு முறை காதுக்குள் ஒரு பையன் ஊதிட்டு போயிட்டான். பொது இடத்தில் அவனுக்கு நான் கொடுத்த உதையில் பைக்கோட போய் விழுந்தான்.
* பிடித்த ஹீரோ?விஜய் சேதுபதி 'லைவ்'வா நடிக்கிறது பிடிக்கும். தனுஷ் கண்ணிலேயே நடிப்பை காட்டுவார். அஜித், விஜய் என நிறைய பேர் இருக்காங்க.
* பெண் தோழிகள் அதிகமா, ஆண் நண்பர்கள் அதிகம் அதிகமா.?எனக்கு ஆண் நண்பர்கள் தான் அதிகம். என்ன மச்சான் என்று தான் என்னை அழைப்பார்கள். என்னை ஒரு பெண்ணாகவே பார்க்க மாட்டாங்க.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X