அரசியல் செய்தி

தமிழ்நாடு

பணம் கொடுத்தா வாங்காதீங்க : உரக்க சொல்லி கமல் கெஞ்சல்

Added : ஏப் 01, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
திண்டிவனம்: ''அரசியல் கட்சிகள் பணம் கொடுத்தால், தயவு செய்து வாங்காதீங்க,'' என் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.மக்கள் நீதி மையம் கட்சியின் விழுப்புரம் லோக்சபா வேட்பாளர் அன்பின் பொய்யாமொழி,ஆரணி தொகுதி வேட்பாளர் ஷாகி ஆகியோரை ஆதரித்து, திண்டிவனத்தில் அவர் பேசியதாவது:மற்றவர்களை குறை சொல்லி, நாங்கள் ஓட்டு கேட்க வேண்டியதில்லை.எங்களுடைய நிறைகளை
பணம் கொடுத்தா வாங்காதீங்க : உரக்க சொல்லி கமல் கெஞ்சல்

திண்டிவனம்: ''அரசியல் கட்சிகள் பணம் கொடுத்தால், தயவு செய்து வாங்காதீங்க,'' என் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
மக்கள் நீதி மையம் கட்சியின் விழுப்புரம் லோக்சபா வேட்பாளர் அன்பின் பொய்யாமொழி,ஆரணி தொகுதி வேட்பாளர் ஷாகி ஆகியோரை ஆதரித்து, திண்டிவனத்தில் அவர் பேசியதாவது:மற்றவர்களை குறை சொல்லி, நாங்கள் ஓட்டு கேட்க வேண்டியதில்லை.எங்களுடைய நிறைகளை சொல்கிறோம். நாங்கள் நேர்மையாக, உங்களை வந்தடைந்துள்ள கட்சி.மக்கள் நீதி மையம் கட்சி, இப்படி வீறு நடை போடுவதற்கு, உங்களுடைய அன்பு தான்காரணம்.உங்களுடைய தேவைகளை உணர்ந்தவர்களை, வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம். இவர்களுடைய குரல், டில்லியில் ஒலிக்க வேண்டும்.ஒரு புரட்சியின் விளிம்பில், மாற்றத்தின் நுனியில், நீங்கள் நின்றுக்கொண்டு இருக்கின்றீர்கள். நீங்கள் நினைத்தால், தமிழகம் முழுவதும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

ஓட்டுபோட்டு என்ன ஆயிட போவது என்று, இதுவரை ஒதுங்கி இருந்தவர்கள், இனி அப்படி இருக்காதீங்க.எங்களுக்கு ஓட்டுபோட்டு, ஒருவர் பதவிக்கு வந்து, அவருடைய பணி சரியில்லை என்று குற்றச்சாட்டைநீங்கள் முன் வைத்தால், நாங்கள் அதை விசாரிப்போம். உடனே அவர் ராஜினமா கடிதத்தை எங்களுடைய அலுவலத்தில் இருந்து உங்களுக்கு அனுப்பி வைப்பார். இதை எங்களுடைய கட்சியின் உறுதிமொழியாகவே சொல்கிறேன். எங்களிடம் பணப்பட்டுவாடா இருக்காது. ரகசியமாக பெட்டிக்களில் வைத்து, காவல் துறைக்கு தெரியாமல் கையில் வைத்து, அமுக்கும் வேலை இங்கு கிடையாது. 5,000த்துக்கு ஓட்டை கொடுத்தீட்டிங்கனா, அடுத்த ஐந்து வருஷத்தை வித்துடுறீங்க என்று தான் அர்த்தம். அவங்க கொடுக்கும் தொகை, ஐந்து வருஷத்திற்கு அப்படியே வகுத்து, கணக்கு போட்டீங்கனா ஒரு வேளை சாப்பாட்டுக் கூட, அந்த தொகை ஆகாது. தயவு செய்து, அதை புரிந்து கொள்ளுங்கள்.

ஏழ்மையை பயன்படுத்தி, பணத்தை காட்டி அன்றைக்கு வேலையை முடித்து கொள்கின்றனர். அப்புறம் உங்களை கவனிக்க மாட்டாங்க... தயவு செய்து அந்த பணத்தை வாங்காதீங்க... ஐந்து ஆண்டுகள் கழித்து கணக்கு போட்டு பாருங்கள். நாங்கள் அவர்களை விட பல மடங்கு ஆயிரம் உங்களுக்கு கொடுத்து இருப்போம். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.எங்களுடைய பணம் தானே? என்று நீங்கள் கேட்கலாம். அப்படி வாங்கியிட்ட இன்னும் பணத்தை எடுத்து கொண்டு போவாங்க... உங்களுடைய பணத்தை உங்களுக்கு கொடுப்பதாக வைத்துக்கொண்டால் கூட, அவர்கள் எத்தனை சதவீதம் கொடுக்கின்றார்கள் என்பதை சிந்தித்து பாருங்க.அது, 0.01 சதவீதம் கூட கிடையாது. மற்றவை யெல்லாம் தனிப்பட்ட சேமிப்பாக வைத்துக்கொள்கின்றனர்.தயவு செய்து நல்ல கட்சியாக பார்த்து ஓட்டு போடுங்க... ஓட்டு போட, 100 மீட்டர் நடக்கும்போது, நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்துகிட்டு போய், சின்னத்தை தேடுங்க.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
01-ஏப்-201912:04:03 IST Report Abuse
Madheswaran PG நியாயமா பார்த்தால் பத்திரிக்கைகள் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
01-ஏப்-201908:49:14 IST Report Abuse
Girija நீ கருப்பு பணமே வாங்கலைன்னு சத்தியம் பண்ணு முதல்ல , ஆனா நீ செஞ்சாலும் செய்வ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X