அரியலூர் அரசு சுற்றுலா மாளிகையில், அலம்பல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரியலூர் அரசு சுற்றுலா மாளிகையில், 'அலம்பல்'

Added : ஏப் 01, 2019 | கருத்துகள் (1)

அரியலூர்: போதை தலைக்கேறிய நிலையில், -போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்து, வானை நோக்கி ஒன்பது முறை சுட்ட, சிதம்பரம் தொகுதி தேர்தல் பார்வையாளரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை பணியிலிருந்து விடுவித்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் - தனி லோக்சபா தொகுதி, தேர்தல் போலீஸ் பார்வையாளராக, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி ஹேமந்த் கல்சன், 54, நியமிக்கப்பட்டார்.இவர், சில நாட்களாக, அரியலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள, அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியபடி, பணியாற்றி வந்தார்.மது போதைநேற்று அதிகாலை, 1:00 மணியளவில், சுற்றுலா மாளிகையை விட்டு, திடீரென வெளியே வந்த ஹேமந்த் கல்சன், அவ ருக்கு பாதுகாப்புக்கு இருந்த மணிபாலன் என்ற போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்து, வானத்தை நோக்கி, ஒன்பது முறை சரமாரியாக சுட்டுள்ளார். அப்போது, ஐ.பி.எஸ்., அதிகாரி மது போதையில் இருந்துள்ளார்.இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், அரியலூர் கலெக்டரும், சிதம்பரம் லோக்சபா தொகுதி தேர்தல் அலுவலருமான விஜயலட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர்.அரியலூர், எஸ்.பி., சீனிவாசன், பெரம்பலூர், எஸ்.பி., திஷா மிட்டல், அரியலூர், டி.ஆர்.ஓ., பொற்கொடி ஆகியோர், இச்சம்பவம் குறித்துவிசாரித்தனர். ஹேமந்த் கல்சனிடம் நடந்த விசாரணையில், பாதுகாப்பு போலீஸ் ஒருவரின் துப்பாக்கியை பறித்து, ஒன்பது முறை வானை நோக்கி சுட்டதை ஒப்புக் கொண்டார்.வழக்கு பதிவுஇது குறித்து, அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹுவுக்கு தகவல் தெரிவித்தார்.இதையடுத்து, ஐ.பி.எஸ்., அதிகாரி ஹேமந்த் கல்சனை, தேர்தல் பணியில் இருந்து விடுவித்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் குறித்து, போலீஸ்காரர் மணிபாலன் புகாரின்படி, ஹேமந்த் கல்சன் மீது, 'திட்டமிட்டு மற்றவர்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயலில் ஈடுபடுதல்' என்ற சட்டப்பிரிவில், போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

நடந்தது என்ன? சம்பவம் குறித்து, அரியலூர் அரசு சுற்றுலா மாளிகையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூறியதாவது:ஹேமந்த் கல்சன், நேற்று முன்தினம் மாலை, தேர்தல் தொடர்பான வேலைகளை முடித்து, அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார். இரவு, அவர் மட்டும் மது அருந்தினார்.போதை தலைக்கு ஏறியதும், அவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம், 'நான் ஒரு, ஐ.பி.எஸ்., கேடர் அதிகாரி. எங்கள் மாநிலத்தில், எனக்கு எப்படி பாதுகாப்பு கொடுப்பர் என தெரியுமா உங்களுக்கு. இங்கு என்னய்யா பாதுகாப்பு கொடுக்குறீங்க...' என, ஆங்கிலத்தில் குளறியபடி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், 'நீங்கள் வைத்திருக்கும் துப்பாக்கி சுடுமா; டம்மி துப்பாக்கியால் எனக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கிறீர்களா...' எனவும் கிண்டலாகப் பேசினார். அதற்கு நாங்கள், 'இது டம்மி துப்பாக்கி இல்ல சார்; நல்லா சுடும்' எனக் கூற, 'கொண்டு வா நான் பார்த்துச் சொல்கிறேன்' எனக் கேட்டார்.பாதுகாப்பு பணியிலிருந்த மணிபாலன் என்ற போலீஸ்காரர், துப்பாக்கியை தர மறுத்து விலகிச் சென்றார். அவரிடம் மல்லுக்கட்டி துப்பாக்கியைப் பறித்து, ஒன்பது சுற்றுகள் வானத்தை நோக்கி சுட்டார். எங்களை நோக்கி சுட்டு விடுவாரோ என, பயந்து நாங்கள் ஒதுங்கினோம்.இரவு நேரத்தில், துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கவும், அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து பார்த்தனர். பின், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X