பதிவு செய்த நாள் :
பா.ஜ.,வை அய்யப்பன் காப்பாற்றுவார்?
68 ஆண்டு வரலாற்றை உடைக்க அஸ்திரம்

கேரளாவில், 68 ஆண்டு கால லோக்சபா தேர்தல் வரலாற்றில், இந்த முறையாவது ஒரு, 'சீட்'டை பிடிக்க முடியுமா என, பா.ஜ., பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது.

 பா.ஜ.,வை,அய்யப்பன்,காப்பாற்றுவார்?,68 ஆண்டு,வரலாற்றை உடைக்க, அஸ்திரம்

சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதி அளித்த விவகாரத்தை, அஸ்திரமாக ஏவி, பிரசாரத்தை முன்னெடுக்க, பா.ஜ., திட்டமிட்டு உள்ளது.

துளிர் விட்ட நம்பிக்கை



கேரளாவில், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், காங்., கூட்டணி, 12 இடங்களையும், மார்க்சிஸ்ட் கூட்டணி, எட்டு இடங்களையும் பிடித்தது. கேரளாவின், முதல் லோக்சபா தேர்தல், 1951ல் நடந்தது. 68 ஆண்டுகளில், இதுவரை, 16 பொது தேர்தல்கள் நடந்தும், ஒரு முறை கூட, பா.ஜ., வெற்றி பெறவில்லை.ஆனால், கடந்த லோக்சபா தேர்தலில் தான், பா.ஜ.,வுக்கு, இதற்கான நம்பிக்கை துளிர் விட்டது.

அதாவது, திருவனந்தபுரம் தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்ட, ஓ.ராஜகோபால், முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரை விட, 2 சதவீதம் மட்டுமே குறைந்த ஓட்டுகள் பெற்று, தோல்வியடைந்தார்.அதன் பின், 2016ல் நடந்த சட்ட சபை தேர்தலில், ராஜகோபால், பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்டு, எம்.எல்.ஏ., வானார்.சுதந்திர இந்திய வரலாற்றில்,

கேரளாவில், பா.ஜ.,வுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

தற்போது, லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என, பா.ஜ., களத்தில் குதித்துள்ளது. ஆனால், ஓட்டு சதவீத கணக்குகள், பா.ஜ.,வின் கனவை நனவாக்கும் அளவுக்கு இல்லை.கடந்த லோக்சபா தேர்தலில், திருவனந்தபுரம் தவிர மற்ற, 19 தொகுதிகளில், வெற்றி பெற்ற வேட்பாளர்களை விட, பா.ஜ., கூட்டணி, 30 சதவீதம் வரைகுறைந்த ஓட்டுகள் பெற்றிருந்தது.

ஆனால், 2016 சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் ஓட்டு, 4 சதவீதம் அதிக ரித்திருந்தது. இதை வைத்து, ஒரு தொகுதியில் வேண்டு மென்றால் வெற்றி பெறலாம் என, அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

சபரிமலையே துணை



இதற்கிடையே, கேரளாவில் கால் பதிக்கும் முயற்சி யாக, சபரிமலை விவகாரத்தை, பா.ஜ., கையில் எடுத்துள்ளது. சபரிமலையில், பெண்கள் நுழைவதற் கான தடையை, 2018ல் உச்ச நீதிமன்றம் நீக்கியது. இந்த உத்தரவை, ஆளும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக அமல்படுத்தியது. இதற்கு, இந்து மத அமைப்புகளும்,பா.ஜ.,வும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆகம விதிப்படி இது குற்றம் என, அந்த அமைப்புகள் தெரிவித்தன.

இந்த பிரச்னையை மையப்படுத்தி, இந்துக்களின் ஓட்டு சதவீதத்தை இழுக்கலாம் என, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.ஆனால், கேரளா வில் வலுவாகஉள்ள, ஆளும் கட்சியின், இடது ஜனநாயக முன்னணிக்கான ஓட்டுகள் சிதறுமா என்பது சந்தேகமாக உள்ளது. காங்., தலைமையிலான, ஐக்கிய ஜனநாயக முன்னணியும், அதிக செல்வாக்குடன் இருப்பதால், பா.ஜ.,வின்

Advertisement

கணக்கு பலிக்குமா என்பது சந்தேகமே என, அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

சபரிமலை விவகாரத்தால், ஹிந்து மத நம்பிக்கையில் தீவிர மாக உள்ளவர்களில், 5 சதவீத ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், கேரளாவில் பாரம்பரிய இந்து கொள்கைகளை கடை பிடிக் கும், நாயர் இனத்தவரின், 15 சதவீத ஓட்டுகள், பா.ஜ.,வுக்கே கிடைக்கும் என, நம்பப்படுகிறது.

ஆனால், சபரிமலை பிரச்னையின் போது, அரசுக்கு ஆதரவாக ஆளுங்கட்சி அமைத்த, பெண்கள் சுவரில், ஐந்து லட்சம் பெண்கள் பங்கேற்றதால், சபரிமலை விவகாரம் ஓட்டு வித்தியாசத்தை பாதிக்காது என, ஆளுங்கட்சி நம்புகிறது.மேலும், 'ஒக்கி' புயல் மற்றும் வரலாறு காணாத வெள்ளத்தில், மார்க்சிஸ்ட் அரசு செயல்பட்ட விதம், மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளதாக, அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இந்துக்களின் ஓட்டுகள், பா.ஜ., மற்றும் காங்.,குக்கு பிரிந்தாலும், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர் களின், 45 சதவீதம் ஓட்டுகள், தங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என, மார்க்சிஸ்ட் மாநில செயலர், கொடியேறி பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஏப்-201922:19:51 IST Report Abuse

S B. RAVICHANDRANஉண்மை

Rate this:
E.V. SRENIVASAN - Muscat,ஓமன்
01-ஏப்-201919:34:21 IST Report Abuse

E.V. SRENIVASANஅறிவே இல்லாமல் சொல்கின்ற பொய் இது. 1977 க்கு பிறகு தோன்றிய பாஜக எப்படி 68 வருடங்களாக முயற்சிக்கும்? மேலும் ஹிந்து மலையாளிகள் சபரி மலை விஷயத்தால் இந்த முறை மிகுந்த கோவத்தில் உள்ளனர்.

Rate this:
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
01-ஏப்-201917:50:34 IST Report Abuse

Rasheelபெண் உரிமை மற்றும் சிகுலரிஸ்ம் பேசும் காங்கிரஸ் மற்றும் கம்மிஸ்கள் ஐயப்பன் கோவிலுக்கு கொஞ்சம் கூட பக்தி இல்லாத பெண்களை அழைத்து சென்றனர் ஆனால் ஐயப்பனின் பக்தனான வாவர் என்ற முஸ்லீம் பள்ளிவாசலுக்கு அழைத்து செல்லாதது என்ன? இதிலிருந்து தெரிய வில்லையா ஹிந்துக்கள் முட்டாள்கள் என்று நங்கள் செகுலரிஸ் பேசி உங்களை ஏமாறலால் என்று??

Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X