அரசியல் செய்தி

தமிழ்நாடு

'8 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி அபாரம்; புகழ்ந்து தள்ளுகிறார் ராம்தாஸ்

Added : மார் 31, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
கடலுார்:''அ.தி.மு.க., ஆட்சி யில், 8 ஆண்டுகளாக முகம் சுளிக்கிற மாதிரி எதுவும் இல்லை. நான் தேர்தலுக்காக சொல்லவில்லை; தப்புன்னா தப்புன்னு சொல்வேன்,'' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் பேசினார்.கடலுார், முதுநகரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பா.ம.க., வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து, அவர் பேசியதாவது:எம்.ஜி.ஆரின் அரசியல் ஆரம்பம், திண்டுக்கல். கட்சியை அவர், 1973ல்
 '8 ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி அபாரம்; புகழ்ந்து தள்ளுகிறார் ராம்தாஸ்


கடலுார்:''அ.தி.மு.க., ஆட்சி யில், 8 ஆண்டுகளாக முகம் சுளிக்கிற மாதிரி எதுவும் இல்லை. நான் தேர்தலுக்காக சொல்லவில்லை; தப்புன்னா தப்புன்னு சொல்வேன்,'' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் பேசினார்.

கடலுார், முதுநகரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பா.ம.க., வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து, அவர் பேசியதாவது:எம்.ஜி.ஆரின் அரசியல் ஆரம்பம், திண்டுக்கல். கட்சியை அவர், 1973ல் துவக்கினார். அப்போது, ஒரு இடைத்தேர்தல் திண்டுக்கல்லில் நடந்தது. அந்த தேர்தலில் போட்டியிட்டவர், மாயத்தேவர்.அப்போது, 14 சுயேச்சை சின்னத்தை, எம்.ஜி.ஆரிடம் காண்பித்தனர். அதில் அவர் தேர்வு செய்தது தான் இரட்டை இலை. அந்த தேர்தலில் மாயத்தேவர் வெற்றி பெற்றார்.

கடந்த, 1982 ஜூன் 4ல் ஜெயலலிதாவை, கட்சியில் சேர்க்கிறார். சேர்ந்த பிறகு கடலுார் நகரத்தில் நடந்த கூட்டத்தில், 'பெண்ணின் பெருமை' என்ற தலைப்பில், ஜெ.,வை, எம்.ஜி.ஆர்., பேச சொல்கிறார். அதில், ஜெ., அற்புதமாக பேசியதை பார்த்த, எம்.ஜி.ஆர்., அவருக்கு கொள்கை பரப்பு செயலர் பதவியை கொடுக்கிறார். ஜெ.,வின் அரசியல் பயணத்தை தொடங்கி வைத்தது கடலுார் தான். அந்த திண்டுக்கல்லிலும், கடலுாரிலும், பா.ம.க., போட்டியிடுகிறது.தி.மு.க., இந்த தேர்தலோடு, 'குளோஸ்'. கனவு காண்பதற்கு எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவரின் கனவு நடக்காது.அண்ணாதுரை சொல்லியபடி, 50 ஆண்டு கால அத்தியாயம் முடிவிற்கு வருகிறது. அ.தி.மு.க., ஆட்சியில், எட்டு ஆண்டுகளாக முகம் சுளிக்கிற மாதிரி எதுவும் இல்லை. நான் தேர்தலுக்காக சொல்லவில்லை. தப்புன்னா தப்புன்னு சொல்வேன். இவ்வாறு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
07-ஏப்-201909:20:22 IST Report Abuse
chander எட்டு ஆண்டு ஆட்சியில் எட்டு வழி சாலை எட்டாயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து நிக்குது இன்னும் இருந்தால் தமிழ்நாடு சகாரா பாலைவனம் தான்
Rate this:
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
03-ஏப்-201913:49:41 IST Report Abuse
arabuthamilan அதிமுக பாஜக என்ற எசமானர்களுக்கு .... இருக்கு
Rate this:
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
02-ஏப்-201917:11:06 IST Report Abuse
arabuthamilan
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X