சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சூதாட்ட விடுதியில் கொள்ளை: 20 சவரன், ரூ.6 லட்சம், 'அபேஸ்'

Added : ஏப் 01, 2019
Advertisement

புதுக்கோட்டை: புதுகை அருகே, அனுமதியின்றி இயங்கிய சூதாட்ட விடுதியில், மர்ம கும்பல் புகுந்து பணம், நகைகளை கொள்ளையடித்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை, கீரனூர் பஸ் ஸ்டாண்ட அருகே, திருச்சியைச் சேர்ந்த ஒரு நபர், பகிரங்கமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தார். அவரை போலீசார் கைது செய்தபோது, கீரனூர், டி.எஸ்.பி., பிரான்சிஸ் தலையீடு காரணமாக விடுவிக்கப்பட்டார்.கீரனூர் பகுதியில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை, சூதாட்ட விடுதிகள் இயங்கி வருவதாகவும், இதுவரை, போலீசார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், கீரனூர் அருகே, அனுமதி பெறாமல் இயங்கி வந்த சூதாட்ட விடுதியை நோட்டமிட்ட, 10 பேர் கும்பல், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு சூதாட்ட விடுதிக்குள் சென்றுள்ளது. அங்கு இருந்தவர்களை, கத்தி, அரிவாள், இரும்பு கம்பிகளை காட்டி, ஓர் இடத்தில் அமர வைத்துள்ளது.பின், அவர்களிடம் இருந்த தங்க நகைகள், 20 சவரன் மற்றும் அங்கிருந்த, 6 லட்சம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளையடித்து, பைக்கில் தப்பி தலைமறைவாகினர்.சூதாட்ட விடுதியை, கீரனூரைச் சேர்ந்த கண்ணன், 40, என்பவர் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அனுமதி பெறாமல் இயங்கி வந்த சூதாட்ட விடுதியில், கொள்ளை நடந்துள்ளது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இது குறித்து, புகார் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், கொள்ளை கும்பல் குறித்து, போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X